(Reading time: 9 - 18 minutes)

வர்கள் பேசியபடியே மற்ற வேலைகளை முடித்து விட்டு படுக்க செல்ல, நிஷாவோ பயந்தபடி .. .இரவு சரியாக தூங்காமல் மறுநாள் காலை சுராவை எழுப்பி விட்டாள்.

அன்றைக்கு வழக்கம் போல் பயிற்சிகள் முடித்து, முதல் தினம் போல் மதியம் அவர்களின் ட்ரைனிங் வகுப்பிற்கு சென்றனர்.

அன்றைக்கு அர்ஜுன் அவர்கள் இருவரையும் பார்த்தவன்.. ஒன்றும் கேட்காமல் பயிற்சி ஆரம்பித்தான். அன்றைக்கு அவர்கள் batch முழுதும் ஒரு ஹால் இல் கூடியிருந்தனர்.

“இந்த ரெண்டு நாட்கள் நடந்தது வெறும் ரெப்ரெஷ் .. தான்.. நாளையில் இருந்துதான் உங்களுக்கு solders க்கு உண்டான ட்ரைனிங் கொடுக்கபோறோம்.

solders .. first உங்க எல்லாருக்கும் நம்மல காப்பதிக்குறது எப்படின்னு கத்துக்க போறோம். அதாவது .. எந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்தாலும் நாம எதிராளி கிட்ட நம்மள first காட்டிக்க கூடாது.. எதிரியோட பலம் என்னனு பார்த்துகிட்டு நாம போராடனும். எப்படின்னா நாம் ஒரு எதிரி கிட்ட சண்டை போடும்போது அவன் கிட்ட என்ன மாதிரியான ஆயுதங்கள் இருக்குன்னு ஒரு ஐடியா கிடைச்சதுக்கு அப்புறம் சண்டைய ஆரம்பிக்கணும்

இதுக்கு தேவையான பயிற்சிகள் முடிஞ்சதும், உங்களுக்கு தற்காப்பு கலை கற்றுக் கொடுப்போம் .அதுக்கு அப்புறம் ஆயுத பயிற்சி ... கன் ஆபரேஷன் , knife throw இது எல்லாம் சொல்லி கொடுப்போம்.

இது எல்லாம் நடக்கும் போதே உங்கள் ஒவ்வொருவரின் தனி தனி திறமைகளை வைத்து அத நம்ம ஆர்மியில் எந்த இடத்தில தேவைப்படும்ன்னு சொல்லி கொடுத்து அதுக்கு தேவையான தனி பயிற்சிகளும் கொடுக்கப்படும்.

இங்கே இருக்கிற ஐந்து பேரும் ஒவ்வொரு subject லே பெஸ்ட்.. சோ அந்த அந்த விஷயங்கள் டீச் பண்ணுவோம்.”

என்று கூறி மேலும் சில ஆர்மி செயல்பாடுகள் குறித்து வகுப்பு எடுத்தான் அர்ஜுன்.

அன்றைய session முடிந்து, எல்லோரும் கலைந்தனர். முதல் நாள் போல் இல்லாமல் , எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கை கொண்டு வந்து விட்டான் அர்ஜுன். அதனால் அவர்கள் டோர்மிட்டோரி செல்லும் வரை எந்த பேச்சும் கிடையாது.

அங்கே சென்று ரெப்ரெஷ் செய்து விட்டு.. மீண்டும் கான்டீன் சென்றனர். அப்போது அர்ஜுன் மற்றும் அவர்கள் குரூப் உம வந்தனர். பப்பே முறையில் அவர்களே பரிமாறிக் கொண்டு அமர்ந்தனர்.

அர்ஜுன் சுபா , நிஷா இருவரின் அருகில் அமர்ந்தான்.

“ஹலோ.. இன்னிக்கு எப்படி எழுந்தீங்க சுபா, நிஷா?” என்று வினவினான்.

இருவரும் திரு திருவென முழித்தனர்.

“என்ன நிஷா நீதான் எழுப்பின போலே?”

இவர்கள் இருவரும் இது யாருக்கும் தெரியாது என்று எண்ணியிருந்தனர்.

நிஷாவோ “சார் .. அப்போ நிஜமாவே cctv கேமரா இருக்கா ? “

சுபா நிஷாவை கிள்ளினாள். இதை பார்த்து அர்ஜுன் சிரித்தான்.

சுபா மெல்ல “ எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.

அர்ஜுன் மனதில் உன்னை பற்றி தெரியாதா ? என்னை மனசுக்குள்ளே திட்டிட்டு அவள நேரா திட்டி எழுப்ப சொல்லிருப்ப..”

“உங்கள் இருவரின் முழியே காட்டிக் கொடுக்கிறதே.. அதோடு நிஷா இன்று உன்னுடைய performance நேத்து அளவிற்கு இல்லியே. தேவையான ரெஸ்ட் எடுக்காட்டா முக்கியமான நேரத்திலே நம்ம உடல் பலவீனமடையும். அது நம்ம எதிரிக்கு சாதகமாகும்.. “

உடனே சுபத்ரா “கேப்டன்.. அப்போ நான் மட்டும் பலவீனமாகலமா?”

அர்ஜுன் “யார் அப்படி சொன்னா?”

“இல்லை.. எனக்கு யாரும் எழுப்பாம எந்திரிக்க பழக்கம் இல்லியா? அது ரொம்ப கஷ்டமா இருக்கு கேப்டன்?’

“பழகிக்கத்தான் நான் உங்களுக்கு அத punishment அஹ கொடுத்தேன்.. இப்போ நாம எதிரிய நோக்கி போய்கிட்டு இருக்கிற நேரத்திலே பாதுகாப்பான இடம்ன்னு நினைச்சு ரெஸ்ட் எடுப்போம். அப்போ அங்கே தாக்குதல் நடந்தா நாம alert அஹ இருக்க வேணும். சின்ன சத்தத்துக்கு எல்லாம் நாம விழிப்பா இருந்து கண்காணிக்க வேண்டிய நிலை வரும்.. சோ அந்த மாதிரி டைம் லே.. நீ யாரவது வந்து எழுப்புவாங்க ன்னு வைட் பண்ணினால் மொத்தமா நாம காலி. இதுக்கு நீங்க ரெண்டு பேரும் தயாரா இருக்கணும்னு தான் நான் அப்படி சொன்னேன்.

உங்களுக்கு கொடுக்கபடுற தண்டனைகள் கூட உங்கள பக்குவபடுத்தும். அதோட அது எங்கியாவது உபயோகமும் படும்.

உங்கள் back ரெகார்ட் பார்க்கும் போது நீங்க ரெண்டு பேரும் நல்ல talents & தைரியமான பெண்கள்.. அத utilize பண்ண ஆரம்பிக்கணும்.” என்று முடித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.