(Reading time: 21 - 41 minutes)

யார் இவன்? இன்று தான் முதன்முதலில் பார்க்கிறேன் ஆனால், இவனை எங்கோ பார்த்தது போல இருக்கிறதே என்று யோசித்தால், அவன் என்னை பல மாதங்களாக காதலிப்பதாக அவன் நண்பன் சொல்கிறான். அவ்வாறு என்றால் என்னை தொடர்ந்து வந்திருப்பான் அல்லவா? எனக்கோ ப்ரியாவிற்கோ நிச்சயம் தெரிந்திருக்கும். இங்கோ, எதுவும் புரியவில்லை’ என யோசித்துக்கொண்டிருந்தபோது அவள் சிந்தனையை கல் எறிந்து தகர்த்தது ஒரு குரல். அதற்கு உரியவர் யாரென்று அறிய அபாரமான மூளை ஒன்றும் தேவையில்லையே!

வர்ஷினி திரும்பிப் பார்க்க, யாதவ் அவளது அருகில் வந்து நின்று, நேராக அவளது கண்களை சந்தித்துப் பேச ஆரம்பித்தான்.

“என்னை முதலில் மன்னிச்சுடுங்க. உங்களை குழப்பவோ, இல்லை வம்பிழுக்கவோ நாங்க இங்கே வரலை. எதர்ச்சையாக உங்களை பார்த்தபோது இன்றே சொல்வது என்று முடிவெடுத்து எப்படி எப்படியோ சொல்லியாச்சு. நான் உங்களை முதன் முதலில் கண்டது நீங்கள் உங்கள் ஃப்ரெண்டுடன் கடற்கரையில் ஒரு சிறுமிக்கு மணல் வீடு கட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தபோது. அப்போது உங்க குழந்தைத்தனம் பிடிச்சுருந்துச்சு. அதன் பின், தொடர்ந்து வாராவாரம் உங்களை அதே இடத்தில் கண்டபோது, உங்களது அமைதியான குணமும், ஆர்ப்பரிக்காத அழகும் ரொம்ப பிடித்துவிட்டது. எப்போதாவது தனியாக சந்திக்க நேர்ந்தால் உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் அமையாமலேயே போய்விட்டது. சந்தோசமாக இருக்க வந்த இடத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க. I am sorry for that. ஆனால், என் ஃப்ரெண்ட் கூறியது முற்றிலும் உண்மை. ஐ லவ் யூ சோ மச். இது வெறும் வாய்வார்த்தை இல்லை. என் அடிமனத்தில் இருந்து வருவது. உங்களை நான் போகுமிடமெல்லாம் வந்து தொல்லை செய்ய மாட்டேன். அதனால் கவலைப்படாதீங்க. என்னைப் பார்க்கத் தோன்றினால் ஞாயிரன்று நீங்கள் வழக்கமாக வரும் பீச்சிற்கு அதே நேரத்திற்கு வாங்க. நான் வாராவாரம் அங்கு வந்து உங்களுக்காக காத்திருப்பேன். அன்று சந்திப்போம்.”

இவ்வாறு வர்ஷினியைப் பார்த்துக் கூறிவிட்டு எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் வந்த வழியே நடக்க ஆரம்பித்தான் யாதவ். வர்ஷினியோ, தேர்வுத் தாளில் எந்த வினாவிற்கும் விடை தெரியாத மாணவியைப் போல குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள்.

இவனா அமைதி என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. Actually அமைதியை bold செய்ய மறந்துவிட்டேன். அதற்காக எனது மன்னிப்புகள். ப்ரனிஷ் பார்க்க மட்டுமே அமைதியாகத் தெரிவார். ஆனால், தெளிவாக சொல்லப்போனால் RJ ஆக வேண்டியவர் தப்பித் தவறி Civil Engineer ஆகிவிட்டார். மேலும் ஒரு தகவல்: இவரது தொல்லைகளில் இருந்து சில காலம் தப்பிக்கவே திரு. ராமபத்திரர் - திருமதி. பார்த்தவி தம்பதியினர் திருச்சிக்கு இடமாற்றம் செய்தனர். இந்நால்வரின் வாழ்வில் இனி நடக்கவிருப்பவற்றை இனிவரும் பகுதிகளில் காண்போம்.

தொடரும்

Episode 02

Episode 04

{kunena_discuss:1075}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.