(Reading time: 12 - 23 minutes)

ண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 

நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை 
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை 
நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை
கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்
குறு நகை தனை காட்டி நறு மலர் சூடி விட்டான்
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 

தங்களுக்கு பிடித்த முருகனை நினைத்து சகோதரையர் இருவரும் தங்கள் இனிமையான குரலில் பாடி முடிக்க, அமைதியுடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே மெய்மறந்து போயிருந்தனர்.

பாடல் முழுவதும் கண் மூடி லேசாக புருவம் சுளித்து ஜிமிக்கிகள் ஆட பாட கொண்டிருந்தவள் ஒருவித ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்!! ஆனால் அவளோ யாரையும் பார்க்காமல் பாடி முடித்து கண்விழிக்க, அவள் கண் பார்த்தது அவன் முகம் தான்!!

தன்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்த அவன் பார்வை இவளை எதுவோ செய்ய சட்டென பார்வையை திருப்பிக் கொண்டாள்.

சிவநேசன் கைதட்டி தன் பேத்தியரை பாராட்ட, அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பாராட்டி கொண்டிருந்தனர்.

மணமகனின் சொந்தத்தில் ஒருவர்,

"ரெண்டு பொண்ணும் அம்சமா இருக்காங்க கோமதிம்மா, எனக்கு ஒரே பையன் தான இருக்கான் என்ன பண்றது? அவனுக்கு உங்க மூத்த பேத்தியை கொடுக்கறீங்களா?" என்று சட்டென ஆர்வத்தில் கேட்டுவிட, எப்போதும் வரும் கோபத்திற்கு பதிலாக நித்திலாவிற்கு படபடவென வந்தது. மெல்ல இமை மலர்த்தி அவனை பார்த்தாள்!! அவன் முகத்தில் விருப்பமின்மை அப்பட்டமாய் தெரிந்தது..!! யார் இவன்?! இவன் எதற்கு இப்படி பார்க்கிறான்? இப்போது இவனுக்கு பிடிக்கவில்லையோ?! கேள்விகள் மனதிற்குள் வர, முதல் சந்திப்பை முற்றிலுமாய் மறந்திருந்தால் அவள்!!

அவன் முகம் சட்டென்று ஞாபகத்திற்கு வரவில்லை!! அதற்குள் சாரதா,

"இல்லைங்க தப்பா எடுத்துக்காதீங்க இப்போ தான் காலேஜ் முடிச்சு வேலைக்கு போக ஆரம்பிச்சுருக்கா, இன்னும் வரன் பார்க்க நாங்க ஏதும் ஆரம்பிக்கலை, கல்யாணம் பண்றத முடிவு பண்ணின கண்டிப்பா நம்ம கலந்து பேசலாம்" என்று சமாதானமாகி சொல்லிவிட்டு நித்திலாவின் முகம் பார்க்க,

'இதுக்கு தான் வர மாட்டேன்னு சொன்னேன்' என்பது போல அவரை பார்த்து விட்டு திரும்பி கொண்டாள்.

"என்ன இப்படி சொல்லறீங்க காலாகாலத்துல பண்ணிட வேண்டியது தான?, என்ன மதனி?" என பாவனாவின் அம்மாவிடம் அவர் வினவ, அதற்குள் மணமகனின் பாடி உதவிக்கு வந்தார்.

"இப்போ தானே ஒரு கல்யாணத்தை ஆரம்பிச்சுருக்கோம் முதல இதை நல்ல படியா முடிப்போம் பொறவு மத்தத பேசிக்கலாம் என்ன மதினி?" என கோமதியிடம் அவர் கேட்க,

"ஆமா நீங்க சொல்றதும் சரிதேன்" என்று ஒப்புக் கொண்டார். அனைவரும் வேறு விசயத்திற்கு தாவ, இன்னும் அவன் முகத்தில் திருப்தியின்மை..!!
மீண்டும் மீண்டும் ஏனோ அவன் முகம் பார்ப்பதை தவிர்க்க முடியாமல் அவள் குழம்பி கொண்டிருக்க, சட்டென்று அவன் முதன் முதலில் சந்தித்தது நினைவு வந்தது..!! ஆச்சர்யத்துடன் விழிகள் பெரிதாக அவள் அவனை பார்க்க, அவளுக்கு நினைவு வந்துவிட்டதென அவனுக்கும் புரிந்தது. ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி அவன் பளிச்சென சிரிக்க, பார்வையை தாழ்த்தி கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.