(Reading time: 11 - 21 minutes)

ங்கே ...

காலேஜ் விட்டுவந்த கவிதா என்ன மா வீடே மணக்குது அக்கா வீட்டிற்கு போனாயா என்க ...

உன்னோட பிளவுஸ் வாங்கப்போனேன் அப்படியே அவ முருங்கைக்காயும் .. அவரை காயும் கொடுத்தா .. அதுதான் சமைக்கிறேன் .. நீபோய் கைகால் கழுவீட்டு துணி மாத்திட்டு வா ... 

சரிம்மா சாப்பாடு ரெடி தானே ரொம்ப பசிக்குது நான்  சீக்கிரம் வந்து சாப்பிடுறேன் ..

ஓடும் கவிதாவை பார்க்க சந்தோஷமாய் இருந்தது ...

பிரபாவுடன் முதன் முதலில் நடந்த சந்திப்பை மனம் அசைபோடுகிறது ..

அது நல்ல மழைக்காலம் .... காய்ச்சலில் இருந்த கவிதாவுக்கு உடம்பு தூக்கிப்போட ஜன்னி கண்டுவிடும் போல் இருந்தது ..என்ன பண்ணுவது என்று தெரியவில்லை ... அந்த ஊரில் மாட்டுவண்டியும் ஒரு சிலரிடம் பைக் உண்டு ... மற்றபடி பஸ் தான் எல்லோருக்கும் வாகனம் .. இந்த காய்ச்சலில் வண்டியில் வைத்து கூட்டி போகமுடியாது வெளியே அடிக்கும் மழையில் இவள் உயிர் வழியிலே போய்விடும் ...

பக்கத்துக்கு ஊரில் ஒரு டாக்ஸி உண்டு அதை கூப்பிட போன கவிதா அப்பாவும் வண்டி இல்லை என வந்து விட்டார் ... கைவைத்தியம் செஞ்சும் பெரிதாக பயன் இல்லை ..

அப்போதான் பக்கத்துவீட்டு வனஜாக்கா .. ஏப்பா இப்போ புதுசா கோவில் தெரு மாடிவீட்டை வாங்கிட்டு டவுன் ல இருந்து வந்திருக்க புள்ளகிட்ட பிளசர் வண்டி இருக்காம் அந்த புள்ளை வண்டிகூட ஓட்டுமாம் அவசரத்துக்கு கேட்டு பாக்கலாம்ல ??

வேறு யோசிக்க முடியாமல் அவசரமாக குடை எடுத்துக்கொண்டு அர்த்த ராத்திரி என்றும் பார்க்காமல் கதவை தட்ட ... சிறிது நேரத்தில் வெளியே வந்தாள் முதன் முதலில் அவளை பார்த்தவுடனே மனம் கொஞ்சம் நிம்மதி அடைய விஷயம் கூறியவுடன் உள்ளே சென்றவள் சிறிது நேரத்தில் சுரிதார் அணிந்து வந்து கார் எடுத்து கவிக வீட்டிற்கு வந்து அவளை அழைத்துக்கொண்டு டவுன் சென்றார்கள் ..

அவர்களை அங்கு விட்டுவிட்டு வந்த பிரபா மறுநாள் காலை விடியும்போது கஞ்சி மற்றும் இட்லியுடன் வந்து நின்றாள் ...அவளின் அலட்டல் இல்லா தன்மையும் பாசமும் பிடித்துப்போக அவளை இயல்பாய் ஏற்றுக்கொண்டார்கள் .. 

அதன்பின் கவிதாவுக்கு படிப்பில் உதவுவது மற்றும் கல்லூரி தேர்ந்தெடுக்க என அனைத்திற்கும் பிரபா .. முன்னின்றால் .. கவிதாவும் அக்கா அக்கா என இவள் காலை சுற்றியே வருவாள் .......

அதே போல் கவிதா மட்டுமே அந்த வீட்டின் முற்றம் தாண்டி உள்ளே செல்ல கூடிய ஒரே வெளி ஆள் ...

தன்னலம் இல்லாத அவள் குணம் ... எல்லோருக்கும் உதவும் பண்பு ... மற்றவர்கள் பற்றி புறம் பேசாமை இப்படி பல அவளுக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது ... இதோ அவள் வந்து 3 வருடம் ஓடிவிட ஊரும் அவளும் ஒன்றாகி போய்விட்டார்கள் ..

மெல்ல மெல்ல வந்தவன் அவளை பின்னால் இருந்து அவளை அணைக்க ...

பிரபாவின் முகத்தில் மெல்லிய புன்னகை பூத்தது ..கண்ணா வர வர ரொம்ப வால் ஆகிட்டா என்று அவன் கைபிடித்து இழுத்து அவனை அணைத்துக்கொண்டாள் ...எப்படி கண்டுபிடிசீங்க அம்மா என மழலை பேச்சுடன் அவள் மடியில் மாலையாய் விழுந்தான் அவள் மகன் கண்ணன் ...

மகனை கொஞ்சியவள் அவனை அழைத்துக்கொண்டு உடைமாற்றி கைகால் அலம்பி இருவருக்கும் சுண்டலும் எடுத்துக்கொண்டு அவனிடம் கதை பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள் ...

சாப்பிட்டு முடிக்கவும் ... நேரம் ஆனதால் மாடிக்கு போக ... அங்கே பிள்ளைகள் டியூஷன் வர ஆரம்பிக்க அடுத்த 2 மணிநேரம் பறந்து போனது ..

அப்போது அங்கே வந்த கவிதா .. பிரபா பாடம் எடுக்கும் அழகையும்  .. அமைதியாய் கவனிக்கும் பிள்ளைகளையும் கண்டவள் அங்கே இருந்த ரூம்மிற்க்கு சென்று தான் படிக்க ஆரம்பித்தாள் ...

கவிதாவுக்கு பிரபா பார்க்கும்போதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும் ... பிரபா கணவன் வெளிநாட்டில் வேலை செய்கிறான் ... அவன் ஊருக்கு வர நேரம் கிடையாது வருடம் ஒரு முறை கண்ணனும் பிரபாவும் அவனை பார்த்து வருவார்கள் ...

அன்று அவ்வளவு மழையிலும் தூங்கும் கண்ணனை விட்டுவிட்டு பிரபா கார் எடுத்துவந்து தெரிந்ததும் கவிதாவின் அம்மா இவள் காலில்விழப்போனால் .... 

ஊரில் சிலர் ஆரம்ப நாட்களில் பிரபாவை பற்றி தவறாக பேசினாலும் போகப்போக அவளின் நல்ல குணத்தாலும் ... பிறருக்கு முன்னின்று உதவுவதன் மூலம் அதனை மாற்றி இருந்தால் ..

கவிதா மட்டுமே பிரபாவின் கணவன் படத்தை பார்த்துள்ளாள் .... அவர்கள் இருவரின் மணக்கோலம் காணும்போது கண்பட்டுவிடும் என்று  தோணும் ... கண்ணனும் அப்பா .. அம்மா .. சாயலைக்கொண்டு துரு துரு என இருக்கிறான் ....

ஆரம்ப காலத்தில் பிறர் பேசிய பேச்சுக்களை அனாசியமாக கையாண்ட பிரபாவை பார்க்கும்போது கவிதா வாய் பிளந்தது உண்டு ..அதற்க்கு பதிலாய் ...தன்னுடைய எதிர்பார்ப்புக்களை தெளிவுற உரைப்பதற்கே கூட குறைந்த பட்ச நேர்மையும் தன்னம்பிக்கையும் தேவைப் படுகிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.