(Reading time: 22 - 43 minutes)

டுத்ததாய் அந்த  அம்பதேவன் இந்த பாண்டியர்களிடமும் தன் வாளை திருப்புவேன் என்க அதன் பின்பே இவர்கள் அவனிடமிருந்து விலகிக் கொண்டார்கள்…. இதில் அந்த அம்பதேவனை இவள் தந்தை போர்களத்தில் கொன்று பழி வாங்கிய பின்பு, இன்று இவர்களது தேசத்திற்கும்  பாண்டியர்களின் வம்சத்திற்கும் சமாதான உடன்படிக்கையாம்….

சமாதானம் என்ற வகையில் போர் நிறுத்தம் உயிர் பலி நிறுத்தம்……அந்த வகையில் இந்த சமாதான உடன்படிக்கையை இவளது தந்தையைப் போன்றே இவளும் விரும்பினாலும்,  இந்த பாண்டிய காகதீய கூட்டு உறவுக்கு அடையாளமாக இரு நாட்டவரும் சேர்ந்து எடுத்திருக்கும் அந்த முடிவு……அதைத்தான் இவளால் ஒப்ப முடியவில்லை……. ஆம் இவளை இந்த புது உறவின் அடையாளமாய் அந்த பண்டிய மன்னன் பராக்கிரமனுக்கு பலி இடப் போகிறார்களாம்…..விரைவில் அவனோடு இவளுக்கு மணமுடிக்க போகிறார்களாம்….

இந்த மண ஏற்பாடே இவளது தந்தை புறமிருந்துதான் என்பதால் இவளால் எதுவும் பேச முடியவில்லை…….மன்னருக்கு எதிராய் அவரது மகளே எழும்பலாமா….? அது இவளது ஆரூயிர் தந்தைக்கு இவள் செய்யும் துரோகமாகாதா?

ஆனால் அதற்காகவெல்லாம் பரம்பரை வைரியை மணவாளனாக ஏற்று கணவனாக கைப் பற்றி அவனோடு காதலில் கலந்து தலைமுறைகள் சுமந்து……..ஐயோ…..கற்பனையில் கூட இது இவளால் இயலாதே…..

அதோடு அவனும்தான் இவளை எப்படி நடத்துவான்….? இவளுக்குள்ள குரோதம் அவனுக்கும் இருக்காதா? இவளை மதிப்பானா…? ஏன் இவளது மானத்தையாவது காப்பானா? மனைவியாய்தான் நடத்துவானா? பெண்ணான இவளது பாட்டியை எதிர்க்க படை அனுப்பிய தேசம்…..பெண்களை ஒழுங்கும் முறையுமாய் நடத்துவார்களாமா…? 

அதில் தான் இவள் தற்கொலை முடிவுக்கு வந்ததே……

அப்படி இருக்க எதிரில் நிற்கும் இந்த இளைஞன் பாண்டிய தேசத்தானாய் இருக்கும் பட்சத்தில் அந்த பராக்கிரமனது சேனாதிபதியாகவோ அல்லது முக்கிய அமைச்சனாகவோ இருக்க வேண்டும்…. இந்த ராஜீய விவாஹத்தை பேசி நிர்ணயிக்க அவர்கள் இருவரும்தானே இந்த கோட்டைக்கு வந்திருப்பதாய் இவளுக்கு சொல்லப்பட்டிருக்கிறது…...

ஆனால் இத்தனை காலம் இவர்களை வெறுத்து பழகிய ஒரு பாண்டிய தேசத்தான் எதற்காக ஒரு காகதீயனின் தற்கொலையை தடுக்க வேண்டுமாம்? அப்படியானால் இவன் பாண்டியனாய் இராது…..

ஒருவேளை இவன் பாண்டியனாகவே இருந்தால் காகதீயனை காக்க முயன்ற அவனது பெருந்தன்மை முன் இவளது பெருந்தன்மை ஒன்றும் குறைவுபட்டதில்லை….. அவனிடம் மரியாதையாகவே நடந்து கொள்ளலாம் தவறில்லை….. இப்படியாய் அனைத்தையும் அரை நொடியில் ஆராய்ந்தது அரசிளங்குமாரியின் உள்ளம்.

ஆக “தாங்கள் யார்?” என்றாள் மரியாதையாகவே…. 

அவனுக்கு நேர் எதிரில் நின்று கொண்டு, ஒரு மணி துளி காலம்தான் என்றாலும் அவனை அத்தனை ஆராய்தலாய் பார்த்துக் கொண்டிருந்த இவளை, அவன் இந்நேரம் கவனத்தில் கூட கொள்ளவில்லை….

இவளுக்குப் பின் தெரிந்த அந்த இருண்ட ப்ரதேசத்தில் பார்வையை வைத்திருந்தான் அவன்….

நொடி நேரம்தான் என்றாலும் கழுத்திலிருந்த வாளைவிட அப்படி என்னதைதான் கவனிக்கிறானாம்? அனிச்சையாய் அவன் பார்வை கோட்டிலேயே இவளும் தன் பார்வையை திருப்பினாள்….

அந்த இருண்ட வனப்ரதேசத்தில் இரண்டு மின்மினிகள் நெருங்கி இணையாக மின்னிக் கொண்டிருந்ததை தவிர எதுவும் புதுமையாகவோ இயல்புக்கு மாற்றாகவோ தெரியவில்லை இவளுக்கு…

இதைத்தான் இப்படியாய் பார்க்கிறானா…?

இவள் எண்ணிக் கூட முடிக்கவில்லை……இதற்குள் மீண்டுமாய் இவள் கைப் பற்றி இழுத்து    உயர பாறையில் நின்றவள் அல்லவா…..அவளை தரையோடு தரையாய் தள்ளி சாய்த்திருந்தான் அவன்….

இழுபட்ட வேகத்தில் படுக்கை வசத்தில் அவன் அருகில் வந்து விழுந்திருந்தாள் அவள்….. அவளது வாளோ அவனது கரத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது…

ஆ….தெய்வமே அடுத்து என்ன செய்வான் இவன்….?  இவள் மீது பாய்ந்துவிடுவானோ…?? எத்தனை இலகுவாய் இவள் கவனத்தை சிதறடித்து காரியம் சாதிக்கிறான் இவன்…. இப்படியாய் எண்ணிக் கொண்டு இவள் அசுர வேகத்தில் துள்ளி எழ…..

இவள் இதழ்களோ “நீசனே” என கொந்தளிப்பாய் ஆரம்பித்த அதே நேரம்….

.”அவைகளைப் பார்த்தாயா நீ…? ஆபத்துக்கு வெகு அருகிலிருக்கிறோம் நாம்…” என தன் செயலுக்கு விளக்கம் சொல்லிற்று அவன் குரல். அதே நேரம் இவளது வாளையும் இவள் கையில் திணித்தது அவனது ஒரு கரம்…

எதிர் பாராமல் விழும் போது இவள் வாளே இவளை பதம் பார்த்துவிடக் கூடாதென எண்ணியிருக்கிறான் போலும்….

“ஆபத்தா…..அவை வெறும் மின்மினிகள்…..” விழுந்ததில் தன் உடையில் ஒட்டி இருந்த தூசிகளை தட்ட முயன்றபடி...

“வேனில் கால இரவுகளில் அவை விளையாட வருவது இயற்கை அப்பனே” என பதில் சொன்ன அவள் குரலில் பெரும் இகழ்ச்சியும் எரிச்சலும் இருந்தது…… அதைப் பார்த்து எதையோ கற்பனை செய்து கொண்டு இவளை இழுத்து வேறு தள்ளி இருக்கிறான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.