(Reading time: 11 - 21 minutes)

மாம் சீனு இப்போ அதைப் பத்தி பேச நேரமில்லை, நான் இன்னொரு நாள் சொல்றேன்,’ என்றாள் ராத

‘சும்மா மேலோட சொல்லு,அதைப் பத்தி,’ என்றான் சீனு ‘இல்லேன்னா தூக்கமே வராது, சுந்தரம் சாரத்தான் நீ கல்யாணம் பன்ணிக்கப் போறேன்னு நாங்க நினைக்கவே இல்லை,’ என்றான் சீனு

‘கொஞ்சம் இரு இவள் கதைய முதல்ல முடிப்போம்’ என்று அவள் புறம் திரும்பினாள், ‘சரி நீ சொல்லமாட்ட, நானே கேட்கிறேன் சொல்லு உனக்கு ஆனந்தன பிடிச்சிருக்கா சொல்லு? பிடிச்சிருக்குன்னா நான் பேசுவேன், இல்லன்னா கஷ்டம் ‘என்றாள் ராதா

‘அவ சொல்லமாட்டாக்கா, நான் சொல்லறேன் அதான், அவ, அவரை காதலிக்கிறாள்,’ என்றாள் ரஞ்சனா

‘ஆனால் ஏன் சொல்லமாட்டேன் என்கிற ரம்ய?’’ என்றாள் ராதா

‘அக்கா, அவ எப்படிக்கா சொல்லுவா, அவர் உன் பிள்ளைன்னு சொன்னதுக்கு அப்புறம் எப்படிக்கா சொல்லுவா,’

‘என் பிள்ளை தாண்டி, அவனும் உன்னைப் போல் உன் மேல் அதே காதல் இருந்தால், நான் முடித்து விடுவேண்டி, இந்த உறவு பத்தி எனக்கு இல்லேம்மா’ என்றாள் ராதா அவளைக் கட்டிக் கொண்டு, ‘உங்க சந்தோசம் தாண்டி எங்களுக்கு, அவன் என் பிள்ளைதாண்டி,என் முன் ஜென்மத்தில், இப்பவும் அவன் பிள்ளைதான் ஆனால் அவன் என் முன் ஜென்மத்த்தில் என் வயற்றில் பிறந்தவன்,இப்போ, நான் அவன் அம்மா, உனக்கும் அக்கா அப்போதைய ரத்தம் வேற, இப்போதைய ரத்தம் வேற, அதனாலே கவலைப் படாதே நான் அவனிடம் பேசறேன்,’ என்றாள் ராதா

சீனு,ரஞ்சனா,ரம்யாவும் அவள் சொல்வதைக் கேட்டு ஷாக் ஆகி விட்டார்கள்,

‘என்ன சொல்றே ராதா, நீ சொல்வது உண்மையா? உன் போன ஜென்மத்தில் இதே குடும்பத்தை சேர்ந்தவளா நீ?’ என்றான் சீனு

அவள்,’ ஆமாம்’ என்று சுருக்கமாக தன் கதையைக் சொன்னாள், அவர்கள் கண்களிலும் கண்ணீர், ‘எப்படிக்கா’ என்றாள் ரஞ்சனா? ஆமாம், ‘என் பிள்ளையை விட என் புருஷன்தான் ரொம்ப பாவம், என் மேல் உயிரையே வைத்திருந்தார், என் உயிர் போய்விட்டது, அப்பகூட எனக்குக் கேக்கற மாதிரி அவர் கூறியிருக்கிறார் எனக்கு ப்ராமிஸ் பண்ணு அனு, என்னிடம் திரும்பி வருவேன்னு என்று, என் காதில் விழுகிறது பட் ஐ வாஸ் டிக்ளர்ட் டெட்,’ என்றாள், நீங்கள் பயப்பட போகிறீர்கள் என்று சொல்லவில்லை.

‘ஆல் இஸ் வெல், இப்போ எல்லாம் சரியாகிடுத்து.’

‘வாவ்! எப்படி அக்கா இது சாத்தியம்,’

‘எல்லாத்துக்கும் மேலே நான் அதே உருவில் இருப்பது இஸ் அமேசிங், அது இல்லேன்னா அவராலே என்னைக் கண்டுபிடித்து இருக்க முடியாது, நாங்க சேர்ந்து இருக்க முடியாது.”

‘சரி நான் போய் என் பிள்ளையை பார்க்கிறேன்’ என்று கிளம்பினாள், அப்போ சுந்தரம், ‘எவ்வளவு நேரம் புது கல்யாணம்கிற நினைப்பு கூட இல்லை’ என்று உள்ளே நுழைந்தார் கூட ஆனந்தனும் இருந்தான், அவன் ரம்யாவும் அழுதிருந்ததை பார்த்தான், இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே நேரே போய், ரம்யாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் ரூமிற்கு போனான் எல்லோரும் பார்த்து சிரித்தனர்.

‘சரி, சீனு, உன்னை பற்றி சொல்லு’ என்றார், ராதாவின் கையை தன்னுடன் இணைத்து, அவள் கையை இழுத்துக் கொண்டாள், ஆனால் அவர் விடுவதாக இல்லை.

‘சார் நான் மெகனிகல் பண்ணிவிட்டு, வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்,’ என்றான் சீனு

‘எனி ப்ரிவீயஸ் எக்ஸ்பீரியன்ஸஸ்?’ என்றார் சுந்தரம்

‘வெறும் இண்டர்ன்ஸ் பண்ணதுதான் சார்’

‘குட் ,நீ ஒன்னு பண்ணு ஒரு ரேசுமி ஒன்று கொடு சிவாவிடம் நாளைக்கு அப்புறம் திங்கட்கிழமை நீ வந்துடு கம்பனிக்கு’ என்றார் சுந்தரம்

‘யு மீன்’ என்றான் சீனு

‘எஸ் ஐ மீன் யு ஜாயின்,’ என்றார் சுந்தரம்

‘தேங்க்ஸ் சார்’ என்றான் சீனு

‘எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு சீனு ஆனா..... ‘என்று இழுத்தார்,

‘ஆனாலும் நீ ரொம்ப பாவம்’ என்றார்

‘ஏன் சார் ?’என்றான் அவன் அப்பாவியாக

அதே குரலில், ‘என்ன செய்வது கடவுள் உனக்கு இப்படித்தான் எழுதிவிட்டான், நீ இவளோடு எப்படித்தான் இருக்கப் போகிறாயோ? ‘

சீனுவும், ராதாவும் சிரித்தனர்,

'ஏதோ நீங்கள் எங்க அக்கா புருஷனாசேன்னு, உங்களை ஒன்றும் சொல்லாமல் சும்மா விடறேன், பிழைத்துப் போங்கள், அக்கா உன் புரூஷனிடம் என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லி வை ஆமாம் அப்புறம் எவ அவ ன்னு வராதே சொல்லிட்டேன்’ என்றாள் சீரியஸ் முகபாவத்துடன் ரஞ்சனா

‘இல்லை, உங்களைப் பற்றி தெரியாமல் நான் உங்களிடம் கொஞ்சம் ஓவரா உரிமை எடுர்த்துக்கிட்டேன் அதுவும் நீங்கள் ப்ரீயாக பழகியதால் ........’என்று சொன்னாள் ரஞ்சனா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.