(Reading time: 35 - 69 minutes)

கையில் பால் சொம்போடு கவி உள்ளே வர... "அய்யோ.." என்று தேவா அலறியதில்... நழுவி போக இருந்த பால் சொம்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஏன் இப்படி கத்தினானோ.. என்று பதறியப் படி...

"என்னாச்சு தே.. என்னாச்சு மாமா..?? ஏன் இப்படி கத்தின.." என்று கேட்டாள்..

"அது ஒன்னுமில்ல சங்கு... ரொம்ப வெட்கப்பட்டுக்கிட்டே நீ உள்ள நுழைஞ்சதும்... உனக்கு பதிலா யாரையோ அனுப்பிச்சிட்டாங்களோன்னு நான் ஒரு நிமிஷம் பயந்துட்டேன்.." என்று அவன் சொல்ல... பால் சொம்பை கீழே வைத்தவள்.. இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்..

"போனாப் போகுது... இன்னிக்கு ஒருநாளாவது கொஞ்சம் வெட்கப்படலாம்னு நினைச்சா... இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல தே.. தெரியல மாமா.."

"ஹேய் என்ன இது தே.. மாமா...?? திடிர்னு என்ன மாமான்னு கூப்பிட்ற..." தெரிந்தும் தெரியாதது போல கேட்டான்...

"அதுவா அம்மாவும் அத்தையும் தான் உன்னை அப்படி கூப்பிட சொன்னாங்க... எனக்கு இந்த வாங்க போங்க ல்லாம் வரல... அதான் வெறும் மாமாவை மட்டுமாவது ஃபாலோ பண்ணலாம்னு நினைச்சேன்... ஆனா டக்குன்னு கூப்பிட வரமாட்டேங்குது..." என்றாள்.

"நீ ஒன்னும் சிரமப் பட வேண்டாம்... எப்பவும் போல என்னை தேவான்னே கூப்பிடு... நான் அம்மாக்கிட்டேயும் அத்தைக்கிட்டேயும் பேசிக்கிறேன்..."

"நீ ரொம்ப சமத்து தேவா... "

"ஹேய் ஆனா அம்மாவையும், அத்தையையும் கன்வின்ஸ் பண்ணனும்னா... ஒரு கண்டிஷன் இருக்கு..."

"என்ன..??"

"நீ நாம தனியா இருக்கும்போது மட்டும் மாமான்னு கூப்பிடனும்... அப்படி கூப்பிட்டா ஒரு கிக்கா இருக்குடி..."

"அப்போ கண்டிப்பா கூப்பிடமாட்டேன் போடா.."

"என்னது டா வா..??"

"ஆமாம்  டா தான்... நீ மட்டும் டீ போட்டு கூப்பிடலாம்... நான் டா போட்டுக் கூப்பிடக் கூடாதா..?? போடான்னு சொல்றதுக் கூட கிக்கா தான் இருக்குல்ல.."

"அதை விட மாமான்னு கூப்பிட்றது தான் நல்லா இருக்கு... நீ அப்படியே கூப்பிடு... இல்லை அம்மாவையும் அத்தையையும் நான் கன்வின்ஸ் பண்ண மாட்டேன்..."

"பரவாயில்ல நான் கன்வின்ஸ் பண்ணிக்கிறேன்..."

"அப்போ கூப்பிட மாட்ட.. சரி இப்போ கூப்பிடாம இருக்கியான்னு பார்க்கலாம்னு கொஞ்சம் கிட்டே வந்தான்... அவள் அப்போதும் மறுப்பாக தலை அசைக்க அவன் இன்னும் கொஞ்சம் கிட்டே வந்தான்... அவள் அப்போதும் அசையாமல் இருக்க... அவன் மிக நெருக்கமாக அவள் அருகில் வர...

"சரி... மா...மா ஆ ஆ... போதுமா..?? இப்படி கிட்ட வந்தா எனக்கு நெஜமாவே வெட்கமா வருது மாமா... தள்ளிப் போ.." என்று இவள் அவன் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளிவிட...

"அவளை தன்னருகே இழுத்து அவள் இடையைப் பிடித்தவன்... " மாமான்னு சொன்னதுக்குப் பிறகு சும்மா எப்படி விட்றது..." என்று அவள் முகம் நோக்கி அவன் முகத்தை கொண்டு வர.... அவள் வெட்கத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.

ஒருபக்கம் பிருத்விக்காக தவமிருந்த யுக்தாவிற்கு கொஞ்சம் சோதனைகளை கொடுத்து பிருத்வியுடன் அவளை அந்த கடவுள் சேர்த்து வைத்தார் என்றால்... இன்னொரு பக்கம் என்ன தான் மனதில் அதிகப்படியான காதலை தேவாவின் மேல் வைத்திருந்தாலும் அவனுக்காக அவள் தவமெல்லாம் மேற்கொள்ளாத போதும்... அவளை தேவாவுடன் இணைத்துவிட்ட கடவுளின் திருவிளையாடலை என்னவென்று சொல்வது...

மனதில் உண்மையான காதல் இருந்தாலே போதும்... அதை அடைய எந்த தவமும் இல்லாமலேயே காதல் கைக்கூடி விடும் என்பதற்கு சங்கவியும், யார் மீதும் வெறுப்பை காட்டாமல் இன்முகத்தோடு இருந்தாலே போதும் காதல் கூட தானாக தன் கை சேர்ந்துவிடும் என்பதற்கு தேவாவும் தான் உதாரணம்..

தவமின்றி கிடைத்த வரமே...

இனி வாழ்வில் எல்லாம் சுகமே...

தவமின்றி கிடைத்த வரமே...

இனி வாழ்வில் எல்லாம் சுகமே...

நீ சூரியன்... நான் சந்திரன்...

உன் ஒளியால் தானே வாழ்கிறேன்...

நீ சூரியன்... நான் தாமரை...

நீ வந்தால் தானே மலர்கிறேன்...

நீ சூரியன்... நான் வான்முகில்...

நீ நடந்திடும் பாதை ஆகிறேன்...

நீ சூரியன்... நான் ஆழ்கடல்...

என் மடியில் உன்னை ஏந்தினேன்...

தவமின்றி கிடைத்த வரமே...

இனி வாழ்வில் எல்லாம் சுகமே...

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்..

Episode # 27

Episode # 29

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.