(Reading time: 8 - 16 minutes)

"ன்ன இது?என் அருகே வர மறுக்கிறது?நான் எவ்வாறு மஹாதேவருக்கு ஆராதனை செய்வேன்?"-அவள் தனக்கு தானே புலம்பினாள்.

அச்சமயம் அங்கு அஸ்வத்தின் காலடி சப்தம் கேட்டு திடுக்கிட்டாள்.

"இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் கன்னிகையே!"-சற்று கோபமான பாவனையோடு உரைத்தது இளவரசர் குரல்.விரிந்த விழிகளில் அச்சத்தை கொண்டு இளவரசரை தாக்கினாள் அவள்.

நிச்சயம் அது அவரின் மனதினை வென்றிருக்கும்.அதில் ஐயமில்லை.

எனினும் உயர்ந்த குரல் தாழாமல் பேசினாள் அவர்.

"யாது செய்கிறாய் என்பது நான் விடுத்த வினா!"

"நான்...நான்...இறைவனுக்காக தாமரை மலரை எடுத்துச்செல்ல வந்தேன்!"

"ம்...இது இளவரசரின் பிரியத்திற்குரிய இடம் என்றும்!இந்நந்தவனத்திற்குள் பெண்கள் பிரவேசிக்கலாகாது என்பதையும் நீ அறிய மறந்தாயா?"

"இல்லை...நான் அறிவேன்!எனது இல்லத்தின் அருகே உள்ள குளக்கரையில் இன்று தாமரைகள் மொட்டவிழவில்லை.வேறு உபாயமின்றி தான் இங்கு வந்தேன்!எனை மன்னியுங்கள்!!"-அவள் தலைக்குனிந்தப்படி அங்கிருந்து நகர பார்க்க,அவளது கரத்தை பற்றினார் இளவரசர்.மிகவம் உரிமை வாய்ந்த அத்தீண்டலில் நுட்பமாய் சிலிர்த்துப் போனாள் யாத்ரீகா.

"எண்ணிய எண்ணம் ஈடேறாமல் நீ செல்வாய் என்றால்,அது எனக்கு தண்டனையல்லவா?"

"இளவரசே!"

"நான் கூற வந்ததன் பொருள்..இறைவன் என்னை தண்டிப்பான் அல்லவா?"

"................'

"பொறுத்திரு...!"-என்று அக்குளத்தில் இறங்கியவர்,அவள் விரும்பிய தாமரை மலரை பறித்து எடுத்து வந்தார்.

"நீ வேண்டிய வஸ்து!"-என்று அவளிடம் அதனை நீட்டினார்.அதை பெற்றுக் கொண்டவளின் முகம் ஏனோ சிவந்திருந்தது.

"தமது உடல்நலன் எவ்வாறு உள்ளது?"

"ம்..நீ தந்த ஔஷதம் இனி யாமே விரும்பினாலும் என் உடல்நலனில் கேடு விளையாதப்படி செய்தது!"

"விடைபெறுகிறேன்!"

"சற்றுப்பொறு!உன்னிடம் சிலவற்றை கூற வேண்டும்!"

"என்ன?"

"அது...!"-அவர் கூற வாய் திறக்கயில்,பேரிகை முழங்கியது.இருவரும் திடுக்கிட்டு திரும்பினர்.யாத்ரீகையின் முகத்தில் அச்சம் குடிக்கொள்ள அங்கிருந்து நகர நினைத்தவளை கரம் பற்றி தடுத்தார் இளவரசர்.

வருகை தந்தது காளிங்க தேச ராஜகுமாரி பிரக்யாயினி!!!

"இளவரசரை பணிகின்றேன்!ராஜகுமாரி அவர்கள் இவ்விடம் உடனடியாக பிரவேசிக்க ஆணை பிறப்பித்த காரணத்தால் யாம் தமது அனுமதியின்றி இங்கு வந்தோம்!மன்னித்தருளுங்கள்!"-என்றான் சாரதி.

ரதத்திலிருந்து இளவரசி இறங்கி வந்தாள்.முகத்தில் இருந்த சினத்தை மறைத்தவன் மௌனமாக நின்றான்.

இறங்கி வந்தவள் கவனம் இளவரசரின் பின் நின்றிருந்த கன்னிகையின் மேல் பதிந்தது!!அவளது அழகிய வதனம் அவளை பொறாமை கொள்ள வைத்தது.அவளது மன எண்ணத்தை பாவம் அக்கன்னிகை அறிந்திருக்கவில்லை.ஆனால் இளவரசர் ஊகித்துக்கொண்டார்.

"பணிகிறேன் ராஜகுமாரி!'

"பணிவான வணக்கங்கள்!'

"தாம் இவ்விடம் பிரவேசிக்க காரணம்?"

"எழில்பொங்கும் இப்பூமியின் வதனத்தை காணவே வருகை தந்தேன்!குறை ஏதும் கண்டீரா?"-கர்வமாக ஒலித்தது அவளது குரல்.

"இவ்விடத்திற்கு அதிபதி நான்!எனதனுமதியின்றி இங்கு பிரவேசிக்கும் உரிமை எனது தாய்மார்களை தவிர எவரும் இல்லை."-அவள் திடுக்கிட்டாள்.

"பிரவேசிப்பவர் மக்களை ஆள்பவராயினும்,மன்னரை ஆள்பவராயினும் (இறைவன்)எனதனுமதி அவசியம்!!"-இளவரசரின் பேச்சு அவளை கோபமுற செய்தது.அதுவும் ஒரு தாதி போன்ற பெண்ணின் முன்னால் ஏற்பட்ட ஒதுக்கலை அவமானமாய் கருதினாள்.

"எனில் தமது புஜங்களின் பின் மறைந்திருக்கும் இக்கன்னிகை இங்கு எப்போதும் பிரவேசிக்கும் உரிமையை தாம் எவ்வாறு நல்கினீர்கள்?"

"மன்னிக்கவும்..என் முன் அவளை சிறுமைப்படுத்துவதை நான் என்றும் அனுமதியேன்!இவள் என் அன்னையர்களுக்கு நிகரானவள்!இவளை ரட்சிக்கும் பொறுப்பு எனதாகும்!"-யாத்ரீகை விழி அசையாமல் இளவரசரை பார்த்தாள்.

"சாரதி...ரதத்தை அரண்மனை நோக்கி திருப்பு!தேவியர்கள் இருவரை தவிர யாராயினும் எனதனுமதியின்றி இவ்விடம் பிரவேசிக்க கூடாது!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.