(Reading time: 11 - 21 minutes)

ஹே, பயித்தியம் மாதிரி பேசாதே, என்னை நீ உண்மையாவே சிரிக்கவைதிருக்கிறாய், இந்த அளவுக்கு மனதை திறந்து சத்தமாக நான் சிரித்ததே இல்லை, இந்த வீடு எவ்வளவு சூனியமாக இருந்தது தெரியுமா, என் மனதும் அதேப் போல் எப்பவும் பொலிவிழந்து இருந்தது, இப்பத்தான் உயிரு வந்திருக்குது, நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா,’

உங்கள் காதல் பற்றி அக்கா இப்பத்தான் சொன்னாள், ஆளு பயங்கரமாக.... ‘என்று

நீங்களும் எங்களை மாதிரி என்றென்றும் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்கிறேன்,வாழ்க்கையில் காதல் முக்கியமானதாகும், நீங்கள் இருவரும் உங்கள் வாழ்க்கை துணையைத் தேடி இருக்கிறீர்கள் , அதை சந்தோஷமாக வாழ்ந்துக் காட்டவேண்டும், உங்கள் காதலில் உங்களுக்கு நம்பிக்கை வேண்டும், காதல் என்பது வெறும் சுத்தி திரிவதில் இல்லை, வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தல், புரிதல், ஒற்றுமையாக ஒரு முடிவெடுத்தல், காதலித்தவர் ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருத்தல் ‘என்று ராதாவை அனைத்து அவள் தோளில் தன் முகத்தை புதைத்து தன்னையே மறந்து பேசிக் கொண்டிருந்தார்

‘உங்களுக்குத் தெரியாது, நான் போனமுறை அவளோடு வாழ்ந்தது வெறும் பதினைந்து மாதங்கள் தான் ஆனால் என் வழ்நாளைக்கும் வாழ்ந்த திருப்தி, நான் என் மனைவியுடன் வாழவில்லை, என் காதலியுடன் வாழ்ந்தேன், எல்லோரும் எங்கள் வாழ்க்கையை ஒரு எடுத்துக் காட்டாய் எடுத்துக் கொண்டு தங்கள் காதலில் நம்பிக்கை வைத்து வாழ்வை ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒளிமயமாக வாழவேண்டும்.

உங்கள் அக்கா எனக்கு ஒரு வரம், அவளை நீங்கள் பின்பற்றினால் உங்கள் வாழ்கையில் சந்தோஷத்துக்கு ஒன்றும் குறைவிராது’

‘சீனு உனக்கும் வேலை கிடைத்தவுடன் நீங்கள் இருவரும் எப்ப கல்யாணம் செய்துக் கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து சொல்லுங்கள் நான் முன்னின்று உங்கள் கல்யாணத்தை முடிக்கிறேன், நீங்க சின்ன வயதுதான், ஆனால் காதலிக்க ஆரம்பித்தால், அதை அனுபவிக்க வேண்டும்.

நானும் என் சின்ன வயதில் இருபத்தி மூன்று வயதில் அனுவைக் கல்யாணம் செய்துக் கொண்டேன்,

அந்த பதினைந்து மாதங்களும் என்னோட வாழ்க்கையில் ஷி வாஸ் லைக் எவ்ரிதிங் டு மீ, ஒரு அம்மாவா, ஒரு மனைவியா, ஒரு காதலியா,ஒரு சிநேகிதியா,எல்லாமும் அவளே அவள் போன பிறகு எனக்குத் தனிமை அது கொடுமை ஆனால் எல்லாமுமாக எனக்கு ஒரு பிள்ளையை கொடுத்து அவள் நினைவுகளையும் கொடுத்து விட்டு போனாள்,’

இதை சொல்லிக்கொண்டு இருந்த போது, எல்லோருக்கும் கண்ணில் கண்ணீர், அவர், அவளை தன் நெஞ்சில் அனைத்துக் கொண்டிட்ருந்தார்,

‘அந்த நினைவோடு என் பிள்ளையை வளர்த்தேன், அவனோடு நிறைய நேரம் செலவு செய்தேன், லீவு நாள்களில் என்னோடு கம்பெனிக்கு கூட்டிப் போவேன், கூடுமான வரை மீடிங்குகளை அவன் ஸ்கூல் போகும் போது வைத்துக் கொள்வேன், அவன் நண்பர்களை வீட்டுக்கு கூப்பிட்டு என்னோடு என்ஜாய் பண்ண வைப்பேன் கூடுமான வரை அவனை என்னோடு வைத்துக் கொண்டேன், ஒரு வயதுக்கு மேல் இனி அவன் தன்னை பார்த்துக் கொள்வான் என்ற போது அவனை அமெரிக்கா அனுப்பினேன், அவன் குணத்தில் எங்கள் இருவரையும் கொண்டு வந்திருக்கிறான். என் மகனுடன், என் மனைவியும் சேர்ந்து என்னோடு வாழ்ந்தாள், அவள் நினைப்பையும் அவள் எங்களுடன் வாழ்ந்தாள், அவனுக்கும் அம்மா அவனுக்கு எல்லாம் செய்கிறாள் நம்முடன் வாழ்கிறாள் என்று சொல்லித்தான் அவனை வளர்த்தேன்,என்று அவர் சொன்னவுடன் ஓ,’ என்ற குரலுடன் அழுதாள் ராதா, அவர் அவளைக் கட்டிப் பிடித்து, ‘ஹாய் என்ன கண்ணம்மா, இது நீ என்னுடன் இப்போ சேர்ந்துட்டியே, நான் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறேன் தெரியுமா? எவ்வளவு கொடுத்துவச்சவன் நான் , பாவம் நீ தான் நம்ம ரஞ்சி சொல்றா மாதிரி இந்த பெரிஸ்ஸோட கஷ்டப் படனமோ? பாவம்டா நீ,’ என்றார்

ரஞ்சனா குனிஞ்சி அவர் மடியில் தலையை வைத்து ‘சாரி, நான் அந்த மாதிரி உங்களைக் கிண்டல் பண்ணியிருக்கக் கூடாது, ஐ அம் சாரி,’ என்று கேவினாள், அவர் மடியில் படுத்திருந்த ரஞ்சியின் தலையை தடவி குனிந்து முத்தம் கொடுத்து

‘எனக்கு பெண் இல்லாத குறையை நீ தீர்த்து விட்டாய் கண்மணி, ஒரு பெண்ணிடம் அவள் அப்பா எவ்வளவு பெருமிதம் இருக்குமோ அந்த பெருமிதம் சந்தோசம் இந்த இரண்டு நாளில் நான் அனுபவித்து விட்டேன், நீ என் பெண்தான் கண்மணி,’ என்றார் உணர்ச்சி மிக.

‘கண்ணம்மா, அனு, இவள் நம் பெண், இவளுக்கு எல்லாமாக நாம் தான் செய்யணும், ‘என்றார்.

‘நீங்கள் எல்லாம் இந்த வீட்டில் தான் இருக்கணும், எனக்கு இந்த சந்தோஷம் எப்போதும் வேண்டும்,’என்றார் சுந்தரம்

‘என்ன கண்ணம்மா என்ன சொல்கிறாய்’ என்றார்

அவள் அழுகை அவர் பேச்சில் கொஞ்சம் அடங்கியிருந்தது

‘ரஞ்சனா, இன்னிக்கு எங்களுக்கு முதலிரவு, ஆனால் இவள் முகத்தைப் பாரேன் எப்படி இருக்கிறாள்? நீ தான் உன் அக்காவை நல்ல க்லமரா மேக்கப் செய்து அனுப்பனும் என்ன?

‘என்ன பேசறீங்க, அவ கிட்ட போய், கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம,’

‘இத பாருடா என் பொண்டாட்டி கோவத்தை, நான் என்னமோ ஒண்ணுமே அறியாத பொண்ணு கிட்ட பேசற மாதிரி , அவ லவ் பன்றாடி? இதெல்லாம் அவங்களுக்கு தெரியாமையா? லவ் பண்ணுவாங்க “

ரஞ்சிக்கும் வெட்கமா இருந்தது

ஆனாலும், அவர் கால் மேலே இருந்த தலையை திருப்பி, ‘இதப் பாரு சீனு இந்த பெருசுக்கு குசும்பு ஏகத்துக்கு, எப்படி சைக்கிள் கப்லா நம்மள வம்புகிழுக்குது’ என்றாள்

எல்லோரும் அழுத மூஞ்சியை துடைத்து சிரித்தனர்

தொடரும் 

Episode # 18

Episode # 20

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.