(Reading time: 35 - 69 minutes)

ரூன், பிரணதியைப் போலவே... யுக்தாவின் புடவை நிறத்துக்கு ஏற்றார் போல் சட்டையும், வேஷ்டியும் பிருத்வி எடுத்திருந்தான்... ஆனால் இப்போது அவர்கள் அதை உடுத்தி வரவில்லை... இரண்டு பேரும் அவர்கள் திருமணத்தில் அணிந்திருந்த பட்டு வேஷ்டி சட்டையும், பட்டுப் புடவையும் அணிந்திருந்தினர்...

அதற்கு காரணம் இரண்டுப் பேருமே அவர்கள் திருமணத்தன்று என்ன உடை அணிந்திருந்தனர் என்பதை அன்று இருந்த மனநிலையில் இருவருமே கவனிக்கவில்லை... அதனால் கவி, தேவா திருமணத்தில் அந்த உடையை அணியலாம் என்று இருவரும் திடிரென்று நேற்று தான் முடிவு செய்தனர்...

செந்தில், மதி, பிரணதி மூவரும் கிளம்பியப் பின் யுக்தா குளித்துவிட்டு பட்டுப் புடவையில் தயாராகி வர... பிருத்வியும் பட்டு வேஷ்டி சட்டையில் ஏற்கனவே தயாராகி இருந்தான்... இருவருக்குமே அடுத்தவர் மீதிருந்து பார்வையை விலக்க கஷ்டமாக இருந்தது...

இதுவரையிலும் பிருத்வி யுக்தாவை புடவையில் பார்த்து அசந்து போயிருந்தான் என்றால்... இன்று தான் அவளைப் பட்டுப் புடவையில் பார்க்கிறான்... அவர்களின் திருமணத்தின் போது அவனுக்கு இருந்த கோபத்தில் அவளை அவன் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை... அவளும் தான் அப்போது இருந்த மனநிலையில் பிருத்வி மணமகனாக எப்படி இருந்தான் என்று கவனிக்கவில்லை... சமீபத்தில் அவர்களின் திருமண போட்டோவை பார்த்ததின் தாக்கம் தான் இப்படி ஒரு எண்ணம் அவர்களுக்கு தோன்றியது...

பட்டுப் புடவையில் அழகாக ஒற்றை பின்னலிட்டு அதில் அவனுக்குப் பிடித்த மல்லிகைப் பூவை சூடியிருந்தாள்... பிருத்வியும் அந்த வேஷ்டி சட்டையில் ஆண் மகனுக்குரிய கம்பீரத்துடன் அழகாக இருந்தான்...

"யுகி... கல்யாணத்துக்கு போகனுமா..?? இங்கேயே இருந்துடலாமா...??"

"கவி கல்யாணத்துக்கு போகாம இருக்கறதா சான்ஸே இல்ல... சீக்கிரமா கிளம்பாலாம் வாங்க ரித்வி... நமக்காக அங்க வெயிட் பண்ணுவாங்க..."

"செல்லம்... இப்படி எனக்கு பிடிச்ச மாதிரி வந்து நிக்கிறியே... அப்புறம் எனக்கு எப்படி போக தோனும்.."

"என்ன ரித்வி... இப்பல்லாம் உங்களுக்காக அடிக்கடி புடவைக் கட்டி மல்லிப்பூ வச்சிக்கிறேனே அப்புறம் என்ன...??"

"இருந்தாலும் இன்னிக்கு பட்டுப் புடவையில சும்மா ஜம்முன்னு இருக்கியே..."

"இதுக்குதான் அவங்கக் கூடவே நாமளும் கிளம்பளாம்னு சொன்னேன்... கொஞ்சம் ரெஸ்ட் எடு... அப்புறம் போலாம்னு சொல்லிட்டு... இப்போ இப்படியெல்லாம் செய்றீங்க... போங்க எல்லா ரூம்லயும் லைட், ஃபேன் எல்லாம் ஆஃப் பண்ணியிருக்கான்னு பாருங்க... நான் இதோ வர்றேன்... நாம கிளம்பளாம்..." என்று வலுக்கட்டாயமாக அவனை அனுப்பியவள்... அவன் சென்றுவிட்டான் என்று நினைத்து...

மல்லிகை என் மன்னன் மயங்கும்...

பொன்னான மலரல்லவா... என்றுப் பாட...

"இப்போ எதுக்கு அந்தப் பாட்டைப் பாடின... நாம கல்யாணத்துக்கு போகனும்... அப்புறம் நான் கொஞ்ச நாளாவது கன்ட்ரோலா இருக்கனுமேன்னு பார்க்கிறேன்... இல்லை இன்னிக்கு உன்னை வீட்லேயே அரெஸ்ட்ல வச்சிடுவேன்... ஜாக்கிரதை.." என்று சொல்லிவிட்டு வெளியேப் போனான்...

"இருங்க அந்தப் பாட்டை ரிங் டோனா வச்சு உங்களை வெறுப்பேத்தறேன்.." என்று சத்தமாக சொல்லியவள் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்... என்னத்தான் பிருத்வி மாறிட்டாலும்... இந்த கோபம் அடிக்கடி எட்டிப் பார்க்கத் தானே செய்யுது... அப்படி எப்போதாவது... வேறு எதற்காக கோபமாக இருந்தாலும் சரி... அவனுக்கு பிடித்தது போல் புடவைக் கட்டி... மல்லிப் பூ வைத்து... இந்த பாடலை அவனிடம் பாடி எப்படியும் சமாதானப்படுத்தி விடுவாள்... அதற்காக தான் இப்போது அவன் இருந்த மனநிலையில் அவள் இந்த பாட்டைப் பாடினதும் கொஞ்சம் கடுப்பாகிப் போனான்...

வரூனும், பிரணதியும் வாசலிலேயே நிற்க... காரிலிருந்து இறங்கிய பிருத்வியும், யுக்தாவும் அவர்களிடம் வந்தனர்...

"என்னடா... என் தங்கச்சிக்கிட்ட என்ன கடலைப் போட்டுக்கிட்டு இருக்க..."

"அதுவா... நீங்கல்லாம் சேர்ந்து எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க தயாரா இல்ல... அதான் நாங்க ஓடிப் போய் கல்யாணம் செய்துக்கலாமான்னு பேசிக்கிட்டு இருக்கோம்..."

"நல்ல ஐடியா வரூன்... கல்யாண செலவு மிச்சம்..." என்று பிருத்வி சொன்னதும்... பெண்கள் இருவரும் அவர்கள் இருவரையும் முறைத்தனர்..

"என்ன பேச்சு ரித்வி இதெல்லாம்..." என்று யுக்தா பிருத்வியிடம் கேட்க...

"அட அவங்கள விடுங்க அண்ணி... அவங்க இப்படித்தான்..." என்றாள் பிரணதி.

"அண்ணி... இது உங்க கல்யாண ட்ரஸ் தானே... இப்படி திடிர்னு ரெண்டுப்பேரும் சர்ப்ரைஸ் கொடுக்கீறீங்க... இதை ஏன் முன்னாடியே சொல்லல..."

"எங்களுக்கே நேத்து தான் இது தோனுச்சு பிரணா.."

"அண்ணி உங்களுக்கு தெரியுமா..?? இந்த புடவையை நான் தான் செலக்ட் பண்ணேன்..."

"அப்படியா..?? ரொம்ப நல்லா இருக்கு பிரணா.."

"அப்போ நீங்க புடவை எடுக்க வரலைன்னு... அம்மா என்னை கூட்டிடுப் போனாங்க... உங்களுக்கு இந்த புடவை நல்லா இருக்கும்னு எடுத்தேன்... ஆனா இது உங்களுக்கு பிடிக்குமான்னு டவுட்... ஆனா கல்யாணத்துல பார்த்தப்போ நீங்க ரொம்ப அழகா இருந்தீங்க... என்ன அப்போ கொஞ்சம் உம்முன்னு இருந்தீங்க... இப்போ முக மலர்ச்சியோட ரொம்ப அழகா இருக்கீங்க.."

"அப்படியா ரொம்ப தேங்க்ஸ்..."

"அண்ணி.. கவி அண்ணி உங்களுக்காக கோபத்தோட வெய்ட் பண்றாங்க... சீக்கிரம் போய் அவங்கள பாருங்க..."

"ம்ம் ஆமாம்.. சீக்கிரம் வாங்க ரித்வி... கவியைப் பார்க்கலாம்..." என்று யுக்தா சொல்ல இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்...

எதிரிலேயே தேவா தென்பட... "ஹே என்ன இவ்வளவு லேட்டா வர்றீங்க... உங்களுக்காக தான் எல்லோரும் வெய்ட்டிங்.."

"போதும் மாம்ஸ்... முகூர்த்ததுக்கு டைம் இருக்கு..."

"ஆமாம் என்ன ரெண்டுப்பேரும் கலக்கலா வந்திருக்கீங்க... திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கா என்ன..??"

"என்ன ரித்வி... மாம்ஸ் சொல்ற மாதிரி திரும்ப கல்யாணம் பண்ணிப்போமா..??"

"நான் ரெடி தான் யுகி.."

"சரி பரவாயில்ல ரித்வி... இன்னிக்கு மாம்ஸும் கவியும் தான் ஹீரோ, ஹீரோயின்.. அதனால் நாம கல்யாண ஐடியாவை கேன்சல் பண்ணிடலாம்..."

"ஹே போதும் போதும்... ஆமாம் யுக்தா அதென்ன திடிர்னு மாம்ஸ்னு கூப்பிட்ற.."

"அதுவா மாம்ஸ்... லஷ்மி அத்தையும், சாவிம்மாவும் சேர்ந்து எனக்கும் கவிக்கும் உன்னை இனி மாமான்னு தான் கூப்பிடனம்னு லெசன் எடுத்தாங்க... கவி எப்படி கூப்பிடுவாளோ... எனக்கு மாமான்னெல்லாம் கூப்பிட வராது... அதான் மாம்ஸ்... சரி நான் போய் கவியைப் பார்க்கிறேன்..." என்று இருவரும் கவி இருந்த அறைக்குள் நுழைந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.