(Reading time: 16 - 31 minutes)

தியம் சாப்பிட வந்த திலீப், அறைக்கதவு சாத்தியிருப்பதைக் கண்டு தட்ட முயல, விசாலம் அவனை தடுத்தாள்…

“தம்பி தம்பி வேண்டாம் தட்டாதீங்க…”

“ஏன் வேண்டாம்னு சொல்லுறீங்க?...”

“சரயூ தூங்குறா..”

“இந்த நேரத்துலயா?... என்னாச்சு?..”

“என்ன ஆகலைன்னு கேளுங்க… அதுதான் ரொம்ப சரியா இருக்கும்…” என்றவள் நினைவு வந்தவளாக,

“இருங்க தம்பி… இப்போ வந்திடுறேன்….” என விரைந்து சமைலறைக்குள் சென்று அடுப்பில் வைத்திருந்த பொரியலை கிளறிவிட்டுவிட்டு அடுப்பை அணைத்தாள்…

அவள் சமையலறையை விட்டு வெளியே வரவும், திலீப் அவளைத் தேடி கீழேயே வந்துவிட்டான்….

“அடுப்புல பொரியல் இருந்துச்சு… அதான் கீழே வந்தேன் சீக்கிரமா…. முடியலை தம்பி… காலையில இருந்து ஒரே வேலை….”

“எப்பவும் போல வழக்கமான வேலை தான… அதுல என்ன பிரச்சினை?...”

“அது என்னமோ சரிதான்… வழக்கம் போல எல்லா வேலையும் நானே தானே செய்யுறேன்….”

“ஏன் சரயூக்கு உடம்பு சரியில்லையா என்ன?...”

“அவளுக்கு என்னைக்கு உடம்பு நல்லா இருந்துருக்குது… நல்லாவே இருந்தாலும் என்ன வேலையை செய்யவிட்டுட்டு போய் படுத்துப்பா… இன்னைக்கு விசாலம்மா நீங்களே எல்லா வேலையும் செய்யுங்க அண்ணி தூங்கட்டும்னு சுதீப் தம்பி வேற சொல்லிடுச்சு… அப்புறம் எப்படி மறுக்குறது… என்ன பண்ண இந்த வீட்டுல வேலை செஞ்சே தேஞ்சு போகணும்னு என் தலையில எழுதியிருக்குது….”

“சுதீப்பா?... அவன் எதுக்கு அப்படி சொன்னான்?...”

“அவர் சொல்லாம இருந்தா தான் ஆச்சரியம்…. தலைவலிக்குதுன்னா ஒழுங்கா ரூம்ல படுத்து தூங்க வேண்டியதுதான… அதைவிட்டுட்டு ஹாலுக்கு வந்து படுத்தா வீட்டுல இருக்குற மத்தவங்க கண்ணுக்கு அவளுக்கு முடியலைன்னு தெரிய தான செய்யும்?... சுதீப் அந்த பக்கமா வர, உன் பொண்டாட்டி நிக்க முடியாம தள்ளாட கடைசியில தம்பி பிடிச்சு இவளை விழாம காப்பாத்தியிருக்குது… இல்லன்னா கீழ விழுந்து அடிபட்டு தொலைச்சிருக்கும்… நல்லவேளை நான் அங்க இருந்ததால என் கண்ணுக்கு எதுவும் தப்பா தெரியலை… இதே வேற யாராவது பார்த்திருந்தா என்ன ஆகியிருக்கும்?... இதெல்லாம் ஏன் சரயூக்கு தெரியலைன்னு எனக்கு புரியவே மாட்டிக்குது…”

அவள் நடந்ததை எடுத்துக்கூட்டி சொல்ல சொல்ல திலீப்பின் முகம் மாறியது… அந்த முகமாற்றத்தைக் கவனித்துக்கொண்டே,

“உடம்புக்கு முடியலையேன்னு அந்த தம்பி ஹாஸ்பிட்டலுக்கு வர சொல்லுது… இவ வேலை இருக்கு அது இதுன்னு சாக்கு சொல்லி அந்த புள்ளையை கெஞ்ச வைக்குறா… இல்ல தெரியாமத்தான் கேட்குறேன் எல்லா வேலையும் அவளுக்கு நான் செஞ்சு கொடுக்குறேன்… இருந்தாலும் வேலை இருக்குதுன்னு எப்படித்தான் அவளால இப்படி பொய் சொல்ல முடியுதோ தெரியலை… ஹ்ம்ம்… கடைசியில ஒருவழியா வேலை எல்லாம் முடிச்சு வச்சிட்டு ஈவ்னிங்க் போறேன்னு சொல்லிட்டு ரூமுக்குள்ள போய் கதவை சாத்திகிட்டா….” என சொல்லி முடித்தவள்,

“புருஷன் இந்நேரத்துக்கு வருவானே அவனுக்கு சாப்பாடு கொடுக்கணுமேன்னு எண்ணம் கொஞ்சமாச்சும் இருக்கா?... ஹ்ம்ம்… இப்படியும் பொண்டாட்டி இருக்கதான செய்யுறா இந்த வீட்டுல அதிசயமா….” என தெளிவாய் முணுமுணுத்துக்கொண்டே போனவள்,

“அதுசரி… இவ புருஷனை மதிச்சா தான புருஷன் ஆசையை மதிக்குறதுக்கு… எல்லாம் இந்த வீட்டைப் பிடிச்ச நேரம்…” என அவனுக்குக் கேட்கும்படி புலம்பிக்கொண்டே

““நீங்க வாங்க தம்பி.. நான் சாப்பாடை எடுத்து வைக்குறேன்….” என திலீப்பை அழைக்க, அவன் எதுவுமே சொல்லாமல் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்…

தலைவலியில் படுத்து உறங்கி போனவள், விழித்த போது மணி 4 எட்ட இருந்தது…  இன்னும் திலீப் வீட்டுக்கு வரலையா?... வந்தா எழுப்பியிருப்பாரே என்ற எண்ணம் வந்ததுமே அவனுக்கு அவள் போன் செய்ய, அழைப்பு போய்க்கொண்டே இருந்ததே தவிர அவன் எடுத்தபாடில்லை….

மீண்டும் மீண்டும் அவள் முயற்சிக்க, அதே நிலைமை தான் மறுபடியும்….

“ஏன் எடுக்கமாட்டிக்குறாங்க….” என்ற யோசனையுடன், அவள் ஹாலுக்கு வந்த போது, சண்முகம் வந்தார்…

பிள்ளைங்களை ஸ்கூலில் இருந்து கூட்டிட்டு வந்தபிறகு, கோவில் பூஜைக்கு செல்ல விரும்புவதாக அவர் கூற, அவளும் சரி என்றாள்…

பிள்ளைகளையும் உடன் அழைத்து சென்றுவிட்டு நண்பனின் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் வருவதாக கூற அவளும் மறுக்காமல் சரி என்றாள் புன்னகையுடனே…

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சுதீப் வெளியே கிளம்பி போனான்… நைட் படம் பார்த்துட்டு தான் வீட்டுக்கு வருவேன்னு சொன்னான்மா.. அதனால நைட்டுக்கு திலீப்புக்கும் உனக்கும் மட்டும் சமைக்க சொல்லியிருக்கேன் விசாலத்துகிட்ட… திலீப் வந்ததும் நீ அவனை கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் போயிட்டு வாம்மா… சரியா?...” என்றவர் மருமகள் சரி என்றதும் புறப்பட்டு சென்றார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.