(Reading time: 10 - 20 minutes)

போன வாரம் நீ வரசொன்னியே ?”

“அது  போன வாரம்.. இது இந்த வாரம் “

“ஹேய்.. கிளம்புமா.. டைம் ஆச்சு..”

“நீ பண்றது உனக்கே ஓவரா தெரியல? அங்கே உள்ள ஆபீஸ் வாட்ச்மன் கூட இன்னும் வந்து இருக்க மாட்டாரு.. நாம போய் அந்த வேலை வேணா பார்க்கலாம்.. உனக்கு பொருத்தமான வேலையும் கூட ”

“அம்மா.. தாயே.. துர்க்கா பரமேஸ்வரி .. உன் ஆட்டத்துக்கு என்னைய மத்தளம் ஆக்காதா மாரியாத்தா..”

“சரி. சரி .. ரொம்ப கெஞ்சுற.. புழைச்சு போ .. “ என்றபடி கிளம்பினாள்.

வருணோ மனதிற்குள் ஷப்பா இவள கட்டிகிறவன் பாடு பாவம் தான் போ.. என்று எண்ணிகொண்டான்.

அங்கே மிதுனோ காலை சீக்கிரமே கிளம்பு ரெடி ஆகி வந்தான்.. அவன் அம்மா “என்னடா இவ்வளவு சீக்கிரம் ?” என்று வினவ,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“எனக்கு இன்னிக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா..” என்றபடி கிளம்பி விட்டான்.

அங்கே மகிமாவிற்காக காத்துக் கொண்டு இருந்தான் மிதுன்..

வரும்போதே மகிமாவும், வருணும் வழக்கடிதுக் கொண்டே வர, மிதுன் ஓரளவு வருணின் வரவை எதிர்பார்த்து இருந்தான்.

“வா வருண், வா மகி.. “ என்றவன், “வரும்போதே என்ன சண்டை.. ?”

வருணை முந்தி, “ இன்னிக்கு என்னை காலையில் இழுத்துட்டு வந்துட்டான்.. “ என்றபடி கம்ப்ளைன்ட் செய்தாள்.. சிறுபிள்ளைதனமான அவளின் பேச்சை ரசித்த மிதுன்,

“ஏண்டா அவளிடம் வம்பு வளத்துட்டே வர ?”

“நீங்க வேற மிதுன்... அவ என்ன தாளிச்சுட்டு வந்துட்டு இருக்கா?”

“சரி .. சரி.. ரெண்டு பேரும் சண்டைய விடுங்க .. “ என்று சமாதனம் செய்தவன் “வருண் நான் இன்னிக்கு கேம்ப் வரல... இங்கே கொஞ்சம் alteration எல்லாம் பண்ணனும்னு உன் friend சொல்லிட்டு இருக்கா .. அது எல்லாம் உட்கார்ந்து sort அவுட் பண்ணிடலாம்னு இருக்கேன்..” எனவும்,

“சரி பாஸ்.. என் வேலை பார்க்க கிளம்பறேன்.. “ என்னும் போதே உள்ளே வந்த “ஹாய் அண்ணா, ஹாய் மகி குட் மோர்னிங்...” என்றாள் வர்ஷா.. அவர்கள் இருவரும் பதில் வணக்கம் சொல்ல,

வருணோ “ ஹலோ மேடம். .. எங்களுக்கு எல்லாம் குட் மோர்னிங் கிடையாதா?” என்றான்

அவனை அப்போதுதான் பார்த்தவள் “ஹலோ.. சார். குட் மோர்னிங்” என்று விட்டு அவனின் பதிலை கூட பெறமால், “அண்ணா .. நம்ம பாய்ஸ் section trainer வாசு இன்று வரவில்லை.. அவங்க வீட்டில் ஏதோ emergency.. இப்போ யாரை alternate செய்வது?” என,

“அப்படியா .. “என்றபடி அன்றைய schedule பார்த்துக் கொண்டிருந்தவன் யோசிக்கவும்,

வருண் “பாஸ்.. என்ன trainer.. வேணும் ?” என

“யோகா trainer தான்.. இன்றைக்கு வரும் பாய்ஸ் எல்லாம் பக்கத்தில் ஒரு பத்து கிராமத்தில் இருந்து வருபவர்கள் .. அவர்களை ட்ரைனிங் செய்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் .. இப்போ என்ன செய்வது  என்று தெரியவில்லையே.. “

“மிதுன் வருண் யோகா ட்ரைனிங் கொடுக்கட்டும்.. அவன் நல்ல யோகா கிளாஸ் எடுப்பான். நாங்க மூணு பேரும் சேர்ந்துதான் கத்துக்கிட்டோம்.. மாஸ்டர்  அவனை அடிக்கடி கிளாஸ் எடுக்க சொல்லுவார்.. சோ அவனை depute பண்ணலாமே.. “ என மகிமா ஐடியா கொடுக்க,

“சூப்பர்.. வருண் உன்னுடைய இன்றைய வேலை என்ன?”

“பாஸ் .. அது ஒன்னும் பிரச்சினை இல்லை.. நாம அந்த அரசு பள்ளியில் போய் பேசத்தான் வேண்டும். .அதுக்கு திவாகரை போக சொல்லலாம். ஏற்கனவே அவனை அழைத்துக் கொண்டு போவதாக தான் திட்டம். அந்த ஊர் தெரிந்தவன் என்று.. இப்போ நானும், மகேஷும் போவதாக இருந்ததை மாற்றி மகேஷும், திவாவும் போகட்டும் .. மகேஷ் நன்றாக பேச கூடியவன்.. “

“பைன்.. அப்படின்னா வர்ஷா, நீ மகேஷ்க்கு இன்போர்ம் பண்ணிட்டு, அப்படியே வருணை நம்ம மீட்டிங் ஹால் கூட்டிட்டு போ.. “ என்றான்..

அவர்கள் இருவரும் கிளம்பவும், மிதுன் மகிமா இருவரும் தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.

ங்கே dehradun ட்ரைனிங் அகாடமியில் சுபத்ரா, நிஷா இருவரும் மிகவும் பிஸியாக இருந்தனர்.. emergency காலங்களில் செயல்பட வேண்டிய முறைகள் பற்றி ட்ரைனிங் என்பதால் மிகவும் கடினமாகவும், அதே சமயம் கவனமாகவும் இருந்து கற்றுக் கொண்டு இருந்தனர்.

எல்லோருமே வீட்டிற்கு பேசுவது கூட குறைந்து விட்டது.. நலம் நலமறிய ஆவல் என்பதற்கு மேல் பேச நேரமில்லாமல் ஓடிக் கொண்டு இருந்தனர். இதனால் சுபத்ரா ஒரு மாதிரி ஹோம் சிக் ஆகி விட்டாள்.

அதை பயிற்சியில் காமிக்கா விட்டாலும், பயிற்சி முடிந்த பின் மிகவும் சோர்வாக காணபட்டாள். நிஷாவிற்கும் ஏக்கம் தான் என்றாலும் அவள் ஒரு மாதிரி சமாளித்தாள். சுபத்ராவின் உற்சாகமின்மை கண்டு கொண்ட நிஷா, அர்ஜுனிடம் சொன்னாள்.

அர்ஜுன், ராகுல் இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அவர்கள் அருகில் வந்த நிஷா,

“கேப்டன்.. “ என அழைக்க, இருவரும் திரும்பினார்கள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.