(Reading time: 17 - 34 minutes)

நினைத்தால் இனிக்கும்...

இளமை நதியே..!!

உன்னோடு நான் மூழ்கினேன்...!!

தேடாத நிலையில்... நோகாத வழியில்...

கண் பார்க்கும் இடமெங்கும் நீதான்...!!

விடியும் வரை கனவின் நிலை..

உனதா என்று தினம் ஏங்குது...

மனம் உருகிடும் நிலை இது எந்தன்...

முதல் முதல் வரும் உயிர் காதலில்...!!

உயிரை தொலைத்தேன்...

அது உன்னில் தானோ...

இது நான் காணும் கனவோ.. நிஜமோ..!!

மீண்டும் உன்னை காணும் மனமே...!!

வேண்டும் எனக்கு மனமே..  மனமே..!!

திடுக்கென்று கண் விழித்தான் துஷ்யந்த்... விமானம் இறங்கப்போவதால், சீட் பெல்ட் அணிந்துக் கொள்ள சொல்லி வந்த அறிவிப்பில், கண் விழித்திருந்தான் அவன்... அதாவது, இன்னும் அவன் விமானத்தில் தான் இருக்கிறானா..?? அப்போது விமானத்தில் இருந்து இறங்கி, காரில் கங்காவோடு பேசியப்படி சென்றதெல்லாம் கனவா..??" சீட் பெல்ட்டை அணிந்தப்படி சிந்தித்துக் கொண்டிருந்தான்...

இரண்டு நாளாக தொடர்ந்து இருந்த வேலைப் பளு காரணமாக, கண்ணயர்ந்திருக்கிறான் போலும்... ஆனால் இந்த கனவு..??

அவள் இப்படியெல்லாம் பேச வேண்டுமென்று உள்ளுக்குள் ஏங்குவதால் தான், அதெல்லாம் இப்படி  கனவாக வருகிறதோ..??" மனம் யோசித்துக் கொண்டிருந்தாலும், அந்த கனவு தந்த இனிமை.. உதட்டில் புன்னகையை தான் வரவைத்தது... அவள் கனவில் பேசியதையெல்லாம் மனதில் அசைப்போட்டுக் கொண்டிருந்தான்...

ஏர்ப்போர்ட்டிலிருந்து வெளியே வந்தவன் காரில் சென்று கொண்டிருந்தான்... அவன் மொபைலை ஆன் செய்தவன், அதில் சென்னையிலிருந்து கிளம்புவதற்கு முன் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்தான்... இரண்டு நாள் டெல்லி பயணம் போகப்போவதாகவும், டெல்லியில் ஒரு மீட்டிங் இருக்கிறது என்றும் கங்காவுக்கு அந்த குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தான்... இரண்டு நாட்களுக்கு முன் அவள் அப்படி சொல்லிவிட்டு சென்றபின்பும் இப்படி ஒரு குறுஞ்செய்தியை அவளுக்கு அனுப்பியிருந்தான்...

இரண்டு நாட்களுக்கு முன், இவனை கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்திருந்தாள் அவள்... அவள் விடைப்பெற்று கிளம்புவதற்கு முன்... "இதுக்கப்புறம்.. நீங்களும், நானும் பார்த்துக்கவோ.. இல்லை பேசிக்கவோ இல்லாம இருக்கறது தான் நல்லது... இதை நான் சொல்ல வேண்டியதில்ல.. உங்களுக்கே தெரியும்... இருந்தாலும் சொல்றேன்... ஞாபகத்துல வச்சிக்கோங்க.." என்று சொல்லிவிட்டு சென்றாள்..

ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது தான் முடியுமா..?? என்று இவனுக்கு தெரியவில்லை... அவளை பார்க்காமலோ.. இல்லை அவளுடன் பேசாமலோ.. இவனால் இருக்க முடியுமா..?? அவள் ஒன்றும் மணிக்கணக்கில் இவனோடு பேசுபவள் இல்லை... இருந்தாலும் அவள் பேசும் ஒன்றிரண்டு வார்த்தையைக் கூட இவனால் கேட்காமல் இருக்க முடியாதே..

எப்போதும் மீட்டிங் செல்வதற்கு முன் அவளிடம் பேசிவிட்டு தான் செல்வான்... "நீங்க இந்த மீட்டிங்கை சக்ஸஸா முடிச்சிடுவீங்க.. டென்ஷன் ஆகாம மீட்டிங்கை அட்டண்ட் பண்ணுங்க.." என்று அவள் சொல்வதே இவனுக்குள் புது சக்தியை கொடுக்கும்...  "நீங்க உங்க திறமையால தான் தொழிலில் முன்னேறுறீங்க... நான் ஆல் த பெஸ்ட் சொல்றதால இல்ல.." என்று அவள் சொன்னாலும்... அவள் குரலை கேட்டாலே, இவனுக்குள் சக்தி பிறப்பதை இவனால் மறுக்க முடியாது...

இதோ இப்போது கூட, இருவரும் பார்க்கவோ.. பேசவோ... வேண்டாம் என்று அவள் சொல்லியும், அவளுக்கு மீட்டிங் இருக்கிறது என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான்... அவள் அந்த நேரத்தில் இவனை அலைபேசியில் தொடர்புக் கொள்வாளா..?? என்ற கேள்வியோடு அவன் பயணித்துக் கொண்டிருந்தான். 

 

ஒரு ஆர்வத்துல தான் கதை எழுத வந்தேன்... இங்க வந்து நாவல், பதிப்பகம் என்று நிறைய பார்த்ததால், அதை என்னுடைய கதையில் ஒரு சிறுப்பகுதியாகத் தான் கொண்டு வந்திருக்கிறேன்... இதில் ஏதாவது தவறாக இருந்தால் பிழையை மன்னிக்கவும்... கங்காவை அடுத்த அத்தியாயத்தில் அறிமுகப்படுத்துகிறேன்... நன்றி.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.