(Reading time: 9 - 17 minutes)

"ஸாரி சார்!ஸாரி சார்!அவர் வந்துடுவார்.கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!"-கெஞ்சி பார்த்தான் மனோ.

"வாட் நான்சென்ஸ்?உன் எம்.டி.க்காக நாங்க காத்திருக்கணுமா?அவனோட வயசு எங்க அனுபவம்!நாங்க அவனை பார்க்க க்யூல நிற்கணுமா?"

"சார்!ச்சீப் அப்போவே கிளம்பிட்டாரு!எதுக்கு லேட் ஆகுதுன்னு புரியலை!கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார் ப்ளீஸ்..!"-அவன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு இளம் பெண் உள்ளே நுழைந்தாள்.

"சார்!பாஸ் வந்துட்டாரு!"-என்று கூறிவிட்டு வந்த வேகத்திலே திரும்பி சென்றாள்.அவள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடம்,உள்ளே நுழைந்தான் ஓர் இளம் வாலிபன்!ஆறடி உயரம் இருப்பான்!முகத்தில் கர்வம் நன்றாகவே தொனித்தது.தனது கூலிங் கிளாஸை கழற்றியப்படி உள்ளே நுழைந்தான்.அவனை கவனித்தவர் யாவரும் எழுந்து நின்றனர்.அவன் தன் கண்களாலே அனைவரையும் அமர உத்தரவிட்டான்.

வந்தவன்,நேராக வந்து தனது நாற்காலியில் அமர்ந்தான்.அவனது பார்வை தன் நேர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரையே அதிகமாக துளைத்தது.அருகிலிருந்த எவரையும் அவன் கண்டுக்கொள்ளவதாய் தோன்றவில்லை.

"லுக் மிஸ்டர்.ருத்ரா!நாங்க உங்களை விட பெரியவங்க!நீங்க இது மாதிரி எங்களை காத்திருக்க வைக்கிறது சரியில்லை!"-குரல் தந்தவரை ஆணவமாக ஒரு பார்வை பார்த்தான் அவன்.

"அப்போ!நீங்க கிளம்பலாம்!"

-அனைவரும் திடுக்கிட்டனர்.

"லுக்!உங்க கம்பெனியில இன்வஸ்ட் பண்ண போறது இந்த ருத்ரா!உங்களை நம்பி நான் இல்லை!பிடிக்காதவங்க...!"-அவன் கதவை நோக்கி,தன் கரத்தை காட்டினான்.

ஒருவரிடமும் பதில் இல்லை.

அவன் ஒரு சொடுக்கிட,விளக்குகள் அணைக்கப்பட்டு,திரையில் ஏதோ அரங்கேறியது.

யாரோ ஒருவர் அதனை அனைவருக்கும் விளக்கினார்.ஆனால்,அவனது பார்வை குறித்த ஒருவரிடம் மட்டுமே நிலைத்து நின்றது.

சில மணி நேரங்களில் விளக்குகள் உயிர்பிக்கப்பட்டன.

"ஸோ...வாட் இஸ் யுவர் ஒப்பினியன்?"

"உங்களுக்கு எவ்வளவு ஷேர் வரணும்?"

"60%"

"வாட்?"

"60% எனக்கு ஷேர் வரணும்!அதாவது,300 கோடி!"

"இது எங்களுக்கு பயங்கர லாஸ் தரும்!"

"மிஸ்டர்.பிரதீப்!இந்த டிலிங் நடக்கலைன்னா,உங்க கம்பெனி,ப்ராப்பர்டீஸ் எல்லாம் போயிடும் தெரியும்ல?"

"..............."

"விருப்பம் இருக்கிறவங்க சைன் பண்ணுங்க!"-அவன் மீண்டும் சொடுக்கிட,மனோ ஒரு கோப்பினை அனைவரது முன்னிலையிலும் வைத்தான்.வேறு உபாயமில்லை!அங்கிருந்தவர் ஒவ்வொருவராக அதில் கையெழுத்திட்டனர்.இறுதியாக ஒருவர்,தயங்கியப்படி கையொப்பமிட்டார்.

"கிரேட்!"-என்றவன்,தானும் அக்கோப்பையில் கையொப்பமிட்டான்.

"வேலையை ஆரம்பி!"-என்று மனோவிம் கூறிவிட்டு அங்கிருந்து நடையை கட்டினான் அவன்.

"ச்சீப்!ச்சீப்!"-வேகமாக சென்றவன் மனோவின் குரலில் தடுக்கப்பட்டான்.

"ச்சீப்!ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!"

".............."

"தம்பியை பற்றி!"-அவன் தன் நெற்றியில் கை வைத்தான்.

"நீங்க வீட்டுக்குப் போய் 1 வாரம் ஆகுது!"

"ப்ச்..மனோ!அதான் நீ இருக்கல்ல!"

"ச்சீப்!அவன் தனிமையில ரொம்ப கஷ்டப்படுறான் ச்சீப்!"-அவன் சில நொடிகள் ஏதோ சிந்தித்தான்.பின்,ஏதோ சிந்தித்தவன் தனது கண்ணாடியை மாட்டிக் கொண்டு பதிலுரைக்காமல் சென்றான்.

"ஸோ!இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க?"

"ரிலாக்ஸா இருக்கேன்!தேங்க்யூ!தேங்க்யூ!"

"இப்போ உங்க மில்ட்டி எப்படி இருக்காங்க?"

"மில்ட்டி இறந்துப்போய் 4 மாசம் ஆகுது கீதா!"

"ரியலி??"

"எஸ்...அவ இறந்தது கஷ்டமாக தான் இருக்கு!பட்,ஷி இஸ் நோ மோர்!ஐ ட்ரூலி மிஸ் ஹர்!"

"உங்களால அவங்க இல்லாமலும் வாழ முடியுமா?"

"............"

"சொல்லுங்க!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.