(Reading time: 12 - 23 minutes)

நிஜமாகவே அவன் தான? எப்படி இங்க? ஒரு வேலை என்னை பத்தி எல்லாமே தெரிஞ்சு இங்க வந்தானோ? இது எப்படி நடக்க முடியும்? மாப்பிள்ளை வீடு பக்கம் உட்காந்திருக்கன் மாப்பிள்ளை வீடோ?

மீண்டும் கேள்விகள் உதயமாக, அனைவரும் சாப்பிட பந்திக்கு செல்ல அவளும் அவர்களுடன் சென்றுவிட்டாள். அவள் சாப்பிட்டு முடியும் வரையிலும் அவனை காணவில்லை!! அவ்வப்போது விழிகள் அலைபாய்ந்து ஓய்வதை மறைந்திருந்து அவன் பார்த்துக் கொண்டிருந்தான்!!

அவள் சாப்பிட்டு முடிந்து கைகழுவும் இடத்திற்கு செல்ல, மறைந்திருந்தவன் வெளி வந்து,

"ஒய் ஜிமிக்கி, என்ன நியாபகம் இருக்கா?" என்று சிரிப்புடன் கேட்க, ஒரு கணம் திகைத்தவள் விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

அன்று கூட ஏதோ ஓரிரு வார்த்தை பேசினாள். ஆனால் இன்று??!! பாடலை முடிக்கையில் அவன் பார்த்துக் கொண்டிருந்த அந்த பார்வை! அதன் தாக்கம்!! மூச்சு திணறுவது போல உணர்ந்தாள் நித்திலா!! இது அவள் இயல்பு இல்லையே??!

'ச்சே ச்சே அதெல்லாம் ஒண்ணுமில்லை தனக்கு தானே கூறிக் கொண்டாள்' எதிரே வந்த நேத்ராவிடமும் கோமதியிடமும் மாடிக்கு சென்று ஓய்வெடுப்பதாக சொல்லிவிட்டு, அவர்களுக்கான அறையில் சென்று தன்னை கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொண்டாள். உடை மாற்றலாம் என்று நினைத்து பேக்கை திறந்தவளுக்கு உள்ளே புடவையும் தாவணியும் மட்டும் இருப்பதை கண்டு சாரதாவின் மேல் கோபம் கோபமாக வந்தது!

அவர் தான் இதை செய்திருப்பார், அவள் சென்னையில் போடும் நைட் ட்ரெஸ் வேண்டாம் சரி, அதறகக ஒரு நைட்டி கூடவா எடுத்து வரக்கூடாது. எரிச்சலாக வந்தது. கழுத்திலும் கைகளிலும் இருந்த நகைகளை கழட்டி வைத்தவள், பாவனாவை தேடி சென்றாள். அவளிடம் நைட்டி வாங்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவள் செல்ல, அவளை சுற்றி இருந்த கூட்டத்தை பார்த்து எண்ணத்தை மாற்றி கொண்டு மீண்டும் மாடிக்கு வந்தாள்.

அங்கிருந்த மரஊஞ்சலில் அமர்ந்தபடி யோசித்துக் கொண்டிருந்தவளை தூக்கம் தழுவ, அப்படியே ஊஞ்சலிலேயே உறங்கி போனாள். சாப்பிட்டு விட்டு இவளை தேடி வந்தவன் ஊஞ்சலில் உறங்கி கொண்டிருந்தவளை ரசித்துக் கொண்டிருந்தான்..!! காதில் தொங்கிய ஜிமிக்கி அவள் கூந்தலில் மாட்டிக் கொள்ள தூக்கத்தில் சிணுங்கியபடி அவள் உறங்க, அவளுக்கு தெரியாதபடி ஒற்றை காதில் இருந்த ஜிமிக்கியை அவன் கழட்டும் போதே அங்கே யாரோ வர, ஒரு ஜிமிக்கியுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.

சற்று நேரத்தில் வந்த சாரதா, அவள் இப்படி உறங்குவதை கண்டு கோபமுற்று அவளை எழுப்பி உள்ளே கூடி சென்றார்.

"அறிவிருக்கா டி, இப்படி தூங்கிட்டு இருக்கா அதும் வெளியில, இது நம்ம வீடா?"

"ப்ச் தூக்கம் வந்துச்சு"

"வந்தா.. ரூம்ல தூங்கு.. முதல்ல புடவையை மாத்திட்டு தாவணி போட்டுக்கோ போ" என அவர் அவளை அதட்ட,

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என்று முணுமுணுத்து விட்டு உடை மாற்றிக் கொண்டு வந்தவள், ஒரு காதில் இருந்த கம்மலை கழட்டிவிட்டு, இன்னொன்றை கழட்ட செல்ல அப்போது தான் கவனித்தாள் அதை காணவில்லை!!

இவ்வளவு நேரம் துக்க மயக்கத்தில் அதை கண்டுகொள்ளாமல் இருந்தாள்.

"ஐயையோ அம்மா பார்த்தாள் அவ்வளவு தான்.. தங்கத்தை தொலைச்சிட்டேன்னு தெரிஞ்சா??!! எங்க தேடறது?" என்று தனக்கு தானே புலம்பியவள், அவள் சென்ற இடங்களுக்கு எல்லாம் சென்று தேடி விட்டு ஊஞ்சல் அருகில் செல்ல, அங்கே அவன் யாருடனோ போனில் பேசி கொண்டிருந்தான்!!

"என்னது? உடனே வரணுமா? நோ டாட்.. சொல்லிட்டு தானே வந்தேன்?"

"........."

"ஆமாம்.. ஆனால்.."

"........"

"புரியுது.. இங்க ஒரு முக்கியாயமான வேலை"

'............."

"சரி இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பி வரேன்" சலிப்புடன் சொல்லிவிட்டு அவன் போனை அணைக்க, அதை கேட்டு கொண்டிருந்தவளுக்கு ஏனோ சலிப்பு, உடனே செல்கிறானா?!

அவன் இவ்ளபுரம் திரும்ப சட்டென்று ஜிமிக்கியை தேடுவது போல அவள் பாவனை செய்ய, அவள் அருகில் வந்தவன்,

"என்ன தேடுற? என்னை பாத்ததும் காணாம போன உன் மனசையா?" என்று கேட்டான்.

"ம்ம்ம் ஆசை தான்"

"ம்ம்ம் ஆமாம் நிறைய"

"ஹலோ"

"எஸ் டார்லிங்"

"இந்த பேச்செல்லாம் என்கிட்ட வேண்டாம்"

"வேற யார்கிட்ட பேசவும் எனக்கு விருப்பம் இல்லயே"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.