(Reading time: 22 - 43 minutes)

வாருங்கள் பிரபு” என வாய் நிறைய வரவேற்று….”இரவு உணவு முடிந்ததா…? தாங்களுக்கான அறை வசதியாய் இருக்கின்றதா?” என முகம் மலர உபசரித்து “யாரங்கே பாண்டிய சேனாதிபதிக்கு….” என ஏதோ கட்டளை வேறு இடத் தொடங்கி இருந்தான்….

இதை எதிர்பார்த்து அருகிலிருந்த பாறையின் மறைவில் இதற்குள் மறைந்திருந்த இவள், அப்படியே அப்பாறை மறைவில் மறைந்து அங்கிருந்து நழுவிவிட்டாள்….

டுத்து வாயு வேகத்தில் ராணிகள் தங்கும் இவளது அந்தபுரத்திற்கு வந்து பெண்ணுடை பூண்டு இளவரசியாய் சைலபத்ரனை போய் சந்திப்பதாக இவள் திட்டம்…..தற்சமயம் இவள் கோட்டைக்கும் கோட்டை இவளுக்கும் பொறுப்பல்லவா….இவளை எதிர்பார்ப்பார்கள் என்பதோடு இவளுக்குமே அங்கு நடக்கும் அனைத்தும் தெரிந்தாக வேண்டுமே…..

இவள் கட்டளையின் நிமித்தம் உடை பெட்டகங்களிலிருந்து இவளது பணிப் பெண் பாஹி கொண்டு வந்து கொடுத்த அந்த பச்சை நிற உடைக்கு அவசர அவசரமாக மாறினாள்…

.பெரிதான சரிகை புஷ்பங்கள் உடல் முழுவதும் நெய்யப்பட்டு இடையிலிருந்து கீழே பாதம் வரை நீண்டு சிவப்பு நிற கரை கொண்டு முடிந்திருந்தது அவள் பாவாடை…..தோளிலிருந்து இடை வரையுமாய் இறுக பிணைந்த சோளி வகை மார்கச்சை மேலாடை…..

சற்று யோசித்தவள் மார்சீலையாக அணிய வேண்டிய அந்த மெல்லிய மென் துகிலை….உச்சந்தலை தொடங்கி முகத்தோடு இடை வரையும் மறைக்கும் வண்ணம் சிரசிலிருந்து தொங்கவிட்டுக் கொண்டாள்…. அத்துகில் இவள் பார்வையை மறைக்காது எனதோடு இந்த இரவு வெளிச்சத்தில் யாராலும் அதன் வழியாய் இவள் முகம் காணவும் முடியாது….

அந்த பாண்டிய சேனாதிபதிக்கு இவள்தான் ஆண் வேடமிட்டு வந்தவள் என தெரிந்துவிடக் கூடாதென இந்த ஏற்பாடு…..

இப்படி முகம் மறைப்பதெல்லாம் காகதீய தேச வழக்கமில்லைதான்…..வட தேசங்களில்தான் இப்படி வழமையுண்டென கேள்விப்பட்டிருக்கிறாள்….. ஆனால் இப்போது இங்கு இவள் இப்படி அணிந்து கொண்டால் யார் ஏன் என எப்படி கேட்டுவிட முடியும்?

ஆலோசனை மண்டபத்திற்குள் நுழைந்த இவளை கோட்டை தலைவன் சைலபத்ரன்  இளவரசிக்கு உரிய பூரண மரியாதையுடன் இயல்பாய் எதிர்கொண்டான்…...சூழ்நிலை இவளுக்கு தெரியாது என எண்ணி விவரிக்கவும் முற்பட்டான்…..

ஆனால்  தன் உடை அமைப்பிற்கு ஒத்த உடை உடுத்தியிருந்த மற்றொருவனுடன் அதுவரையும் தீவிரமாய் எதையோ கூறிக் கொண்டிருந்த அந்த பாண்டிய சேனாதிபதியோ இவளை இயல்பாய் பார்க்கவில்லை…..

அவன் பார்வை மாறி இருந்தது…… கண்டு கொள்வானோ???

தூக்கத்திலிருந்து கண் விழித்த ப்ரியாவிற்கு பார்வை  முதலில் நமநமத்தது…… இதுவரை அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்த கனவின் உணர்விலிருந்து வெளியே வர கஷ்டப்பட்டாள்…..

கொஞ்சம் கொஞ்சமாய் இவளது ரிஜிஸ்டர் மேரேஜ்….இவள் விவன் வீட்டிற்கு வந்தது எல்லாம் நியபகம் வர சட்டென எழுந்தாள் இப்போது…..

இவள் படுத்திருந்த பெட்டிற்கு எதிரில் ஒரு சேரில் உட்கார்ந்தபடி  இன்னும் அதே பட்டு வேஷ்டி சட்டையில் தூங்கி இருந்தான் விவன்….அதுவும் தன் நெற்றியில் கைவைத்து பிடித்தபடி…..

இவள் கனவில் அந்த சேனாதிபதி யோசிப்பதற்காக நெத்தியில் கைவத்தானே அப்படியே வைத்திருந்தான் விவன்……சட்டெனதான் உறைக்கிறது கனவில் வந்த சேனாதிபதி விவன்தானே…..இவள்தான் இளவரசி…..இது என்ன கனவு……????

இவள் அசைவை உணர்ந்து கண்விழித்தான் விவன் இப்போது….

இவளுக்கு இருந்த அரைகுறை குழப்ப நிலை……வினோதமான மன நிலை….ஒரு வகையான இயல்பற்ற உடல்நிலை…..

என்ன காரணமோ……”உங்களுக்கு தென்காசி கிங்க் பராக்கிரம பாண்டியன தெரியுமா விவன்?” அவன் என்ன நினைப்பான் என்ற நினைப்பே இல்லாமல் கேட்டு வைத்தாள்…..

அவன் முகத்தில் அப்படி ஒரு ஆச்சர்யமும் கொஞ்சம் அம்யூஸ்ட் உணர்வும்…..

பின்ன் இப்டி ஒரு சிச்சுவேஷன்ல எந்திரிக்கிற பொண்ணு இப்டி ஒரு கேள்விய கேட்கும்னு இவன் எப்டி எதிர் பார்க்க….?

“ஏன் ரியாம்மா திடீர்னு அவரப்பத்தி..….என் நேட்டிவ் தென்காசி பக்கம்தான….. சோ அவரப் பத்தி கேள்விப் பட்றுக்கேன்….இன்ஃபேக்ட் அவர் எங்களுக்கு ரிலடிவ்னு கூட பேச்சு உண்டு…..” ஒரு வித சிறு புன்னகையுடன் சொன்னான். அவன் பார்வை அதென்ன பார்வை?? இவளை குழந்தை போல் பார்க்கும் ஒரு பார்வை….

அவன் பதிலில் இவளுக்கு என்ன யோசிக்க என தெரியவில்லை……ஏனெனில் இவளுக்கு கூட பூர்வீகம் கனவில் வரும் ருயம்மாதேவியின் சொந்த ஊரான முன்காலத்தில் ஒருகல்லு என அழைக்கப்பட்ட தற்போதைய வாராங்கல் சிட்டிதான்.

சட்டென தோன்ற “உங்களுக்கு மின்மினி பத்தி தெரியுமா?” அடுத்த அபத்த கேள்வியை கேட்டிருந்தாள்.

இப்போது சட்டென சிரித்த அவனோ…..பின் இவள் நெற்றி சுருக்கிய தவித்த பார்வையை உணர்ந்தவனாக சிரிப்பை நிறுத்தி….மிக மென்மையாக இவள் கண்களைப் பார்த்து…”ம் தெரியுமே….ரெண்டு மின்மினியப் பத்தி” என்றான்.

ரெண்டு மின்மினியா….???? மிரண்டு போய் பார்த்தாள் இவள்…..

தொடரும்

ஃப்ரெண்ட்ஸ்…..சீரீஃஸ் எழுதும் போது சில எப்பில இந்த எப்பிக்கு கண்டிப்பா மத்தவங்க வியூஸ் தெரியனும்….அப்பதான் அடுத்த பார்ட் பெட்டரா ப்ரொசீட் செய்ய முடியும்னு ஒரு சில எப்பி இருக்கும்….அப்படி ஒரு எப்பி இது…..உங்க வியூஸ் ஷேர் செய்ங்க ப்ளீஸ்… தேங்க்ஸ்.

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1063}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.