(Reading time: 9 - 18 minutes)

ரெண்டு பேரும் அவனின் விளக்கம் கேட்டு வியப்பு அடைந்தனர். பிறகு இருவரும்

“சாரி கேப்டன்.. இனிமேல் நாங்க எப்போவும் alert ஆஹ இருப்போம்.. அதோட நீங்க சொல்ற விஷயங்கள எங்களால முடிஞ்ச வரை நன்றாக செயல்படுத்துவோம்.”

“குட்.. இந்த விஷயங்கள் ட்ரைனிங் evaluation லே உங்களுக்கு நல்ல grade கிடைக்கவும் உதவும்” என்று கூறியவன் .. கிளம்பி செல்ல எத்தனிக்க

சுபா சும்மா இல்லாமல் “ஆனாலும் கேப்டன். .ஒரு அலாரம் வச்சதுக்கே இவ்ளோ நீள lecture கொடுக்கறீங்களே.. நீங்க மட்டும் வாத்தியார போயிருந்தா பசங்க நிலைமை என்ன ஆகும்.. ? சும்மா சொல்ல கூடாது .. பின்னி பெடல் எடுத்தீங்க வாத்யாரே..”

இப்போ நிஷா அவளை கிள்ள, அர்ஜுன் அவளை முறைத்து விட்டு சென்றான். ஆர்மி ட்ரைனிங் என்பது ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான். இவர்களின் batch மற்ற பெண்கள் எல்லாம் அவர்கள் superior இடம் பேசவே பயந்தனர் என்றால் , அர்ஜுனிடம் கொஞ்சம் பயமில்லாமல் பேசினார்கள் அவ்வளவே... மற்ற படி அவனும் ட்ரைனிங் போது மிகவும் கண்டிப்பானவன். இது போன்ற சமயங்களில் கொஞ்சம் லிபெரலாக இருப்பான்.

அவன் அவளை முறைத்தனே தவிர, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே “இவ அடங்கவே மாட்டாடா’” என்று எண்ணிக் கொண்டான்.

“அடியே பத்ரகாளி .. உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லியா?”

“எதுக்கு கூஸ் பயப்படணும்”

“கேப்டன் நம்ம superior தானே.. அவர்கிட்ட இப்படி வாயடிக்கிறியே? இது நம்ம evaluation லே பாதிக்காதா?”

“ஹே.. அது நாம தப்பு ஒன்னும் பண்ணலியே.. இது எல்லாம் ஜஸ்ட் fun தான்.. ட்ரைனிங் வந்துட்டா நாம எல்லாம் கலக்கிட மாட்டோம்.  “

“அப்படி இல்லமா.. ஒரு வேளை அவர் நம்மள தப்பா எடுதுட்டார்னா?”

“ஹே.. நம்ம வாத்யார பார்த்தா அப்படியெல்லாம் தெரியல டா .. கொஞ்சூண்டு நல்லவர் தான் போலே..”

“ஹ்ம்ம்.. உன்னை திருத்த முடியாது.. சரி வா போவோம்..” என்றபடி சென்றனர்.

அர்ஜுன் அவன் தங்கி இருக்கும் இடத்திற்கு போகும்போது அவனுடைய batch மேட் ராகுல் ,

“என்ன மச்சான்.. ரெண்டு நாளா உன் நடவடிக்கையே சரி இல்லியே?”

“என்னடா மச்சான் சொல்ற?”

“ஹ்ம்ம்... எலி cat வாக் போகுதுன்னு சொல்றாங்க .. உன்னோட woman’s விங் ட்ரைனிங் பக்கமே உன் பார்வை போறதா உளவு துறை ரிப்போர்ட் வருதே.. என்ன விஷயம்..?”

“ஹேய். .அது எல்லாம் ஒன்னும் இல்லடா.. அந்த சுபாவும், நிஷாவும் நம்ம ஊர் பக்கம்டா.. அதுதான் அவங்களுக்கு கொஞ்சம் guide பண்றேன்.. அவ்வளவுதான்..”

“ஏண்டா.. நான் யாருன்னு சொல்லவே இல்லியே.. ? நீயா வந்து வலையில் மாட்டிக்கிட்டு இருக்க.. ? அதுவும் ..அந்த சுபாவிற்கு நீ guide பண்றியா.. அவ விட்டா நம்ம பிரிகடியர்  கிளாஸ் எடுப்பா.. ..நீ சொல்றது நம்பும் படியா இல்லியே.. இரு இந்த வீக் end .. நம்ம குரூப் conference லே மேட்டர் ஓபன் பண்ணி விடுறேன்..”

“அடேய்... மச்சான்.. விட்டுடா... எல்லார்கிட்டயும் சொல்லி .. என் மானத்த விசா, பாஸ்போர்ட் இல்லாமல் அடுத்த கிரகதுக்கே ஏத்தி விட்டுடுவாங்கடா.. “

“அப்போ வீக் end எனக்கு என்ன மேட்டர் நு சொல்றே.. இல்ல ..செவ்வாய் கிரகத்துலே இருந்து உன்னை கழுவி ஊத்தி memes வரும் பார்த்துக்கோ.. “

“சொல்லி தொலையறேன்.. இப்போ படுக்கலாமா?”

“அப்புறம்.. அவங்க ரெண்டு பேர் முன்னாடி தமிழ்லே பேசாதே.. நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன்னு அவங்களுக்கு தெரியாது..”

“ஒஹ்... இது வேறயா..? மவனே ஒழுங்க இந்த வீக் end எல்லாம் சொல்லல... நீ காலிடி..” என்று மிரட்டினான்.

அர்ஜுன் மனதில் .. நம்ம குட்டி பிசாசு கிட்டேர்ந்து எஸ்கேப் ஆகி வந்தா இவனுங்க கிட்ட மாட்டிட்டோமே .. என்ன பண்ண போறானுகளோ தெரியலியே .. என்று முழித்தான்..

ஹாய் friends.. இந்த கதையில் சொல்ற சில basic விஷயங்கள் மட்டும் நான் verify பண்ணிருக்கேன்.. மத்தபடி அங்க நடக்கிற எல்லாம் என்னுடைய கற்பனைதான்.. சோ.. இப்படி நடக்குமான்னு எல்லாம் லாஜிக் யோசிக்காதீங்க.. எதாவது தவறு இருந்தாலும் மன்னித்து விடுங்கள் மக்களே..

மழை பொழியும்

Episode 03

Episode 05

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.