(Reading time: 19 - 38 minutes)

ன்னதான் அவளை அருணுக்கு விட்டுக்கொடுத்து விட வேண்டும் என்று அவனது அறிவு அவனுக்கு கட்டளை இட்டுக்கொண்டிருந்தாலும்,

அவனது மனதின் மறைவான பிரதேசம் 'இவள் என் கண்ணம்மாதானே... இன்று நான் இப்படி தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் அவள் தானே??? அவளை நான் எப்படி விட்டு தருவதாம்??? என கூவிக்கொண்டிருந்தது நிஜம்.

அவனையே பார்த்திருந்தார் அவள் தந்தை. இப்போது மனதின் பதற்றம் கொஞ்சம் குறைந்திருக்க... அவனது முகம் எங்கேயோ பார்த்த முகமாக தோன்றியது அவருக்கு. ஆனால் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை அவர்.

அபர்ணாவை பார்த்து 'நான் கிளம்புகிறேன்..' என்பதாக அவன் சின்னதாக தலை அசைக்க சுறுசுறுவென பொங்கியது அருணுக்கு.,

அவளது தந்தையை பார்த்து 'நான் வரேன் அங்கிள்...' என்று பரத் சொல்லி முடிப்பதற்குள் ஒலித்தது அருணின் குரல். 

'அங்கிள்..... கொஞ்ச நேரம் முன்னாடி நீங்க எனக்கு ஒரு வரம் தரேன்னு சொன்னீங்க  இல்லையா? அந்த வரத்தை இப்போ கேட்கிறேன். உங்க பெரிய பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா?' கேட்டே விட்டான் அருண்.

வேறொன்றும் இல்லை!!! அவசரம்!!!. பரத்தின் எதிரில் அவள் தன்னவள் என்பதை உறுதி செய்துவிடும் அவசரம் மட்டுமே அவனிடத்தில். அங்கே இருந்த  அனைவருக்குமே அதிர்ச்சி. அவன் அப்படி சட்டென கேட்டு விடுவான் என அபர்ணாவே எதிர்ப்பார்க்கவில்லை.

'அபர்ணாவையா???' கொஞ்சம் திகைத்து போனவராக கேட்டார் அப்பா.

'ஆமாம் அங்கிள்.. நாங்க ரெண்டு பெரும் ஒண்ணா வேலை பார்க்கிறோம். ஒருத்தரை ஒருத்தருக்கு நல்லா தெரியும். உங்க பொண்ணையே கேளுங்க என்ன சொல்றான்னு...'

அவள் பக்கம் திரும்பினார் அப்பா. மகளின் முகம் பார்த்த போதே இதில் அவளுக்கு சம்மதம் என புரிந்து போனது தந்தைக்கு.

'என்னமா என்னென்னமோ சொல்றார் உன் ஃப்ரெண்ட்.. உனக்கு பிடிச்சிருக்கா அருணை???' கேட்டே விட்டார் அப்பா.

'பிடிச்சிருக்குபா..' சொல்லியே விட்டாள் மகள். அப்பாவின் இதழ்களில் சின்னதாக ஒரு புன்னகை ஓட்டம். அருண் கண்களில் வெற்றிபார்வை. அதே நேரத்தில் அங்கே மற்றொரு இதயம் துண்டு துண்டாக உடைந்து நொறுங்கிக்கொண்டிருந்தது.

'இதெல்லாம் நடக்கும் என தெரிந்ததுதான். ஆனாலும் என் கண் முன்னாலேயே நடக்க வேண்டுமா???' அவன் உயிர் துடித்துக்கொண்டிருக்க மெல்ல அவன் தோள் அணைத்தது விஷ்வாவின் கரம்.

'வாடா நாம போயிடலாம். வா ..' என்றான் விஷ்வா சற்றே இதமான  குரலில். 'உன் மனசு இப்போ எப்படி இருக்குன்னு எனக்கு தெரியுது...' ஆனால் ஏனோ அங்கிருந்து நகரவில்லை பரத்.

'சரிப்பா... பார்ப்போம். அஸ்வினிக்கு கொஞ்சம் குணமாகட்டும். உங்க வீட்டு பெரியவங்களை கூட்டிட்டு வா பேசுவோம். எல்லாம் சரியாய் நடந்தால் எனக்கு சந்தோஷம் தான்..' ஒரு நல்ல தந்தையாக அவர் சொல்ல...

'எல்லாம் சரியா நடக்கும் அங்கிள்...' அருண் அழுத்தமாக சொல்ல.... அப்போதுதான் நிமிர்ந்தாள் அபர்ணா. அவள் விழிகள் தற்செயலாக பரத்தின் விழிகளை சந்திக்க, சுரீரென்றது அவளுக்கு. அவன் மன நிலை தெள்ள தெளிவாக புரிந்தது அவளுக்கு.

'அய்யோ... இப்போது இங்கே நடந்த நிகழ்வு எப்படி வலித்திருக்கும் பரத்துக்கு???' கேள்வி எழ தவறவில்லை அவளுக்குள்ளே. அவன் மனதை குத்தி கீறி வேடிக்கை பார்க்க என்றுமே எண்ணியது இல்லை அவள். கட்டிலை விட்டு அவள் மெல்ல எழ சுதாரித்துக்கொண்டான் பரத்.

மனம் நிலைப்பட்டு விட்டதற்கு அடையாளமாக ஒரு அழமான சுவாசம் எழுந்தது அவனிடம். அடுத்த சில நொடிகளில் இதழ்களில் புன்னகை ஓட அருணின் அருகில் வந்து இரண்டு நொடிகள் அவன் முகம் பார்த்தவன் அவனை நோக்கி கை நீட்டினான்

'கங்க்ராஜூலேஷன்ஸ்‌ அண்ட் பெஸ்ட் விஷஸ் மிஸ்டர் அருண்...' அவன் மனநிலை புரிந்திருந்த விஷ்வா, அபர்ணா இருவருக்குமே இது கொஞ்சம் வியப்பாகவே இருந்தது.

'பெஸ்ட் விஷஸ் அபர்ணா...' அவன் அவளை பார்த்து புன்னகையுடன் சொல்ல அவனையே பார்த்திருந்தது அங்கிருந்த இன்னொரு ஜீவன். அஸ்வினி!!!

'அனி... உனக்கு ஒரு சீக்ரெட் சொல்றேன்... இந்த பரத் இருக்கானே பரத்... நம்ம அப்புவை தாறு மாறா லவ் பண்றான் தெரியுமா உனக்கு???' சற்று முன் விஷ்வா சொன்னது அவள் நினைவில் ஆடியது.

அவளுக்கும் பரத்தின் மனநிலை நன்றாகவே புரிந்திருந்தது. அஸ்வினியினுள்ளே நிறையவே கேள்விகள்.

'அருண்..அபர்ணாவுக்கு சரியான ஜோடி தானா??? இல்லை அவனை மணந்துக்கொண்டால் காலம் முழுவதும் எல்லாவற்றுக்கும் இவளே விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை. வருமா??? அவளது தேர்வு சரிதானா??? இல்லை பரத்தான் அக்காவுக்கு சரியான ஜோடியா???

பரத்தையும் அருணையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள் அஸ்வினி!!! அபர்ணாவின் தங்கை அஸ்வினி!!! உருவத்தில் அபர்ணாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவளது இரட்டை சகோதரியான அஸ்வினி!!!!

பையனுக்கு எக்ஸாம் என்பதால் கொஞ்சம் அவசரமாக எழுதிய எபி. ஸ்பெல் செக் பண்ணலை. ஏதாவது சொதப்பி இருந்தால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ஃபிரண்ட்ஸ் பிளீஸ்.... thanks thanks thanks.

Episode # 05

Episode # 07

தொடரும்......

{kunena_discuss:982}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.