(Reading time: 11 - 21 minutes)

ன்? இவ்வளவு சந்தேகமா?’ என்று கேட்டார்

' அப்படி இல்லை அங்கிள் நம்முது ன்னு சொன்னதால் அது உங்களது தான் என்று சந்தேகம், அதான் கேட்டேன்' என்றாள்

நமக்கு ஒரு டிரஸ்ட் இருக்கு, அந்த டிரஸ்ட் கீழ் ஹாஸ்பிடல்,ஸ்கூல், அநாதை , வயதானவர்களைப் பராமரிப்பது எல்லாம் இருக்கு அதன் பேர் அனுராதா டிரஸ்ட் ' என்று கூறி ராதாவைப் பார்த்தார்.

அவர்கள் சாப்பிட்டு முடித்தனர். அவர் அவர்களுக்கு ஸ்வீட் என்ன வேண்டுமென்று கேட்டு ஆர்டர் கொடுத்தார், ராதாவிற்கு தானே ஆர்டர் கொடுத்தார். எல்லோரும் சாப்பிட்டதும் கிளம்பினார்கள்.

வந்து காரில் ஏறியவுடன் அவர்களை, அடையாறு வீட்டில விடணும், பேசாமே நம்ம வீட்டிலேயே இருந்திடுங்களேன், ஏன்னா, இத்தனை நேரம் கழித்து நீங்கள் அந்த வீட்டிற்கு போகனும், நாளைக்கு திரும்பி வெளியே போகனும் அதனால் எல்லோரும் நம் வீட்டிலேயே இருக்கலாமே' என்றார்.

ராதா ' நாங்கள் இன்றே போய் விடுகிறோம், நாளைக்கு ஆள் அனுப்பறீங்களா, இன்னும் இருக்கிற திங்க்ஸ் எல்லாம் எடுக்கனும்' என்றாள்

'சுந்தரம் பெரு மூச்சு ஒன்றை விட்டார், சிவாவிடம் திரும்பி ஏற்பாடு செய்துவிடு 'என்றார் , 'சரி' என்றான் சிவா

'சிவா நாளைக்கு பதினோரு மணிக்கு, நம் ஹாஸ்பிடல் போகனும் டாக்டரை பார்க்கனும் என்னோட அப்பாயின்ட்மெண்ட் ஒன்னும் முக்கியமாயில்லையே' என்று கேட்டார்

இருக்கு சார், ஆனால் அது இரண்டு மணிக்குத்தான், நாம் வந்து விடுவோம் அதற்குள் என்றான் சிவா

சரி அப்போ அதைக் கன்சல் செய்ய வேண்டாம், என்று கூறினார்

'இன்னும் என்ன பாக்கி இருக்கிறது கல்யாண வேலைகள்' என்று கேட்டார்?

'நமக்கு நிறைய கூட்டம் இல்லை சார் அதனாலே சாப்பாடு, கோவில் எல்லாம் ஏற்பாடு செய்து விட்டேன். எல்லாம் கான்ட்ராக்ட்டில் கொடுத்து விட்டேன். இன்னும் ஏதாவது செய்யனுமா சார்,' என்றான் சிவா

'இல்லைப்பா உனக்கு எல்லாமே தெரியும் உன் ரெண்டு சிஸ்டர்ஸ்க்கும் கல்யாணம் பண்ணியிருக்க அதனாலே நான் சொல்ல ஒண்ணுமில்லே, 'என்றார் சுந்தரம்

சிவா சிரித்தான்.

இப்படியே பேசிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். எல்லோரும் வீட்டுக்குள் போனார்கள், ராதாவின் அப்பாவும், அம்மாவும் எழுந்து வந்தார்கள், ‘எல்லோரும் சாப்பிட்டு விட்டீர்களா?’ என்று கேட்டார் சாந்தி, ராதாவின் அம்மா.

‘எல்லோரும் சாப்பிட்டு விட்டோம் அம்மா’ என்றாள் ராதா.

சுந்தரம் ராதாவைக் கூப்பிட்டு’ அப்பாவிடம் சொல்லிவிடு நாளைக்கு போகலாம் அந்த வீட்டிற்கு இல்லையென்றால் கல்யாணத்திற்கு பிறகு அந்த வீட்டிற்கு போகலாம் என்று சொன்னார். அப்படியே நாளைக்கு டாக்டரிடம் போகவேண்டும் அதையும் சொல்லிவிடு ‘என்றார்.

ராதா அப்பாவிடம் முதலில் ‘டாக்டரிடம் பேசிவிட்டார் நாளைக்கு ஹாஸ்பிடலுக்கு போகவேண்டும் ,இன்னும் இரண்டு நாளில் கல்யாணம் அதனால் இங்கேயே இருந்து விட்டு பிறகு அந்த வீட்டிற்கு போகலாம் என்கிறார்' என்றாள் ராத

அவள் அப்பாவோ தன் மனைவியைப் பார்த்தார், மனைவியோ 'இவ்வளவு தூரம் நமக்காக இவ்வளவு அக்கறை எடுத்து செய்கிறார், அவர் சொல்ல்வதைக் கேட்போமே' என்றார் சாந்தி

‘நீ சொன்னால் சரி' என்றார்.

ராதாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது, அப்பா, அம்மாவின் அபிப்ராயம் கேட்கிறார், ஒரு வேளை தங்களுக்குத் தெரிந்ததில்லையோ என்னவோ, நான் என்னவோ அம்மாவே பயந்திருக்கிறாள் என்று நினைத்தேன்

'சரிப்பா நான் அவரிடம் சொல்கிறேன், அப்புறம் உங்களுக்கு தூக்கம் வரவில்லையென்றால், வாங்கி வந்த துணிகளைப் பார்க்கிறீர்களா?’ என்றாள்

அதற்கும் அவர் சாந்தியின் புறம் திரும்பினார் அவள் தலை அசைத்ததும் 'சரிம்மா கொண்டு வாங்க பார்க்கலாம்' என்றார்

அவளுக்கு அதுவும் ரொம்ப ஆச்சர்யமாகவே இருந்தது.

அவள் அங்கிருந்து சுந்தரத்தின் ரூமுக்கு சுதந்திரமாக உள்ளே போனாள், அப்போது சுந்தரம் குளித்து விட்டு, டவலுடன் வெளியே வந்தார், அதைப் பார்த்த ராதா, ச்தம்பித்தாள் என்னவென்று தான் பாட்டுக்கு வந்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டு திரும்பி போகப் போனாள், ஆனால் சுந்தரம் 'ராதா இங்கே வா,’ என்று கூப்பிட்டார்

‘இல்லை நான் அப்புறம் வறேன்’ என்றாள்

‘இங்கே வா பயித்தியம் மாதிரி பண்ணாதே’ என்று கூப்பிட்டார்

அவளை அருகே வந்து அவள் கையைப் பிடித்து 'என்ன, என்னைப் பார்த்து வெட்கப் பட்டுக்கொண்டு போறே' என்று அவள் முகத்தை பிடித்து நிமிர்த்தினார்

அவள் அவரை நிமிர்ந்து பார்க்கும் போது அவருடைய பரந்த வெள்ளையான மார்பும் அதிலிருக்கும் ரோமங்களும் பார்த்தவுடன், வெட்கத்தில் முகம் சிவந்தாள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.