(Reading time: 11 - 22 minutes)

கௌரிக்கு அவர்கள் வீட்டில் அம்புஜத்தை பார்த்து ப்ராக்டிஸ் ஆகி இருந்ததால் எதுவும் புதியதாக இல்லை.  முடிந்தவரை தன் மாமியாரை டென்ஷன் ஆகாமல் பார்த்துக்கொண்டாள்.   அதிகாலை ஆறு மணியளவில் ஜானுவாச ஊர்வலம் போல் ஓப்பன் டாப் காரில் வந்திறங்கிய அத்தங்காவைப் பார்த்து எதற்கும் அசராத கௌரியே சிறிது ஆடிப் போய்விட்டாள்.

“வாங்கோ.... வாங்கோ அத்தங்கா..... உங்க வரவுக்காக விடிய காலம்பறலேர்ந்து எல்லாரும் காத்துண்டு இருக்கோம்....”, என்று பத்து முகமன் கூறி அவரை வரவேற்றார்.  இங்கு நயன அபிநயங்கள் எதுவும் இல்லாமல், அத்தங்கா இறங்கிய அடுத்த நிமிடம் அத்திம்பேர் இறங்கி அவர் அருகில் நின்று விட்டார்.

“என்னடா பத்து எப்படி இருக்க...... கல்யாண வேலையெல்லாம் எப்படி போயிண்டு இருக்கு.......”

“நாங்க எல்லாம் க்ஷேமமா இருக்கோம் அத்தங்கா..... கல்யாண வேலையெல்லாம் பேஷா நடந்துண்டு இருக்கு.... நீங்க வந்துட்டுளேன்னோ இனிமே முழுக்க களை கட்டிடும் பாருங்கோ.....”

இவர்கள் பேசியபடியே பத்துவின் ஃப்ளாட்டை சென்று அடைந்தனர்.

“வாங்கோ அத்தங்கா.... வாங்கோ அத்திம்பேர்...... நன்னா இருக்கேளா”

“ஏண்டிம்மா லக்ஷ்மி.... ஆம்படையான் ஆத்து மனுஷா ஆத்துக்கு வந்தா கீழ வாசலுக்கு வந்து வரவேற்கணும்ன்னு தெரியாதா.... இதெல்லாமா சொல்லித் தருவா.....”, என்று ஆரம்பிக்க, பத்துதான் ஆஹா வந்த உடனேயே ஆரம்பிக்கிறார்களே என்று நெளிய ஆரம்பித்தார்.

“ஏண்டிம்மா நீதானே கௌரி.... இந்தாத்து மாட்டுப்பொண்ணு.... ஆத்து சம்பிரதாயமெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்றயா”

“ஆமாம் பாட்டி..... இங்க அம்மா எப்படி பண்றாளோ..... அதே மாதிரி அங்கயும் பண்றேன்.....”

“யாரு உன் மாமியார்தானே.... அவளுக்கே ஒண்ணும் தெரியாது...... இதுல அவள மாதிரியே நீயும்  பண்றயா... சூப்பர் போ.  உங்க கல்யாணத்துக்குத்தான் எங்களால வர முடியாம போச்சு”, என்று அங்கலாய்க்க நல்ல வேளை வரவில்லை என்று மொத்த குடும்பமும் சந்தோஷப்பட்டது.

“கௌஷிக் மேல் சட்டைய அவுத்துட்டு இடுப்புல அங்கவஸ்திரம் கட்டிண்டு வா....”, பங்கஜம் சொல்ல, கௌரி ‘ஙே’ என்று விழித்தாள்.  

“ஏன் கௌஷிக்... எனக்குத் தெரியாம ஏதானும் சிக்ஸ் பாக் வச்சுருக்கேளா.... பாட்டி அதைப் பாக்கத்தான் கூப்பிடறாளா”, கௌரி கேட்க, கௌஷிக் அவளைப் பார்த்து பல்லைக் கடித்தான்.

“உன் பொண்டாட்டிக்கிட்ட என்னடா குசுகுசுன்னு பேச்சு..... சீக்கிரம் வாங்கோ உங்க ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்றோம்”, என்று சொல்ல.... கௌஷிக் வேண்டா வெறுப்பாக சட்டையை அவிழ்த்துவிட்டு அங்கவஸ்த்திரத்தை கட்டிக் கொண்டு வந்தான். 

“ஏன்னா உங்களுக்கு வேறத் தனியா சொல்லணுமா... குழந்தைகள் நமஸ்காரம் பண்றா பாருங்கோ.... பக்கத்துல வந்து நில்லுங்கோ.....”, என்று சொல்ல,  அவர் ஆத்துக்காரர் அருகில் வந்து நின்றார்.

இருவரும் நமஸ்கரிக்கப் போக.... டிராஃபிக் போலீஸ் போல கைக்காட்டி நிறுத்தினார் பங்கஜம்.  இப்போது  என்ன என்பதுபோல் கௌஷிக் பார்க்க....

“ஏண்டா சென்னைய விட்டுப் போய்ட்டா நம்ம சாஸ்த்திரம், சம்ப்ரதாயம் எல்லாம் மறந்து போயிடுவியா......”

“என்னப் பாட்டி சொல்றேள்.....”

“அப்படியே படார்ன்னு நமஸ்காரம் பண்ற...... அபிவாதயே யாருடா சொல்லுவா....”, என்று கேட்க.... என்னது அபிவாதயேவா என்று ஜெர்க் ஆனான் கௌஷிக்.

பூணூல் போட்ட அன்று சொன்னது... அன்று சாஸ்த்ரிகள் சொல்ல சொல்ல அப்படியே காப்பி செய்து சொல்லிவிட்டான்.  அதன் பின் ஒரு ஒரு மாதத்திற்கு போகும் இடமெல்லாம் பத்து  டப்பிங் ஆர்டிஸ்ட்டாக  மாறி அவனுக்கு பதில் அபிவாதயே சொல்ல, அவன் காதில் கை வைத்து குனியும் ஆக்ட் மட்டும் கொடுத்தான்.  இப்பொழுது திடீரென்று பங்கஜம்  அபிவாதயே சொல்ல சொல்ல திரு திருவென்று முழித்தான் கௌஷிக். 

“அது பாட்டி.... தாத்தா காதுல மட்டும் விழறா மாதிரிதான் சொல்லணும்... வெளில யாருக்கும் கேக்கப்படாது.... இங்க தாத்தாக்கு காது லேசா கேக்காது இல்லையா.... அதனால கத்தி சொல்ல வேண்டாமேன்னு விட்டுட்டேன்”, எப்படியோ சமாளித்து தான் கௌரியின் நாயகன் என நிரூபித்தான்.

“லக்ஷ்மி.... ராமன் இப்போதான் ஃபோன்  பண்ணினார்.  அவரோட அம்மங்கா வந்திருக்காளாம்..... அவா நம்ம ஸ்வேதாவை பாக்கணும்ன்னு சொல்றாப்போல இருக்கு.... சாயங்காலமா வரலாமான்னு கேக்கறார்”

“ஓ வரச் சொல்லுங்கோளேன்.  அவா வந்தா கல்யாணத்தைப் பத்தி மத்த டீடைல்ஸ்லாமும் பேசிடலாம்”

“ஆமாடா பத்து..... வரச்சொல்லு..... கௌஷிக் கல்யாணத்துக்கே நான் இல்லாம நம்மாத்து சம்ப்ரதாயம் பாதி விட்டுப் பண்ணிட்டேள்..... இப்போ ஸ்வேதா கல்யாணத்துலயானும் நம்மாத்து வழக்கத்தை விடாம பண்ணிடலாம்.  சம்மந்தி ஆத்து மனுஷாக்கிட்ட கறாரா சொல்லிடலாம்”, என்ற குண்டைப் போட, லக்ஷ்மி அடுத்த ரவுண்டு மயக்கத்திற்கு சென்றாள்.

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:964} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.