(Reading time: 19 - 38 minutes)

Penne en mel pizhai

நான் பிரசாத், நீங்க கவிழையா தானே! என்று புன்னகையுடன் அவளிடம் அறிமுகமாகி .நான் இங்கு ஹைச்.ஆர் ஆக இருக்கிறேன் என்றுகூறி அறிமுகம் ஆனவன் “வெல்கம் டு அவர் ஹோம்”.என்று கூறி அழைத்துச்சென்றான்

அத்தளத்தில் இருந்த ஓர் அறையைக் காண்பித்து அங்கு இன்னும் நான்கு நியூ ஹேன்டிடேட்ஸ் உட்கார்ந்துகொண்டு இருப்பார்கள். போய் அவர்களுடன் வெய்ட் பண்ணுங்கள் நம் டிபார்ட்மென்ட் ஹெட் உங்களை வந்து பார்ப்பார், என்று கூறிச்சென்று விட்டான்.

அங்கு அவள் அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு வந்தவர் “.ஹாய் ஐ ஆம் யுவர் டிபார்ட்மென்ட் ஹெட் ராம்”.என்று கூறி கவிழையாவைத் தவிர மற்ற நாலுபேரிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடச் சொல்லி கூறிவிட்டு .மிஸ் கவிழையா “ப்பாலோ மீ” என்று கூறி உள் அழைத்துச் சென்று எம் டீ மஹிந்தன் என்ற அறையின் கதவைத்திறந்து கூட்டிச் சென்றான்

அது பார்ப்பதற்கு மிக பிரம்மாண்டமாக இருந்தது இரண்டு ஜோடி மேஜையும் இருந்தது ஒன்றில் மஹிந்தன் எம் டி என்று போர்டு இருந்தது ஆனால் அதன் இருக்கை காலியாக இருந்தது

மற்றொரு இருக்கையில் உட்கார்ந்திருந்த பெண், கவிழையா! நான் எம்.டீ மஹிந்தனின் செக்ரட்டரி உமா, என்றுகூறி எதிரில் இருந்த இருக்கையை காண்பித்து அதில் கவிழையாவை உட்காரச்சொன்னார்

ராம் அவர்களிடம் விடைபெற்று வெளியேறியதும், கவிழையாவிடம் ஒப்பந்தத்தில் கையொப்பம் போடச்சொல்லி தாள்களை கொடுத்தாள் .

அதை கையில் வாங்கி பார்த்த கவிழையா அதிர்ச்சியுடன் எழுந்து மேடம் இது செக்ரட்டரி போஸ்ட்காண ஒப்பந்த லெட்டர் . நான் ஐ டி மாணவி இதில் எதோ குழப்பம் உள்ளது என்றாள்.

சாரி கவிழையா உங்களை தேர்ந்தெடுத்திருப்பது இந்த வேலைக்கு தான். நான் இன்னும் ஒருசில மாதத்தில் ப்ரமோசனில் சிங்கப்பூர் போக இருப்பதால் உங்களை இவ்வேலையில் அமர்த்தியிருக்கிறோம் நான் போவதற்குள் உங்களுக்கு என்னென்ன வேலை எப்படி செய்யவேண்டும் என்று கற்றுத்தருகிறேன் என்றுகூறினாள்.

உங்களை செலக்ட் பண்ணிய வேலையைவிட இரண்டு மடங்கு சம்பளம் இதில் அதிகம் .அலுவலகத்தில் இரகசியங்கள் காப்பது இவ்வேளையில் முக்கியம் வாய்ந்தது உங்களுக்கு எதுவும் இதில் ஆட்சேபனை இருந்தால் இப்பொழுதே சொல்லிவிடுங்கள் என்று கூறினாள்,

கவிழையா குழம்பியபடியே நான் இதில் ஜாய்ன் பண்ணுகிறேன் என்று கூறினாள், உடனே உமா பேச்சு கொடுத்துக்கொண்டே ஒப்பந்த தாள்களை கொடுத்தாள், அவள் காட்டிய இடங்களில் கையெழுத்து போட்டாள் கவி. கவிழையாவின் இக்கையெழுத்தால் அவள் தலையெழுத்தே மாறிப்போவதை கவி அறியவில்லை....

கவிழையா அப்பாவுடன் வந்ததில் இருந்து, அவள் தன் அறையில் இப்போது இருப்பதுவரை cctசிசிடி கேமராவில் பார்த்துக்கொண்டு இருந்த மஹிந்தனுக்கு முகத்தில் சிரிப்புடன் கூடிய ரசனையுடன், கவிழையாவை அணுஅணுவாக ரசித்துக்கொண்டு இருந்தான்.

அவளின் கண்களும் அதில் தோன்றும் பாவனைகளும் மஹிந்தனை அவள் மேல் பித்துக்கொள்ள வைத்தது. “மை பேபி, ஐ சுட் நாட் அலவ் டு லீவ் மீ” .என்று கேமராவில் கவியை பார்த்துக்கொண்டே முனுமுனுத்தான்.

அப்பொழுது அவன் அறைக்குள் படீர் என்று கதவை திறந்துகொண்டு ஐஸ்வர்யா நுழைந்தாள்.

அவன் அலுவலக அறைக்குள்ளே இருந்த, அந்த லக்ஷ்ஸூரியஸ் அறையில் இருந்து கொண்டுதான் சிசிடி கேமராவில் கவியைப் பார்த்துக்கொண்டு இருந்தான்

கவிழையா கையெழுத்துப் போடும்வரை தான்தான் எம்.டீ என்று கவி தெரிந்து கொள்ளக்கூடாது என்று கவனமாக இருந்தான். அவள் கையெளுத்து போட்டபின்தான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான்.

.இப்பொழுது ஐஸ்வர்யா வந்ததை பார்த்தும், அவனுக்கு வந்த நிம்மதி திரும்பவும் போய்விட்டதை உணர்ந்தவன். இப்ப எதற்கு இங்கு வந்தாய்? என கோபமாகக் கேட்டான்.

ஐஸ்வர்யா அவன் கையில இருந்த ஐ போனை வெடுக்கென்று பிடுங்கினாள்,

மஹிந் அப்பொழுதுதான் கவிழையாவின் கண்களை தனது மொபைலில் ஸ்க்ரீன் பிச்சராக வைத்துமுடித்திருந்தான்

அவனிடம் இருந்து பிடுங்கி அதன் மெசேஜ்களை செக் செய்தாள். அவள், தங்கள் கல்யாணம் முடிவாகியதற்கு, நண்பர்களுக்கு ‘காலை பத்துமணிக்கு’ இருவரும் சேர்ந்து பார்ட்டி கொடுக்க அவனை வரச் சொல்லி பதினைந்து குருஞசெய்திகள் அனுப்பி இருந்தாள்.

அவன் பதில் அளிக்காததினால் இரவு வீட்டில் உள்ள தொலைபேசியில் தொடர்புகொண்டு மஹிந்தனிடம் ஏன் எனது மெசேஜ்ற்கு பதிலளிக்க வில்லை என கேட்டாள்.

மஹிந்தன், தான் மெசேஜ் பார்க்கவில்லை என்றும் நாளை தான் அந்த பார்டியில் கலந்துகொள்வதாகவும் கூறியிருந்தான்.

இன்று காலை ஏழுமணியில் இருந்து பலமுறை அவனுக்கு வரும்படி மெசேஜ் அனுப்பியும் அவன் பார்டிக்கு வராததால் அவளுக்கு பெறும் அவமானமாக போய் விட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.