(Reading time: 10 - 19 minutes)

டேய்.. அர்ஜுன்.. நீ இவனை வில்லன்னு சொன்னது தப்பே  இல்லை.. நானே இப்போதான் அவகிட்ட பேசி பார்க்கலாம்ன்னு நினைச்சேன்.. இப்போ நான் சாதரணாமா பேசினாலே அவ தெரிச்சு ஓடிடுவாளே.. கடவுளே ... எனக்கு ஏன் இந்த சோதனை.. “ என்று புலம்பினான்..

இதுக்கு மேலே பேச விட்டால்.. வருண் மொத்தமா.. அவங்க ரெண்டு பேரையும் confuse பண்ணி விட்டுடுவான்...என்று உணர்ந்த அர்ஜுன் சற்று பெரிய குரலில்,

“வா.. ராகுல் .. சார் வெயிட் பண்ணிட்டு இருப்பார் “ என்று குரல் கொடுத்த படி.. முன்னாடி செல்ல, அப்போதுதான் பார்ப்பது போலே வருணிடம்,

“என்னாச்சு.. எல்லாரும் இங்கே நிற்கறீங்க..? “ என்று வினவினான்..

அவர்கள் குரல் கேட்டு சுதாரித்த வருண்,

“ஒன்னும் இல்லை சார்.. நீங்க நம்ம பக்கம்னு தெரிஞ்ச உடனே  ..உங்க கிட்ட சொல்லி ரெண்டு பேரையும் கொஞ்சம் பார்த்துக்க சொல்லலாம்னு நினைச்சேன்.. அதான் நீங்க வரதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம் .. “ என்றபடி சுறாவிற்கு செய்கை செய்தான்..

சுராவும் “ ஆமாம்.. சார்.. நான் கொஞ்சம் கலாட்டா பேர்வழி.. அதனால் எதாவது உங்கள கஷ்டபடுதுற மாதிரி பேசி இருந்தேனா.. மன்னிச்சுக்கோங்க “ என, நிஷாவும் அவளை பின்பற்றி “சாரி சார்.. “ என்றாள்..

அர்ஜுன் “அது எல்லாம் ஒன்னும் இல்லை.. நீங்க பேசுறது ரொம்ப ஜாலியா இருந்துச்சா.. அதுதான் நாங்களும் அப்படியே maintain பண்ணிட்டோம்.. சாரி. .உங்கள ஹர்ட் பண்ணினதுக்கு” என்றான்..

வருண் “நாந்தான் சொன்னேன் லே.. சார் அது எல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டர்ன்னு.. ரொம்ப தேங்க்ஸ் சார்.. கொஞ்சம் வாலு அவ்ளோத்தான்.. மற்றபடி நல்ல டைப்.. நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க.. “ என,

நிஷாவும், மகியும் “இங்கே பாரடா.. நம்ம கிட்ட என்னவோ நான் கடவுள் மொட்டை ராஜேந்திரன் மாதிரி ரெண்டு பேரையும் buildup பண்ணினான்.. இப்போ என்னடா என்றால் வேதாளம் ராஜேந்திரன் மாதிரி காமெடி பீஸ் ஆ மாத்திக்கிட்டு இருக்கான்.. என்னங்கடா நடக்குது “ என்று முழிக்க,

வருண் பற்றி நன்றாக தெரிந்த சுறாவோ .. மனசுக்குள்ளே “டேய்.. அடங்குடா சோடாபுட்டி.. இப்படியா சோப்பு போடுவ” என்று நினைத்தாள்

இவர்கள் தான் இப்படி நினைத்தார்கள் என்றால்,

அர்ஜுனோ வருணுக்கு பதிலாக “ sure வருண்.. அது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.. “ என்றான் நலல் பிள்ளையாக..

ராகுலும் மிதுனும் “அடேய்.. அரிச்சந்திரன்னுக்கு பக்கத்துக்கு வீட்டுக்கரனடா நீ.. என்ன புளுகு மூட்டை விடுறா.. நீ சொன்ன வில்லன் மேட்டர் மட்டும் தெரிஞ்சுது .. அவன் வில்லாதி வில்லன் ஆகிடுவாண்டா.. “ என்று எண்ணினார்கள்..

இப்போது எல்லோரும் சுபத்ரா அப்பா ஏற்பாடு செய்து இருந்த அறைக்குள் சென்றனர்..

“எங்கே எல்லாரும் போனீர்கள்.. ? “ என்றார்..

அர்ஜுன் “ஒன்றும் இல்லை சார்.. ஒரு போன் வந்தது .. நாங்கள் பேசி விட்டு வரும் வரையில் இவர்களும் வெயிட் பண்ணினார்கள்.. “ என்றான்..

“நம்ப முடியவில்லையே.. எங்க பசங்க அவ்ளோ பொறுப்பவா இருக்காங்க.. ? “என

மகி “கிருஷ்ணாபா.. ஜோக்கா.. நாங்க ஈ ஈ .. சிரிச்சுட்டோம் போதுமா .. “ என,

சுறா  ‘மிஸ்டர். கிருஷ்ணன்.. நான் இல்லாமல் ரொம்ப தைரியம் ஆகிடுச்சா உங்களுக்கு .. ? “ என்றவள்,

“அம்மா .. பாருங்க.. உங்க வளர்ப்ப அப்பா குத்தம் சொல்றாங்க.. நீங்க எங்களுக்கு பொறுப்புன்னா என்னனு சொல்லி தரலியாம்.. அது உங்களுக்கும் சுத்தமா இல்லியாம்.. “

“யாருக்கு பொறுப்பு இல்லை “ என்றபடி ருக்மணி சண்டைக்கு வர,

“அம்மாடி சுபா.. என்னை விட்டுடு .. மீ பாவம்.. “ என்று சரணடைய, எல்லோரும் சிரித்தனர்.

சுபத்ராவின் அம்மா ஊரிலிருந்து கொண்டு வந்த ஸ்வீட்ஸ் எல்லாம் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்க, எல்லோரும் பேசி சிரித்தபடி சாப்பிட்டனர்.. பிறகு கோவிலின் அருகே வான வேடிக்கைகள் நடக்கும் என கூறி எல்லோரையும் அங்கே அழைத்து சென்றான் அர்ஜுன்..

அங்கே மாலை வரை இருந்து விட்டு எல்லோரும் கிளம்பினர்.. ரூமில் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கும் போது , வருணும், மிதுனும் சற்று நேரத்தில் நெருங்கி பழக ஆரம்பித்து விட்டனர்.

இதை கண்ட ராகுல் பொறாமையால் வெந்த படி அர்ஜுனிடம் காட்ட.

“டேய்.. இது ஒரு மேட்டர் இல்ல.. ஒருவகையில் மிதுன் கொஞ்சம் நெருங்கிட்டா .. நமக்கு சப்போர்ட் கிடைக்கும் .. பார்க்கலாம் “ என்றான்.

இவர்கள் காம்பஸ் திரும்ப, ஒரு மணி நேரம் இருக்கும் போது,

அர்ஜுன் “சார்.. நாங்க கொஞ்சம் வெளியில் போயிட்டு அப்படியே காம்பஸ் போறோம்.. “ என்று விடை பெற்றனர்.

சுபா, நிஷா இருவரும் “கேப்டன்.. நாங்க இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கிளம்பறோம் “ என,

“ஓகே..பட்.. க்ளோசிங் டைம்குள்ளே வந்திடுங்க.. “ என்றான்..

சுராவின் மனதிற்குள் “போய்யா .. ரோபோ .. “ என்று திட்ட, அவள் முகத்தை பார்த்த வருண் , அவளை எச்சரித்தான்.. இது எல்லாம் கண்டும் காணாதது போல் கிளம்பினான் அர்ஜுன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.