(Reading time: 16 - 31 minutes)

லைவலி எல்லாம் தூங்கி எழுந்ததில் சரியாகி இருக்க, அவள் திலீப்பிற்காக காத்திருந்தாள்…

அவன் வருவதற்கான அறிகுறியே இல்லாது போக, போனும் செய்து பார்த்தாள்… ஆனால் பதில்தான் இல்லை…

பத்து மணி வரை பொறுமையாக காத்திருந்தவள், அதன் பின் மெல்ல எழுந்து சமையலறை நோக்கிச் சென்று விசாலத்தைப் பார்த்தாள்…

“நீங்க சாப்பிட்டீங்களா?...”

“இல்ல...”

“ஏன்?.... நேரமாச்சே…. ஏன் சாப்பிடாம இருக்கீங்க?...”

“தம்பி வருமே… அதான்….”

“அவர் வந்தா சாப்பாடை நான் வச்சி கொடுத்துக்குறேன்… நீங்க சாப்பிட்டுட்டு தூங்குங்க…”

“இல்ல நீயே முடியாம இருக்குற… அதான்…”

“பரவாயில்லை… நான் பார்த்துப்பேன்… நீங்க போங்க…”

“இல்ல இருக்கட்டும் சரயூ… தம்பி வரட்டும்… எனக்கும் தூக்கம் வரலை…”

அதற்கு மேலும் விசாலத்தை வற்புறுத்த விரும்பாது, அமைதியாக சோபாவில் வந்தமர்ந்தாள் சரயூ…

“தலைவலி எப்படி இருக்கும்மா உனக்கு?...”

‘இப்போ பரவாயில்லை…”

“ஹ்ம்ம்… நீ அசந்து தூங்கிட்ட… பாவம் தம்பி வந்துச்சு… உன்னை கேட்டுச்சு… நீ உடம்பு சரியில்லாம தூங்குறன்னு சொன்னேன்… அப்படியே வாடிப்போய் வெளியே போயிடுச்சு…”

விசாலம் சொன்னதும் தூக்கிவாரிப்போட நிமிர்ந்தவள்,

“அவர் எப்போ வந்தார்?... என்னை எழுப்பியிருக்கலாம் தான? சாப்பிட்டாரா இல்லையா?..”

“அதுசரி… புருஷன் வருவானேன்னு அக்கறை இல்லாம நீ தூங்கிட்டு இப்போ சாப்பிட்டானா இல்லையான்னு கேட்குற?... பாவம் புள்ளை மூஞ்சி வாடிப்போச்சு… உன்னையும் குறை சொல்லித்தான் என்ன ப்ரயோஜனம்?... எதாவது உடம்புக்கு வந்துட்டே தான் இருக்குது… பாவம் திலீப் தம்பிக்கு உன்னை கட்டிவச்சு தம்பி வாழ்க்கையே வீணாப்போச்சு…”

சட்டென விசாலத்தின் நஞ்சான வார்த்தைகளில் அதுவரை பொறுத்துப்போன சரயூ வெடித்தாள்…

“என்ன வீணாப்போச்சு?... அவ்வளவு அக்கறை இருந்தா நீங்களே வேற ஒரு பொண்ணை பார்த்து கட்டி வச்சிருக்க வேண்டியது தான?...”

அவளின் வார்த்தைகளில் விசாலத்திற்கும் மனதினுள் இருந்த வஞ்சம் தலைதூக்கியது….

“இந்த வெட்டிப்பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… உடம்புல இருந்து எல்லாத்துலயும் குறையை வச்சிட்டு நீயெல்லாம் பேசாத சரியா?...”

விசாலத்தின் உதாசீனப் பேச்சில் கொதித்தெழுந்தாள் சரயூ…

“யாருக்கு குறை?... எனக்கா?... என்ன பேசுறோம்னு கொஞ்சம் தெரிஞ்சு பேசுங்க… சொல்லிட்டேன்…”

கோபம் கொப்பளிக்க அவள் பேச,

“நீ குறை இல்லாதவன்னு வெளியே சொன்னா ஊரே காரி துப்பும்… இப்போ மட்டும் என்ன துப்பாமலா இருக்குது?... அதான் உன் விஷயம் தான் ஊரறிஞ்ச ஒன்னாச்சே…”

“போதும்… நிறுத்துங்க… இதுக்கு மேல எதாவது பேசினீங்க நல்லா இருக்காது….” என சரயூ கத்த,

“என்னடி செய்வ?.. என்ன செய்வ?... ஆயிரம் தான் நீ கத்தினாலும் உண்மை அது தான்… உங்கிட்ட குறையை வச்சிகிட்டு அடுத்தவங்க மேல ஏண்டியம்மா பாயுற?...”

“வேண்டாம்… போதும்… உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து பேசாம இருக்கேன்… இதோட நிறுத்துகிட்டா உங்களுக்கு நல்லது…”

சரயூ கோபமாக பேசிக்கொண்டிருப்பது அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்த திலீப்பிற்கு கேட்டது…

“என்னடி நல்லது?... என்ன நல்லதை நீ இந்த குடும்பத்துக்கு செஞ்ச?... நான் சொன்ன பொண்ணை திலீப்க்கு கட்டி வச்சிருந்தா இந்நேரம் இந்த குடும்பத்துக்கு இப்படி ஒரு அவப்பேரு கிடைச்சிருக்குமா?...”

“இப்போ மட்டும் என்ன ஆச்சு?... கட்டி வைங்களேன்… கட்டி வச்சு உங்க ஆசையை முடிஞ்சா தீர்த்துக்கோங்களேன்…. நானாவது நிம்மதியா இருப்பேன்…”

கோபத்தில் தனது மன வருத்தத்தை அவள் வார்த்தைகளில் சிதறவிட, அந்த நேரம் சரியாக உள்ளே வந்தான் திலீப்…

அவன் வந்ததும் அதிர்ச்சியாகி அவள் நின்றாள் என்றால், அவளை விட அவள் சொன்ன வார்த்தைகளில் அதிர்ச்சியாகி நின்றிருந்தான் அவன்…

இருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்த விசாலம், சட்டென அழுதுகொண்டே, திலீப்பின் அருகே சென்று,

நடந்த நிகழ்வை அப்படியே மாற்றி போட்டு சொல்ல, அவன் கல்லென நின்றிருந்தான்…

“புருஷன் ஆசையை நிறைவேத்துன்னு சொன்னதுக்கு என்ன மரியாதை இல்லாம பேசுறா தம்பி… குடும்பத்துக்கு வந்த அவப்பேரை மாத்த முயற்சி பண்ணுன்னு சொன்னா என்னால முடியாதுன்னு சொல்லுறா தம்பி….”

“கோபத்துல நானும் உங்களுக்கு வேற பொண்ணை கட்டி வச்சிருந்தா இந்நேரம் எந்த அவப்பேரும் வந்திருக்காதுன்னு சொன்னா, சரி செஞ்சிருக்க வேண்டியது தான… நானாச்சும் நிம்மதியா இருப்பேன்னு சொல்லுறா தம்பி…. என்னால அத தான் தாங்கவே முடியலை…”

கண நேரத்தில் கொடூர மனதுள்ளவளாக மாறிய விசாலம் திலீப்பிடம் இல்லாததும் பொல்லாததுமாக சொல்ல, அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றான்…

அவனது முகமாற்றத்தை கவனித்தவள், அவனருகே வந்து தன்னிலையை விளக்க முற்பட, அவன் கையமர்த்தி தடுத்தான்…

“இப்போ மட்டும் என்ன கெட்டுப்போச்சு?... நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறேன்… என்னால யாரும் நிம்மதி இல்லாம இருக்க வேண்டாம்….”

பட்டென அவனும் சொல்லிவிட, அப்படியே உறைந்து போனாள் சரயூ…

எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ தெரியாது… சட்டென சுயநினைவுக்கு வந்தவள்,

“வாய்தவறி அப்படி சொல்லிட்டேங்க… ப்ளீஸ்… அதை பெரிசு படுத்தாதீங்க…” என கை கூப்பி இறைஞ்ச,

“இல்ல உன் நிம்மதியை பறிச்ச பாவம் எனக்கெதுக்கு?...”

“அய்யோ இல்லங்க…” என கதறியவள், அவனிடம் கெஞ்ச அவன் சற்றும் மசியவில்லை…

“ப்ளீஸ்… பேசுங்க… இப்படி அமைதியா இருக்காதீங்க…”

விழிநீர் வழிய சொன்ன மனைவியை ஏறெடுத்துப்பார்த்தவன்,

“சரி அப்போ சொல்லு… சம்மதம்னு சொல்லு… நீ சொன்ன எல்லாத்தையும் மறந்துடுறேன்…” எனவும் அவள் கல்லாகி போனாள்…

“சொல்லுடி… சரின்னு சொல்லு… இப்பவே எல்லாத்தையும் மறந்துடுறேன்…”

“…………………”

அவன் கேட்க கேட்க, சிலையாக நின்றாள் அவள்…

“முடிவா கேட்குறேன்… உன்னால முடியுமா முடியாதா?...”

அவன் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்லுவாள்…?... எதுவும் பேசாமல் அவள் அமைதியாய் இருக்க,

“நீ பதில் பேசமாட்ட… என்னைக்கு நீ பதில் சொல்லுறீயோ அன்னைக்கு இந்த வீட்டுக்குள்ள வா… அதுவரை வராத… வெளியே போ…..”

ஆத்திரத்தில் அவன் கத்த, அவள் அவன் சொன்ன வார்த்தைகளிலேயே நின்றாள் அதிர்ச்சியாகி…

“திலீப்…………………………..” அவள் குரல் அதிர்ந்து ஒலிக்க,

“நானே தான்… எனக்கு என்னைக்கு ஒரு பையனை பெத்து கொடுக்க உனக்கு மனசு வருதோ அன்னைக்கு இந்த வீட்டுக்குள்ள வா…”

அவள் ஊமையாகி நிற்கும்போதே, அவள் கைப்பிடித்து இழுத்து வீட்டிற்கு வெளியே அழைத்துப்போனான் அவன்….

ஹாய்… ப்ரெண்ட்ஸ்…

இத்தனை நாள் சொல்லாம இருந்த பிரச்சினையை இந்த எபிசோட்ல சொல்லிட்டேன்…

ஹ்ம்ம்... எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்…

படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க… மறக்காம…

பை… பை… நெக்ஸ் வீக் அகெய்ன் மீட் பண்ணலாம்…

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.