(Reading time: 21 - 41 minutes)

ர்ஷும்மா, என்னை நெடுமரம்ன்னு ஒரு குள்ளகத்தரிக்காய் சொல்லுதே” என்றான் அந்த இன்னொருவன். (ப்ரியா 5.7. உன் 6.3 feet height-க்கு எல்லாரும் குள்ளமாகத்தான் தெரிவர்.) “ஆமாம் ப்ரனிஷ் அண்ணா” என வழிமொழிந்து மேலும் முறைப்பை வாங்கிக்கொண்டாள் ப்ரனிஷின் அன்புத் தங்கை. (வைய்ட் வைய்ட்!! உங்களை எல்லாம் மீட் பண்ண வைக்க நான் என்னென்னமோ ப்ளான் போட்டா நீங்க இங்க எங்களுக்கு விக்ரமன் படம் ஓட்டி, அதில் ‘அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை அதில் தீபமன்றோ’ என்று பாட்டும் பாடுறீங்க? இது எப்போதிருந்து என்றாவது சொல்லுங்கள், தெரிந்துகொள்கிறோம்)

ப்ரனிஷின் கூற்றை ஆமோதித்த வர்ஷினி அவனைப் பார்த்த அன்று நடந்ததை நினைவு கூர்ந்தாள். (எல்லோரும் உங்க பக்கத்துல கொசுவர்த்திச் சுருள் இருந்தால் அதை முகத்தின்முன் காட்டி சுத்தி விட்டுக்கோங்க. இல்லாதவர்கள் நினைத்துப் பார்த்துக்கொள்ளவும். அதாவது, flashback-ங்க)

ரு வருடத்திற்கு முன், அந்த பெயர்போன மாலில் நடந்து கொண்டிருந்தனர் ப்ரனிஷும் யாதவும்.

“மச்சான், உன்னிடம் ஒன்று சொல்லியே ஆகனும்டா” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தான் யாதவ்.

“என்ன மச்சான்? உன் குழந்தைக்கு ஸ்கூல் அட்மிஷன் வேணுமா? அதுக்கு நான் வந்து recommend செய்யனுமா?”

“ஏன்டா? நான் சீரியஸா பேசுறதே பெரிய அதிசயம். இதில் நீயும் என்னை குழப்புறே”

“சரி மச்சி. யூ கண்டினியூ” என்று கூறித் தன் திருவாய்க்கு விடுமுறை அளித்தான் ப்ரனிஷ் (சில நிமிடங்களுக்கு மட்டுமே)

“டேய் மச்சான், எல்லாரும் சொல்லுவாங்களே லவ்வுன்னு, அந்த லவ்வு எனக்கும் வந்துருச்சுடா”

“என்னது, ஜவ்வு கிழிஞ்சுருச்சா?” என வெறுப்பேற்றினான் ப்ரனிஷ்.

“லவ்வுடா லவ்வு. இந்த படத்தில் எல்லாம் மரத்தை சுற்றி டூயட் பாடுவாங்களே, அது” என்று விம் பார் கொண்டு விளக்கினான் யாதவ். உடனே ப்ரனிஷ் ‘இது நம்மைக் கலாய்ப்பதற்கான புது டெக்னிக்கோ?’ என்பது போல பார்த்தான்.

“நிஜமாக சொல்றேன் ப்ரனிஷ். ஒரு பெண்ணைப் பாத்தேன்டா. ரொம்ப பிடிச்சுப்போச்சு”

“ஓஓஓ. அப்படியா? யாரு மச்சான் அது? எங்கே பார்த்தே? எப்போ எப்படி ப்ரொபோஸ் செய்தே? எப்போ எனக்கு இன்ட்ரோ தரப் போற?” என சந்தோசத்தில் கேள்விகளாக அடுக்கினான். பின்னே, பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் நம் யாதவ் ஒரு பெண்ணிடம் வீழ்வதென்பது எவ்வளவு பெரிய விஷயம்?

“அவள் பெயர் அமிர்தவர்ஷினி மச்சான். வாராவாரம் நாம் வரும் பீச்சுக்கு வருவாள். ரொம்ப நல்ல பெண்டா. இன்னும் அவளிடம் சொல்லலை. எப்படி பேசுறதுன்னு ஒரு சின்ன உறுத்தல்”

சங்க காலம் முதலே காதலை வாழவைப்பது நண்பர்களே அன்றோ? அந்தப் பெருமை தனக்கும் கிட்டப்போவதை எண்ணி பெருமகிழ்ச்சி கொண்டு கேட்டான் ப்ரனிஷ். “எப்பவும் என்கூட தான வருவ? இது எப்போ நடந்துச்சு? சரி, சொல்லு மச்சான். எத்தனை மாசமா லவ் பண்றே?”

“மச்சி, இன்னும் அவங்ககிட்ட சொல்லலைடா”

“என்னது? சொல்லவே இல்லையா?”

“உனக்கு தெரியாம எப்படிடா?” என சந்தில் தன் நட்பின் ட்ரைலர் ஓட்டினான் யாதவ்.

“நல்லாவே சமாளிக்குற. என்ன ஹெல்ப் செய்யனும்?”

“உன்னை விடவாடா நான் சமாளிக்குறேன்? நீயே எனக்கு பதிலா பேசுறியாடா?”

“ஏன் மச்சி, இந்த கத்தி படத்துல சதிஷ் சப்போர்ட்டுக்கு வருவதுபோல வர சொல்லுவன்னு நெனைச்சா இப்படி என்னை மொத்தமா மாட்டிவிடுறியே!!”

“நாள் முழுக்க டாபிக்கே இல்லாம பேச முடியுது மச்சான். ஆனா, இந்த லவ்வ பொண்ணுங்க கிட்ட சொல்றது எவ்வளவு கஷ்டம்ன்னு இப்போ தான் புரியுது. எனக்காக பேசு மச்சி” என்று கேட்டான் யாதவ்.

“லவ்வுல intermediates (இடைத்தரகர்) வைக்கக் கூடாதுடா. இதைத்தான் நான் சொல்லுவேன் என்றும் உனக்கு தெரியும். அப்புறமும் ஏன் மச்சான் கேட்குற?” என்று இன்னும் தன் நண்பனை படித்தது, கேட்டது, பார்த்தது போன்ற பல அறிவுரைகளால் ப்ரனிஷ் பலப்படுத்திக் கொண்டிருக்கும்போதே யாதவ் “மச்சான்” எனக் கூவினான்.

“இப்போ ஏன் காதுக்குள்ள கத்துற?” எனக் கடுப்பாகக் கேட்டான் ப்ரனிஷ். (அவ்வளவு சத்தமாவா கேக்குது?)

“சாரி மச்சான். அமிர்தா வர்றாடா” என்று சந்தோசமாக கூவினான் யாதவ்.

இதனைக் கேட்டவுடன் “எங்கடா” என பரபரத்தான் ப்ரனிஷ்.

 “அதோ இரண்டு பெண்கள் வருகிறார்களே, அதில் இடது பக்கமாக வருபவள்” என்று கூறினான் யாதவ். மிகுந்த எதிர்பார்ப்புடன் திரும்பியவன் கண்ணில் பட்டது வெண்ணிற டாப்ஸ், கருப்பு ஜீன்ஸ் உடுத்தி, ஓயாமல் பேசிக்கொண்டே வந்த ப்ரியா தான்.

“இந்த பெண்ணா மச்சி? நாம ரெண்டு பேரும் சேர்த்து பேசுவதைவிட பேசுவாங்க போலவே? பாவம்டா” என ப்ரியாவின் எதிர்காலக் கணவனுக்காகப் பரிதாபப்பட்டான்.

“டேய், நீ பாக்குறது ரைட்டு. நான் சொல்றது லெஃப்ட். ப்ளூ லாங் ஸ்கர்ட்” எனத் தன் நண்பன் தலையில் தட்டினான் யாதவ்.

“ஹீஹீஹீ. சாரி மச்சீ. ஒரு சின்ன கன்ஃபூசன். இப்போ கரெக்டா பாக்குறேன்” எனத் தன் மீசையில் இருந்த மண்ணை யாரும் அறியாதவண்ணம் தட்டிவிட்டு மீண்டும் பார்த்தான். இந்த முறை அவனது பார்வை வட்டத்துள் தவறாமல் விழுந்தாள் வர்ஷினி. வெண்ணிற டாப்ஸ், ப்ளூ லாங் ஸ்கர்ட் அணிந்து அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த வர்ஷினியைப் பார்த்தவுடன் அவன் முகம் மலர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.