(Reading time: 9 - 17 minutes)

"வளோட வாழ்ந்த வாழ்க்கையை மறக்க முடியாது!அதை நினைத்துக்கிட்டு வாழ்ந்துடுவேன்!"

"வெரி குட்!உங்க ட்ரீட்மண்ட் இதோட முடியுது!இனி என் உதவி உங்களுக்கு தேவைப்படாது!ஆல் தி பெஸ்ட்!"

"தேங்க்யூ!"-அவள் சில கோப்புகளை அவனிடத்தில் தர,அவன் சிறு புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தான்.

கீதாவிடமிருந்து பெருமூச்சு வெளியானது!!

அது ஏனோ அலைபாயும் மனதை கட்டுப்படுத்தும் சமயம் கிட்டும் நிம்மதி,வேறு எந்த ஆஸ்தியின் மூலமும் கிட்டுவதில்லை அவளுக்கு!!

மனம் தன் தந்தையின் அரவணைப்பினை நாடியது!!

எண்ணற்ற காலங்கள் அவரை பிரிந்தாகிவிட்டது!!அந்தஸ்தை வழங்குவது யாராயினும் நிம்மதியை தருவது தாய்நாடல்லவா??

சிறு வயதில் நட்டு வைத்த புங்க மரம் இன்று என்னை போலவே வளர்ந்திருக்கும் அல்லவா??மனம் அலைந்தது...!

"ஏங்க..நீங்க அவசியம் வெளிநாடு போகணுமா?அப்பாக்கிட்ட நான் கேட்கிறேனே!"-வயது வரம்பு பார்க்காது,தந்தையானவர் புதல்விக்கு நல்கும் மரியாதை பிரபஞ்ச அதிசயங்களில் ஒன்று!!

புன்னகைத்துக் கொண்டாள்.

அனைத்தையும் துறந்து,தாய் மண்ணை மிதித்து,தந்தையின் மடியில் உறங்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது அப்பேதையின் இதயத்தில்!!

அவ்வெண்ணத்தை கலைக்கும் பொருட்டு அடித்து தொலைத்தது அவளது கைப்பேசி!!

"ஹலோ!"

"எப்படி இருக்கீங்கம்மா?"-குரலே கூறியது யுகயுகமான பந்தத்தினை!!

"அப்பா!ஏன் நான் போன் பண்ணா எடுக்கலை?"

"ஐயோ!இரண்டு நாளா நான் ஊர்ல இல்லைங்க!போனை நம்ம வீட்டிலே விட்டு போயிட்டேன்!அதான்!"

"என்ன வேலை?"

"அப்பா ராஜசிம்மபுரம் கூப்பிட்டு இருந்தாரு!"(இங்கு தந்தை என குறிக்கப்படுபவர் சரண்.)

"தாத்தா எப்படி இருக்காரு?"

"நல்லா இருக்காருங்க!நீங்க எப்போ ஊருக்கு வரீங்க?"

"இப்போ முடியாதுப்பா!"

"ஓ...சரிங்க!"-ஸ்ருதி இறங்கியது ராகுலுக்கு!!

"ஆனா,ஒருமுறை வந்துட்டா திரும்ப அமெரிக்காவுக்கு வர மட்டேன்!ஜென்மத்துக்கும் நம்ம ஊர் தான்!"

"நிஜமாங்களா??"-உற்சாகமாய் கேட்டார்.

"ம்...சீக்கிரமே வந்துவிடுவேன்பா!பயப்படாதீங்க!"

"சரிங்க!சரிங்க!நான் நீங்க வருவதற்கான எல்லா ஏற்பாட்டையும் உடனே செய்றேன்!"

"சரிங்கப்பா!"-இணைப்பை துண்டித்தாள் அவள்.

மனதில் ஒருவித ஆத்மார்த்தம்!!

தாயன்பை விஞ்சிய அன்பு யாதொன்றும் இல்லை என்பது நிதர்சனம்!!ஆனால்,பல நேரங்களில் அன்பு செலுத்தும் தந்தையால்,தாய்மையை எவ்வாறு அளிக்க இயல்கிறது என்பது புதிரே!!

சோர்ந்துப் போய் அமர்ந்திருந்தான் அம்மழலை!!அவனுக்கு வயது ஐந்திருக்கலாம்!!ஆனால்,அதன் வீரியம் அவன் வதனத்தில் இல்லை!!முகம் விளக்க இயலாத வேதனைக்குட்பட்டு இருந்தது.

அவன் தனது பொம்மையை இறுக அணைத்தப்படி அமர்ந்திருந்தான்.

கண்கள் தானாக கசிந்துருகின.

அப்பொம்மையை பார்த்தப்படி,

"அப்பா!நீங்க எப்போ வருவீங்கப்பா?சீக்கிரம் வாங்க!எனக்கு உங்களைப் பார்க்கணும்பா!"-என்று கதறினான்.

"விஷ்வா!"-வலிகள் நிறைந்த குரல் செவிகளில் விழ,குரல் வந்த திசை நோக்கி தன் கவனத்தை பதித்தான்.

"மனோ அங்கிள்!அப்பா வந்துட்டாரா?"-ஆர்வமாக கேட்டான் அம்மழலை!!என்ன கூறுவான் அவனும்??ஆறுதலாக அவனருகே வந்தமர்ந்தான் அவன்.

"அப்பா!உனக்கு பொம்மை வாங்கிட்டு வர போயிருக்காருப்பா!வந்துடுவாரு!"

"எனக்கு அப்பா தான் வேணும்!பொம்மை வேணாம்!அப்பா வேணும்!"-அவன் கதற ஆரம்பித்தான்.

"இதோப்பாரு கண்ணா!அழக்கூடாது!அப்பா வந்துடுவார்!"-என்று அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டான் மனோ.

"யாருக்கும் என்னை பிடிக்கலை!நான் என்ன தப்பு பண்ணேன் அங்கிள்?"-கண்ணீரோடு அவன் கேட்ட கேள்வி யாவரின் இருதயத்தையும் சுக்கலாக்கிவிடும்.

"அப்படி எல்லாம் பேசக்கூடாது!நான் சொல்றேன்ல அப்பா சீக்கிரம் வந்துடுவார்!அப்பறம் உன்னை விட்டு போகவே மாட்டார் பாரு!"

"நிஜமாவா?அப்பா என்னை விட்டு போக மாட்டாரா?"

"போக...போக மாட்டார் கண்ணா!"-அடைத்த குரலோடு பேசினான் மனோ.

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1070}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.