(Reading time: 11 - 21 minutes)

யாராவது ஒருவர் வீட்டிற்கு நாம் திடிரென செல்ல நேரிடும். அப்பொழுது அவர்கள் காபியா குளிர்பானமா என்று கேட்டால் எதுவாக இருந்தாலும் ஒகே என்று சொல்லிவிட்டு, அவர்கள் பெப்சி பாட்டிலை திறந்து ஒரு டம்ளர் ஊற்றி கொடுத்ததும் குடித்து விட்டு வெளியில் வந்து ஒரு காப்பி போடக்க்கூட அவனுக்கு உடம்பு வணங்கவில்லை என்று கூறுவது தவறு.

அதுபோல யாருடனாவது நாம் அவர்கள் காரில் செல்ல நேரும் பொழுது அவர்கள் நீங்கள் எங்கு இறங்க வேண்டும் எனக் கேட்கும் பொழுது நீங்கள் போகும் வழியில் இறங்கிக் கொள்கிறேன் என்று கூறி ஒரு இடத்தில் இறங்கி விட்டு பிறகு "என்னை பாதியில் இறக்கி விட்டு விட்டான் இன்னமும் கொஞ்ச தூரம் வந்து இறக்கியிருக்கலாம் என்று மற்றவர்களிடம் குறை கூறுவது தவறு."

இது போன்ற முரண்கள் நிகழ்வது ஏன்? இதற்கு தனக்கு என்ன வேண்டுமென்ற தெளிவு இல்லாதது மட்டுமல்ல இவர்களிடம் இதைக் கேட்பதற்கு தனக்கு உரிமையுள்ளாதா இல்லையா என்ற சந்தேகமும் ஒரு காரணம். இந்த சந்தேகத்தின் அடிப்படை தன்னைப் பற்றி ஒருவர் கொண்டிருக்கும் தன்னம்பிக்கை demonstrating yourself என்று சொல்வதுண்டு

தெளிவா இரு.. தீர்க்கமா வெளிப்படையா பேசு.. தவறு என்றால் வெட்கப்படாமல் மன்னிப்புக் கேள்... சரி என்றால் உணர்ச்சி வசப்படாமல் வெளிப்படுத்து அதையும் தாண்டி சுட்டிக் காட்டப்பட்டால் சிரித்து பெருந்தன்மையாய் மற்றவர் பக்கத்தை உணர்ந்து கொள். மீண்டும் தன்னை நிலை நாட்டுவதற்கு முயலாதே..

இப்படி பேசும்போது பிரபாவை கல்லில் செய்தார்களா ??? இல்லை இரும்பில் செய்தார்களா என கவிதாவினுள் பல பல யோசனை வருவதுண்டு ...

இத்தனையும் யோசித்துக்கொண்டு இருந்தது சில நேரம் தான் ..மேடம் என்ன பகல் கனவா ???? என்றவாறு பிரபா உள்ளே வந்தவுடன் கனவு களைந்து நிகழ்காலத்திற்கு வந்து படிப்பில் மூழ்கி போனால் ....

அன்று காலை கண்ணன் சென்றவுடன் பொன்னம்மாவும் பிரபாவும் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது கவிதா வந்தால் .... பிரபா தைத்துகொடுத்த பிளவுஸ் ... அதன் உடனான புடவை என அழகாய் நடந்தவளை காணும்போது தேவலோக கன்னிகை போல் இருந்தது ...

பொன்னம்மா அவளுக்கு திருஷ்டி கழிக்க .... அவசரமாய் உள்ளே சென்ற பிரபா அந்த புடவைக்கு பொருத்தமான அணிகலன்களை கொண்டுவந்து கொடுத்தால் .. கவிதா மறுத்து கூறியதுஎல்லாம் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை ...பிரபாவின் பாசத்தை பார்க்க கவிதாவுக்கு ஆச்சர்யமாக இருக்கும் ... அப்படி தான் செய்த தவம் என்ன என்று புரியவும் இல்லை ...

அங்கே கல்லூரியில் கவிதா எல்லோரும் பேசும் படியும் பொறாமை படும்படியும் இருந்தால் .... ஏழைகளுக்கு உடல் அழகு இயற்கையாகவே அமைந்து விடுகிறது ... அதுபோல் கொடி இடை கொண்டவள் .. நிறமும் நல்ல நிறம் எனவே கவிதா பார்க்கவே ரொம்ப ரொம்ப அழகாய் இருந்தாள் ...

அவள் தோழிகளும் ஏய் உங்க பிரபா அக்கா சூப்பர் டி ... துணி தைக்கிறாங்க .. பாடம் நடத்தறாங்க ... தோட்டம் போடுறாங்க ... அவங்க பையனையும் பார்த்துக்கறாங்க ... மல்டி டேலண்ட் இருக்குது அவங்களுக்கு நீயும் கத்துக்கோ பின்னாடி யூஸ் ஆகும் என்க ... கவிதா சிரித்துக்கொண்டே சாயந்திரம் போனவுடன் அக்காவுக்கு சுத்தி போடணும் ... இவளுங்க கண்ணு பொல்லாதது என எண்ணி சிரித்திக்கொண்டாள் ....

விக்ரம் காரை ஓட்டிக்கொண்டே காலையில் நடந்ததை யோசித்து கொண்டே வந்தான் ... அவனால் இன்னும் நடந்ததை நம்ம முடியவில்லை ... யாரை இனி சந்திக்க கூடாது என நினைத்தானோ யாருடைய நினைவு தன் மனதில் வரக்கூடாது என நினைத்தானோ .. அவளை அவளை பற்றி கேள்விப்பட்டது .. தான் கண்டது அனைத்தும் நிஜமா ... அவளா இப்படி ???? எதையும் சிந்திக்க கூட அவனால் முடியவில்லை ..தலை பயங்கரமாக வலிக்கவே வண்டியை நிறுத்தி ஒரு காபி சாப்பிட்டவன் மீன்டும் பயணத்தை தொடங்கினான் .... 

சிறிது தூரம் கடந்தவுடன் ஒரு பார்க் வந்தது அதனுள் சென்றவன் இருட்டும் வரை எதோ யோசித்துக்கொண்டே இருந்தவன் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் வேட்டை நோக்கி சென்றான் ..

சங்கீ ஒருவகையான குற்ற உணர்வில் இருந்தால் தான் செய்தது சரியாய் தவறா என புரியவில்லை இதனால் ரஞ்சிக்கு என்ன வகையான பிரச்சனை வரும் ... தோழி தன மீது வைத்திருந்த நம்பிக்கை உடைத்தெறிந்ததுபோல் இருந்தது .... 

இப்படி ஒவ்வொருவரும் கலவையான மனநிலையில் இருக்கும்போது ... விதி தனது செகண்ட் இன்னிகிக்ஸ் தொடங்கியது .....

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:997}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.