(Reading time: 19 - 38 minutes)

'து.......' என பரத் தான் நினைத்ததை சொல்ல

'எக்ஸாக்ட்லி...' அழகாய் சிரித்தான். விஷ்வா  'நீ இதை எதிர்பார்க்கலை இல்ல..'

'இல்லடா...' குளிர் புன்னகை பரத்திடம். மறுபடியும் ஒரு முறை  அஸ்வினியை பார்த்தான் பரத். 'வீட்டிலே இருந்து யாரும் வரலையாடா???'

இப்போதான் 'சொல்லி இருக்கேன். வராங்க....' என்றான் அவன் முகம் பார்த்தபடியே 'எனக்கு தான் முதலிலே போனே வந்தது. சரி அவங்களுக்கு எதுக்கு டென்ஷன் பார்த்திட்டு சொல்வோம்ன்னு நான் மட்டும் கிளம்பி வந்திட்டேன்.

மயக்கம் கொஞ்சம் தெளிந்திருக்க இருவரையும் மாறி மாறி பார்த்திருந்தாள் அஸ்வினி.

'ஹேய்... குரங்கு... சொன்னா கேட்டதானே... ஒரு இடத்திலே இருக்காம எப்போ பாரு தாவிக்கிட்டு... இப்போ பாரு  எப்படி வந்து படுத்திட்டே... இனி வண்டியை தொடு உனக்கிருக்கு.. உன்னாலே எல்லாருக்கும் டென்ஷன் இப்போ... .' என்றான் விஷ்வா.

'ஆமாம் நீங்க எல்லாரும் எதுக்கு டென்ஷன் ஆகலை. ஒவ்வொரு நாள் டென்ஷன் ஆக ஒண்ணும் விஷயமே இல்லைன்னு டென்ஷன் ஆகுற கூட்டம் நீங்க எல்லாரும்...' உள்ளுக்குள் சொல்லிக்கொண்டாள் அஸ்வினி. வாய் திறந்து பேசிவிட சக்தி இல்லை அப்போது.

ஆனாலும் நிஜம்தான் அவன் சொல்வது. ஒரு நிமிடத்துக்கு மேல் ஓரிடத்தில் நின்று அவளுக்கு பழக்கமே இல்லை. இங்குமங்கும் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கு. அதனாலேயே அவள் தேர்ந்தெடுத்தது ஏர் ஹோஸ்டஸ் வேலையை. அவள் இப்படி படுத்திருப்பது இதுவே முதல் முறை.

வீட்டில் யாருக்குமே அவள் இந்த வேலையில் சேர்வதில் உடன்பாடு இல்லை தான். அவளது விமான நிறுவனத்தின் தலைமை இடம் பெங்களூர் என்பதால் அவள் இங்கே தங்க வேண்டியதும் அவசியம். அதிலும் வீட்டில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லைதான்.

'நீங்க கவலை படாதீங்க அஸ்வினி. உங்களுக்கு நான் ஒரு கார் வாங்கி தரேன். நீங்க இனிமே கார் ஓட்டுங்க. வண்டி வேண்டாம்...' பரத் சொல்ல...

'ஹேய்...' உற்சாகமாக சிரித்தாள் அஸ்வினி. அவன் யாரென்ற கேள்வியான பார்வையும் அவளிடத்தில்.

'டேய்..... .டேய்... டேய்... அக்கிரமம்டா... நீ இதுவரைக்கும் எனக்கு ஒரு சாக்லேட் கூட வாங்கி தந்ததில்லை. நேத்து காபி கூட என் செலவு... அவளுக்கு அள்ளி விடறதை பாரு...' விஷ்வா புலம்ப பரத் சிரிக்க...

'யாரு விஷ்வா இது???" என்றாள் அஸ்வினி சற்று மெலிதான குரலில்.

'பரத்...' என்றான் பரத் முந்திக்கொண்டு.

'பரத்!!!' அவள் முகம் சட்டென மலர்ந்தது. 'விஷ்வா சொல்.. லுவான் உங்...களை பத்தி நி...றைய' என்றாள் மெல்ல. 'உங்களை பார்க்கணும்னு நி...னைச்...சேன்' சொல்லி முடிப்பதற்குள் மூச்சு வாங்கியது அவளுக்கு.

'நீங்க ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க... அப்புறம் பேசலாம் நாம...'  பரத் சொல்ல புன்னகைத்தாள் அஸ்வினி.

பரத்தை பற்றி அவளிடம் நிறைய சொல்லி இருக்கிறான் விஷ்வா. அதையெல்லாம் கேட்கும் போதே அவன் மீது நிறையவே மதிப்பும், அவனை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் அவளுக்கு தோன்றியது நிஜம். இப்போது அவனை பார்த்த பிறகு அந்த மதிப்பு இன்னமும் அதிகமானது போலவே தோன்றியது அவளுக்கு.

'அனி... உனக்கு ஒரு சீக்ரெட் சொல்றேன்... இந்த பரத் இருக்கானே பரத்... நம்ம அப்புவை தாறு மாறா லவ் பண்றான் தெரியுமா உனக்கு???' சொல்லியே விட்டான் விஷ்வா.

'பேச இயலவில்லை என்றாலும் பெரிதாக மலர்ந்த அவள் முகம் அவளது சந்தோஷத்தை வெளிப்படுத்தியது..

'ஹேய்... ரிய...லி??? அப்புவுமா??? அவள் தொனியில் நிறையவே ஆர்வம் சேர்ந்திருக்க

'சும்மா இரு விஷ்வா...' அவன் அடுத்து பேசுவதற்குள் தடுத்தான் பரத். 'அதெல்லாம் ஒண்ணுமில்லைமா... யூ டேக் ரெஸ்ட். நாங்க அப்புறம் வரோம்...' விஷ்வாவை இழுத்துக்கொண்டு வெளியே வந்து விட்டிருந்தான் பரத்.

அவர்கள் வெளியே வந்த நேரத்தில்தான் காரிலிருந்து இறங்கி மருத்துவமனைக்குள் நுழைந்தனர் அந்த மூவரும். அவர்களை பார்த்துவிட்டு சட்டென எழுந்து விட்டான் அங்கே அமர்ந்திருந்த அருண்!!!

எதிர்பார்த்திருந்தான் பரத்!!! அவர்கள் இருவரும் தான் வரக்கூடும் என தெரியும் அவனுக்கு. ஆனால் அவன் எதிர்ப்பார்க்காதது அவர்களுடன் வந்த அந்த மூன்றாம் நபரை. அவர் விஷ்வாவின் அப்பா!!!

ஸ்தம்பித்து போனவனாக நின்று விட்டிருந்தான் பரத். அவரை பார்த்து சில ஆண்டுகள் ஆகி விட்டதே!!!.

மற்ற இருவருக்கும் முன்னால் அவர்தான் நடந்து வந்தார். அவர் நேராக வந்து நின்றது விஷ்வாவிடம். அவரிடம் நிறையவே பதற்றம். அதனாலேயே விஷ்வாவின் அருகில் நின்றிருந்த பரத்தை கவனிக்கவில்லை அவர். ஆனால் இமைக்க மறந்திருந்தான் பரத். அவரை விட்டு விழி அகற்றவில்லை அவன்.

இத்தனை ஆண்டுகளில் தலை இன்னும் அதிகமாக நரைத்திருக்க, உடல் சற்றே  பூசினார் போல் ஆகி இருக்க, அவரது கம்பீரம் இன்னமும் கூடி இருந்ததை போலவே தோன்றியது பரத்துக்கு.

இவரை இனி வாழ்க்கையில் பார்க்கவே போவதில்லை, ஏன் சில நேரங்களில் பார்க்கவே கூடாது என்று கூட  நினைத்திருக்கிறான் அவன். ஆனால் இன்று???  அவரை பார்த்த மாத்திரத்தில் அவர் மீதிருந்த வருத்தங்கள் எல்லாம் காணமல் போய்விட்டதை  போன்றதொரு ஒரு உணர்வு அவனுக்கு.

'என்னாச்சுடா விஷ்வா...' என்றார் அவர். 'இப்போ அஸ்வினி எப்படிடா இருக்கா???

'அவளுக்கு ஒண்ணுமில்லைபா இப்போ. கண் முழிச்சிட்டா..' சொன்னான் விஷ்வா.

'நீ திடீர்னு போன் பண்ணவுடனே ஒண்ணுமே புரியலை யாருக்கும். அதுதான் மூணு பெரும் நம்ம கார்லே கிளம்பி வந்துட்டோம்..'

'ம்... ' என்றான் விஷ்வா. அவன் பார்வை இப்போது பரத்தின் மீதிருக்க மெல்ல திரும்பினார் விஷ்வாவின் அப்பா வரதராஜன்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.