(Reading time: 22 - 43 minutes)

முடிவு செய்துவிட்டாள்…..இவள் நிச்சயமாய் அவனோடு சென்றாக வேண்டும் எதிரியை சந்திக்க…. “எனது பெயர் ருயமருத்ரன்…..” அழுத்தமாய் வந்தது இவள் பதில். அவன் புரிந்து கொள்வான் என எதிர்பார்த்தாள்.

அவனும் ஏமாற்றவில்லை….”அப்படியானால் நீர் இத் தேச மன்னரின் குடும்பம் என்றாகிறது….” ருத்ரன் என்ற பெயரை இவளது குடும்பத்தினர் சூடிக் கொள்வதை அவன் அறிந்திருப்பதை வெளிப் படுத்தினான்.

 “ஆனால் மன்னருடனான எங்கள் சந்திப்பில் உம்மை பார்த்த நியாபகம் எனக்கில்லையே…..” அவன் சாதாரணமாக கேட்டாலும் இக் கேள்வியின் உட்பொருள்….அவன் இவள் பதிலை நம்பவில்லை என்பது தானே…..

“இச் சந்திப்பை நான் வெறுத்தது காரணமாயிருக்கலாம். “ அலட்சியமாகவே வந்தது இவள் பதில். சினம் காரணம்.

அவன் புறம் அதற்கு மறு உத்தாரம் எதுவும் இல்லை.

சில நொடி மௌனத்திற்குப் பின் இவளேதான் பேச்சை தொடங்கினாள்…..ஏனோ அவனை வருத்தியது போன்ற ஒரு உணர்வு உண்டாகி இருக்க……வைரியாயினும் வீட்டிற்கு வந்த விருந்தினனை வெறுப்பது முறையல்ல என்ற ஒரு உறுத்தல் உணர்வில்…. ஒரு இயல்பு நிலையை இருவருக்குமிடையிலும் கொண்டு வர எண்ணி பேசமுற்பட்டாள்….

“எனது வருகை ரகசியமானது…..அதன் ரகசியம் காக்கபட வேண்டும்…” தான் அரசவை சந்திப்பிற்கு வராமைக்கான காரணத்தை மாற்றினாள்.

ஒரு வகையில் இரண்டும் உண்மை……அரசவை காரியங்களில் பெண்கள் கலந்து கொள்ள கூடாதென்ற கலாச்சாரமெல்லாம் இவளது தந்தையும் மன்னருமான ப்ரதாபருத்ரரிடம்  கிடையாது….…

ஆனால் நடந்த பேச்சு வார்த்தை இவளுக்கு விருப்பமற்ற ஒன்று……அதோடு விஷயத்தில் இவள் மண காரியமும் இணைந்திருப்பதால் இவள் கலந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இங்கு யாருக்கும் கிடையாது…… மேலும் இவ்வாறு தலைநகரிலிருந்து விலகி செல்லும் பயணங்களில் அரசகுமாரிகள் ஈடுபடும் போது…..அஃது பாதுகாப்பு கருதி ரகசியமாகவே வைக்கப்படும்.

இதற்கும் பாண்டிய சேனாதிபதி பதில் கூறவில்லை.

“ஏதோ பேச முற்பட்டீர்கள்….” அவனை பேச தூண்டினாள்.

“ஆம்…..அதை கோட்டை தலைவனிடம் கேட்டுக் கொள்கிறேன்……” இப்படியாய் உரையாடலை முடித்துவிட்டான் அவன்.

என்னைப் பற்றி கோட்டைதலைவனிடம் விசாரிக்காதீர்கள் என சொல்ல இவளால் முடியவில்லை…..அது வேறு வகை சந்தேகத்தை கிளறும்…..ஆக சமாளித்துக் கொள்ளலாம் என மௌனமாகவே இருந்து கொண்டாள்.

ஏனெனில் இவளது ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவனின் பெயரும் ருயம்ருத்ரன்…..இந்த சேனாதிபதி ருயம்ருத்ரனைப் பற்றி விசாரித்தால்….அப்படி ஒரு நபர் உண்டு ஆனால் அவர் இங்கு இல்லை என்றுதானே தகவல் கிடைக்கும் இவனுக்கு….

இவள் ஏற்கனவே தன் வருகை ரகசியமானது என சொல்லிவைத்து விட்டாளே…. ஆக சேனாதிபதிக்கு சந்தேகம் வர சாத்தியங்கள் வெகு குறைவே…..

அடுத்து எல்லாம் துரிதகணத்தில் நடந்தேறியது……

இந்த பாண்டிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு  இன்று காலைதான் இவளது தந்தை பிராதபருத்ரர் கோல்கொண்டாவிலிருந்து கிளம்பி தங்களது தலைநகரான ஒருகல்லு நகர் நோக்கி சென்றிருக்கிறார்….

அவரோடு வந்திருந்த பாதுகாப்பு படையும் அவருடனேயே சென்றாகிவிட்டது…… நடந்த பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின் நிமித்தம் தற்கொலை முடிவுக்கே வந்திருந்த இவளோ அந்த முடிவை செயல் படுத்த இங்கு சற்று எளிதாயிருக்கும் என்ற வகையில் ஏதேதோ காராணம் சொல்லி இங்கேயே தங்கிவிட்டாள்…..

இவள் பாதுகப்பு நிமித்தம் கோட்டையில் விட்டு செல்லப் பட்டிறுக்கும் ஒரு நூறு வீர்ர்களையும் சேர்த்து 200 பேர் இங்கிருந்தால் அதிகம்….அதை வைத்து இவர்கள் ஒரு சைன்யத்தை எதிர்த்தாக வேண்டும்.

அதோடு இந்த பாண்டியர்களின் உள்நோக்கத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்….அதற்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு திட்டத்தோடு  இவள் கோட்டைத்தலைவனின் இருப்பிடத்திற்கு இந்த பாண்டிய சேனாதிபதிக்கு வழி காட்டினாள்…

அவனை முன் செல்ல அனுமதித்து இவள் வெகுவாக பின் தங்கினாள்….

“படிகள் வலது புறம் திரும்புகிறதல்லவா….அங்கு சென்றதும் வீரர்களுக்கான தங்கும் வளாகம்  உமது இடக்கைப் பக்கமாய் சற்று தொலைவில் தெரியும்….” திசை சொன்னாள்.

இந்த சேனாதிபதி மன்னரை சந்தித்த பொழுது நிச்சயமாய்  கோட்டை தலைவர் சைலபத்ரனுடன் அறிமுகம் நடந்தேறி இருக்கும்…..ஆக இவள் நின்று அறிமுகப்படுத்த தேவையில்லை….. சைலபத்ரனை இந்த சேனாதிபதி பார்க்கவும் இவள் இங்கிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என திட்டமிட்டிருந்தாள்.

அதற்கு ஏற்ப வீர்ர்களின் வளாக முற்றத்தில் நின்றிருந்த கோட்டைத் தலைவனோ  இவனது வேக காலடி சத்தம் தொலைவில் கேட்கும் போதே திரும்பிப் பார்த்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.