(Reading time: 8 - 16 minutes)

"த்தரவு!"-பிரக்யாயினி கண்கள் சிவந்தன.அக்குரோதம் யாத்ரீகையின் மேல் விழுந்தது!!உடனடியாக அவ்விடம் நீங்கினார்.

அவர்கள் சென்றதும் யாத்ரீகையின் பக்கம் திரும்பினார் ஆதித்யர்.

"நான்..உன்னிடம்.."

"மன்னியுங்கள் இளவரசே..!ஆலயத்திற்கு நான் உடனடியாக செல்ல வேண்டும்..!நான் செல்ல அனுமதி வழங்குங்கள்..!"-அவர் சில நொடிகள் தயங்கி பின்,

"சென்று வா!"என்றார்.அவள் மௌனமாக நகர்ந்தாள்.

"மாமன்னரை பணிகின்றேன்!அரண்மனைக்கு ரிஷி ஞானபோதர் வருகை தந்திருக்கிறார்!"-என்றான் வாயிற்காவலன்.

"ரிஷி ஞானபோதர்?யாமே வந்து அவரை வரவேற்கிறோம்.."-மன்னர் அரண்மனை வாயிலுக்கு விரைந்தார்.

"பணிகின்றேன் ரிஷி ஸ்ரேஷ்டரே!பணிகின்றேன்!"

"நலமோடு வாழ்வாய்!"

"தமது வருகை பைரவக்கோட்டையின் பாக்கியம்!வர வேண்டும்...!"-அரசர் வரவேற்க ஞானபோதரின் கண்கள் அங்குமிங்கும் உழன்று சில நொடிகள் எதையோ தேடின.

பின் அமைதியாக அரண்மனைக்குள் நுழைந்தார்.

"தமது வருகைக்கான காரணம் அறிந்து தமது இச்சையை நிறைவேற்ற மனம் துடிக்கிறது!"

"யாசகம் ஒன்றை வேண்டியே இவ்விடம் வந்தேன்!"

"ஆணையிடுங்கள் ஐயனே...!"

"பைரவக்கோட்டையின் வடக்கில் இருக்கும் அருவியின் அருகே சிவாலயம் ஒன்று எழுப்ப வேண்டும்!!!"

"சித்தம்...நல் முகூர்த்தம் ஒன்றை குறித்து விரைந்து அப்பணியினை ஆற்றுகிறேன்!"

"அதற்குமுன்,சக்கரவர்த்தினியை யான் இக்கணமே சந்திக்க வேண்டும்!"-அரசரின் மனம் துணுக்குற்றது.

"யாரங்கே?"-ஒரு தாதி வந்து நின்றாள்.

"தேவியரை உடனே அழைத்து வா!"

-அப்பெண் அந்தப்புரம் நோக்கி விரைந்தாள்.

"ரிஷி போதரே!வினா எழுப்புவதற்கு மன்னியுங்கள்...தமது வதனத்தின் வாட்டத்தின் காரணம் என்ன?"

"பெரும் அனர்த்தம் நிகழ உள்ளது அரசே"

"அனர்த்தமா?"

"ஆம்...பைரவக்கோட்டையின் நலத்திற்கு பெரும் அனர்த்தம் நிகழ உள்ளது!"

"அதனை நிகழ்த்தப்போவது யார்?இக்கணமே அன்னவரை சிரசேதம் செய்ய உத்தரவிடுகிறேன்!"

"அப்பணியினை ஆற்ற போவது தமது புதல்வன் ஆதித்யனே!!"-அரசருக்கு உலகமே சுழல்வதாக தெரிந்தது.

"ஆதித்யனா?"

"ஆம்...!"-அவர்கள் உரையாடும் போதே தேவியர் இருவரும் வந்தனர்.

"பணிகிறோம் மகரிஷி!"

"மங்களம் உண்டாகட்டும்!"

"தமது விருப்பம் அறிந்து பணிவிடைகள் புரிய காத்திருக்கிறோம்!"

"நான் தேவி காத்யாயினி இடத்தில் வரம் ஒன்று வேண்டவே வந்தேன்!"

"கூறுங்கள்...யாதாயினும் சிரம் மேற்கொண்டு செய்கிறேன்!"

"தாம் தமது எண்ணத்தில் புதல்வனாய் வீற்றிருப்பவனிடத்தில் எவ்வித ஆணையோ!யாசகமோ!வரமோ!இடுதலோ அல்லது பெறுதலோ கூடாது!"-அவரது கூற்று தேவியர் இருவரையும் குழப்பியது.

"அதே வேண்டுதலை மன்னரிடமும் வேண்டுகிறேன்!"-மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,ரிஷி மேலும் தொடர்ந்தார்.

"தங்களின் முதற்புதல்வன் விவாஹ பந்தத்தை அறுக்க வேண்டும்!"-அனைவரும் உட்சப்பட்ச அதிர்ச்சிக்கு சென்றனர்.

"வரமளியுங்கள்..."

"குருவே...தமது இரண்டாவது வேண்டுதல் நிகழாத காரியம்!குருக்ஷேத்திரனுக்கு காளிங்க தேச இளவரசியை மணம் முடிக்க எண்ணம் கொண்டுள்ளோம்!"

"எனதாணைக்கு அடிப்பணியுங்கள் அரசே...இல்லையேல்,எனது சாபத்திற்கு அனைவரும் பஸ்பமாக நேரிடும்!!"

".................."

"திங்கள் 3 அவகாசம் அளிக்கின்றேன்!அதற்குள் முடிவெடுங்கள்.."-கோபமாக புறப்பட்டார் ரிஷி.

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:969}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.