(Reading time: 7 - 13 minutes)

போதும் கண்மணி,

இந்த உயிர்வலி!

இனி உன் வழிதான் என் வழியும்!

வருகிறேன் உனைத்தேடி!

கொளுந்து விட்டு எரிகின்ற தீ!

அவன் உள்ளத்திலும் காதல் ஜோதி!

புடவையை நெருப்பில் போட்டவன்,

அடுத்த கணம் மந்திரத்திற்கு கட்டுண்டு மயங்கி சரிந்தான்!

தெய்வீகனை ஆயாசமாய் பார்த்தபடி,

ஆகாசத்தை அடைந்தாள் தூயவிழி!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்...

படிக்க தவறாதீர்கள்...

இமைக்கும் கணத்தில்,

காற்றை கிழித்தது அந்த கணீர் குரல்!

அது தெய்வீகனின் குரல்!

நண்பர்களே, இத்துடன் கவிதையை முடித்து கதையை தொடர்கிறேன்!சந்தம் சேர்ப்பதை விட,சொல்ல வந்ததை சேர்த்திடும் நோக்கத்துடன், இதோ கதையின் தொடர்ச்சி!

ஹேய் என்னடீ ஷார்ட் ஃபில்ம் இது? நல்ல பேய் கதை எடுக்குறேன்னு சொல்லி இப்படி பேய்த்தனமா எடுத்து வெச்சுருக்க? தெய்வீகனும் தூயவிழியும் பிரியக் கூடாது!” இதுவரை பார்த்துக் கொண்டிருந்த தூயவிழியின் குறும்படத்தைப் பார்த்து கொதித்து போனான் தெய்வீகன்.

இருவரின் பெயரையும் பயன்படுத்தி காதல் கதை எழுதி, அதை வேறு நடிகர்களை வைத்து எடுத்திருந்தாள் தூயவிழி. ஒரு பிரபல தொலைக்காட்சியில் நடக்கும் குறும்படத்திற்காகவே இந்த முயற்சி.

தூயவிழியைப் பொருத்தவரை அவளுக்கு இது மிகவும் முக்கியமான படம். காரணம் படத்தின்மூலமாக இத்தனை நாட்களாய் தெய்வீகனின் மீது வைத்திருந்த காதலை உணர்த்தியிருந்தாள் அவள்.அவனுக்கும் அவள் மீது காதல் உண்டு. ஆனால் சொல்லிக்கொள்ளவில்லை!

“என்ன சொன்ன நீ?”என்று விழிகள் மின்னிட கேட்டாள் தூயவிழி. தெய்வீகனோ படத்தில் இருவரும் இணையாத எரிச்சலில் பேசினான்.

“ என்ன கேட்குற?”

“தெய்வீகனும் தூயவிழியும் பிரிய கூடாதுன்னு சொன்னீயே!”

“ஆமா சொன்னேன்..ஏன் உனக்கு என் மனசுல என்ன இருக்குனு தெரியாதா?”

“அடப்பாவி என்னைக்குதான்டா நீ மனசுல இருக்குறதை பேசியிருக்க? உன் வாயிலிருந்து அந்த மூணு வார்த்தையை கேட்கணும்னு எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா?”

“ப்ச்ச்.. எனக்கு கொஞ்சம் குழப்பம் இருந்துச்சு.. இது சரி வருமான்னு! அதுக்காக இப்படித்தான் யோசிப்பீயா நீ?” என்று படத்தை கைக்காட்டினான் தெய்வீகன்.

“ பின்ன?என்னை வேறென்ன பண்ணசொல்லுற டா?இப்போ கூட உன்னை பேச வைக்க நான் இப்படி ஒரு படம் எடுக்க வேண்டியதாக இருக்கே! என் மனசை கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணியா தெய்வீகா? நீ படத்துல பார்த்த தூயவிழித்தான் நானும்! நானும் அதே மாதிரி செத்து போனால்தான் உன் காதலை சொல்லுவியா நீ?”

“ஏய்!!” என்று அதட்டியவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“ஏன்டீ இப்படி பேசுற? நீ வசதியாய் வளர்ந்த பொண்ணு.. நான் இன்னமும் வாழ்க்கையில செட்டல் ஆகல..காதல் என்கிறபேருல உனக்கு ஏழ்மையான வாழ்க்கையை கொடுத்து கஷ்டப்படுத்த மனசு வரல..அதனால்தான் என் காதலை மறைச்சேன்!” என்று நடுங்கும்குரலில் தன்னிலை விளக்கம் தந்தான் தெய்வீகன்.

எங்கே விலகி போனால் இவன் மீண்டும் அணைத்துக் கொள்ள மாட்டானோ என்ற பயத்தில் அவனை அணைத்தபடியே அண்ணார்ந்து பார்த்தாள் தூயவிழி.

“போடா நீயும் உன் காதலும்! ஏன் ஏழ்மையான வாழ்க்கையில் காதல் இருக்காதா?காதல் என்ன  வசதி படைத்தவர்களின் சொத்தா? மனுஷனுக்கு எந்த சூழ்நிலையும் வீரமும் காதலும் அவசியம் தெரியுமா உனக்கு?”

“..”

“ உனக்கு என் வலி புரியாது தெய்வீகா! நீ என்னை லவ் பண்ணுறியா இல்லையான்னு தெரியாமல், உன்கிட்ட உரிமையும் எடுத்துக்க முடியல. சரிதான் போன்னு விடவும்முடியல..ஒரு காதல் படம் பார்த்தாலோ,காதல்கதையையோ படிச்சா மட்டும் ஃபீல் பண்ணுறியே! ரியல் லைஃப்ல அதை அனுபவிக்கிறவளுக்கும் அப்படித்தானே இருக்கும்னு ஏன்டா யோசிக்கல?” என்று தன்னிரக்கத்தில் கண்ணீருடன் தனது ஒருதலை காதலின் வலியை இறக்கி வைத்தாள் தூயவிழி.

காதல் பொங்கிடும் அவளது விழிகளை கூர்ந்து நோக்கியவன், பதில் ஏதும் சொல்லாமல்முகமெங்கும் முத்தமிட்டான். சில நிமிடங்களுக்கு பின் பேச ஆரம்பித்தான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.