(Reading time: 12 - 24 minutes)

ன்றிரவு..!         

மொட்டை மாடியில் நின்று கொண்டு,வானத்து நிலவில் எந்த பக்கம் தனது தேவதையின் முகம் தெரிகிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான் சகிதீபன்.

அவனது ஆராய்ச்சியை தடுக்கவே அந்த ஃபோன் வந்தது. உடனே நேரத்தை கவனித்தான் சகி. இரவு மணி ஒன்பது. சட்டென ஃபோனை எடுத்தான் அவன்.

“ டேய் என்னடா ஆடி அசைஞ்சு ஃபோன் பண்ணுற? நானும் உன் ஆளும் சென்னையில்காலடி எடுத்து வெச்சு ஏழு மணி நேரம் ஆகிடுச்சு. இதுதானா உன் டக்கு?” என்று எதிர்முனையில் இருப்பவனை பேச விடாமல் கேள்வி கேட்டான் சகி.

“ நண்பனே எனது உயிர் நண்பனேன்னு பாட்டு பாடலாம் நினைச்சேன். பட் அவசியம் இல்லை போல.. நீ ரொம்ப தான் பேசுற.." என்றான் அவன் பதிலுக்கு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... - 

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

" மிஸ்டர் வருண்.. நீ பாட்டுக்கு பாட்டு பாடி வருண பகவானை தட்டி எழுப்பாதே.. ஆல்ரெடி க்ளைமேட் செம்மயா இருக்கு..ஆனால் அதை ரசிக்க என் ஆளு இல்லையே ன்னு பீலிங்".

"ஆளுன்னு சொல்லும் போது தான் ஞாபகம் வருது.. விஷ்வா பத்தி என்னவோ சொல்லணும்னு சொன்னியே!" என்றபடி தான் அழைத்ததற்கான காரணத்தை சொன்னான் வருண்.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, பேச தொடங்கினான் சகிதீபன். "அது வந்து விஷ்வா கிட்ட நல்ல மாற்றம் தெரியுது"என்றவன், சாம்பவி பாட்டியின் வீட்டில் இருந்து வந்தபின் அவளிடம் தெரியும் மாற்றங்களை பற்றி கூறினான்.

அதை கேட்டு கலகலவென சிரித்தான் வருண். " ஹும்கும் இந்த மாற்றத்தை நான் நேரிலேயே பார்த்துட்டேன்" என்று விஷ்வானிகா தன்னை மோதிய கதையை சொன்னான்.

"ஹா ஹா..அவ ஏன்டா எப்பவும் உன்னையே மோதுறா?" என்று கேட்டான் சகிதீபன்.

"எல்லாம் காதலுக்கான அறிகுறி சகி.."

"ஆஹான்.. நான் இப்பவே போயி உன் ஒருதலை போட்டு கொடுக்கவா?" என்று மிரட்டினான். வருண் பதிலை சொல்லும் முன் கொலுசு சத்தம் கேட்க, "அப்பறம் பேசறேன்" என்று போனை வைத்தான் சகி.

வந்தவள் நந்திதா.அங்கு வந்த வேகத்திலேயே சகிதீபனின் சட்டையை கொத்தாய் பிடித்தவள், " உன் அண்ணாவுக்கு நான் ரெண்டாவது பொண்டாட்டினு ஏன்டா சொல்லல?" என்றாள்.

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.