(Reading time: 10 - 19 minutes)

நீ ஏண்டா மாமா,நேரா சாரயக்கடைக்காரரை அப்ரோச் செய்யக் கூடாது.நான் முன்னவே ஒரு ஐடியா கொடுத்தேனே.முயற்சி செய்து பார்த்தியா”

“நீயும் சேர்த்து கடுப்பேத்தாதடி..ஹாசினி அப்பா பக்கத்துல போனாலே,மீசையை முறுக்கிட்டு பயம் காட்டறார்.எங்கேயோ எங்க மேட்டர் லீக் ஆகியிருக்கும் போல.நான் அந்த தெருவில சுத்தினாலே கேட்கிட்ட வந்து நின்னுடறார்.எனக்குன்னு மாமனாரா பிறந்திருக்காரே..இந்த ஹாசினி என்னோட மாமாவுக்கே இன்னொரு மகளா பிறந்திருக்கக் கூடாதா’புலம்பும் நேரம் பார்த்து,வந்த பாண்டியன்..

“குட்டிம்மா கல்யாணம் முடியட்டும்.நானே போய் பேசறேன்.அவசரப்பட்டு எதையும் செய்து வைச்சிடாதே”மிரட்டிவிட்டு அவர் அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்று விட,அதற்கும் குதித்தான்.

“என் நிலமையில இருந்தா தெரியும்”அவன் முறைத்துக்கொண்டே சொல்ல,அவன் தலையில் தட்டிய அவந்திகா..

“இங்க பாருடா மாமா.எனக்கு கல்யாணம் ஆனா தான்,உன்னோட வழி கிளியர் ஆகும்.இல்லைன்னா ஒண்ணும் நடக்காது.அத்தை வேற சாமிக்கிட்ட இன்னும் நாம கல்யாணம் பண்ணிக்கணும் வேண்டிக்கிறாங்க போலிருக்கு..ஒட்டுக்கேட்டேன்.அதனால அடக்கி வாசி.ஓவரா சோக கீதம் வாசிச்ச..முதலுக்கே மோசமா போயிடும்”

அவள் பங்குக்கு சேர்த்து அவனது பீதியை கிளப்ப,பயந்து போனவன்,”உனக்கு நல்லபடியா அந்த யஸ்வந்த் கேடியோட கல்யாணம் ஆகணும்னு நான் சாமிகிட்ட வேண்டிக்கறேன்..கூடுதலா என் செலவில அன்னதானமும் நடத்தறேன்”என்றான்.

அவள் அவனை முறைக்கவும்,எதற்காக முறைக்கிறாள் என்று புரிய,”உண்மையாவே அவன் கேடி தான்.வெளில தான் ரொம்ப நல்ல பையன் மாதிரி ஆக்ட் கொடுப்பான்.உள்ளுக்குள்ள சரியான வில்லத்தனம் இருக்கும்.போகப் போக நீயே புரிஞ்சுப்ப”பதிலுக்கு இவன் வேறு அவளை பயமுறுத்திவிட்டுப் போக,திடீரென்று அவளுக்குள் கலவரம்.

“சரண் அவ்வளவு எளிதாக பொய் சொல்லிவிட மாட்டானே.வில்லன்னா படத்தில வர்ற மாதிரி வில்லனா..ஐயோ”வாய்விட்டுப் புலம்பியவளாய் ஆசையாய் வளர்த்த நகங்களை கடித்து துப்ப ஆரம்பித்தாள்.

ஒன்பது விரல்களின் நகங்களை கடித்து துப்பிய பின்னரே,தான் செய்த செயல் நினைவு வர,”ஐயோ..ஆசையா வளர்த்த நெயில்..இதுக்காக எவ்வளவு செலவு பண்றேன்..தினமும் 15 நிமிஷம் இதுக்குன்னே ஒதுக்கி பக்குவம் பார்த்து வளர்த்தேனே..இந்த சரண்,என்னை இப்படி ஆக்கிட்டுப் போயிட்டானே!”,

“ஒரு வேளை அவன் சொல்றதுலயும் உண்மை இருந்தா! அதான் சோடாபுட்டி கண்ணாடிய போட்டுட்டு என்னையவே சைட் அடிச்சதா சொன்னாங்களே..அப்போ முதல்ல அந்த கண்ணாடிய கழட்ட வைக்கனும்..அப்போ தான் கல்யாணத்தன்னைக்கு சுத்தி இருக்க பொண்ணை பார்க்க மாட்டாங்க”என்று அவளது மூளைக்கு எட்டிய வில்லத்தனத்தை மட்டும் யோசித்தாள்.

அதற்கு மேல் செய்வதற்கு எத்தனையோ வில்லத்தனம் இருக்கிறது என்று அவளுக்கு காட்ட இன்னொருவன் காத்துக்கொண்டு இருக்கிறானே..

அதற்கான முக்கிய வேலையாக மருத்துவமனைக்கு சென்று,எல்லா ஏற்பாடையும் செய்து முடித்த ‘அவன்’ தன்னுடைய அவந்திகா தன்னை சேரும் நாளை எதிர்நோக்கி காத்திருந்தான்.

நிச்சயம் தன்னை எந்த நேரத்திலும் வெறுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையுடன்..!!

எஸ்....வெறுக்க அவளால் முடியாது தான்!!

ஹாய்  பிரண்ட்ஸ்..இந்த udல வில்லனை கொண்டு வந்துடலாம்னு இருந்தேன்..ud கொஞ்சம் நீளமா போகும் போலிருக்கு..எல்லா கேரக்டரையும் ஒரே இடத்தில கொண்டு வரணும்..இப்போ எழுதுவதற்கு நேரமில்லை..அடுத்த அத்தியாயத்தில் எல்லாருக்கும் வில்லன் என்றாலும்,அவந்திகாவால் என்றும் வெறுக்க முடியாத ‘அவனை’ பார்த்துவிடலாம்..நன்றி..

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1004}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.