(Reading time: 10 - 20 minutes)

ன்னம்மா... “ என்றான் அர்ஜுன்.. ராகுலோ “ ஹேய்.. என்ன இன்னிக்கு உன் குருவை விட்டுட்டு நீ மட்டும் தனியா வந்து இருக்க.. ? ஏன் ? எதாவது வம்பு பண்ண போறாளா?” என்று வினாவினான்

“அதை பத்தி பேசத்தான் வந்தேன் கேப்டன்.. சுறா.. ரொம்ப disturb அஹ இருக்கிற மாதிரி இருக்கு..  என்ன செய்யலாம் ன்னு உங்க கிட்ட கேட்க வந்தேன்..”  என்றாள்

“எதனால்ன்னு உனக்கு தெரியுமா ?”

“ஹோம் சிக் மாதிரி தெரியுது.. “

“அப்படியா .. “ என்று யோசித்தவன் ... “சரி பார்த்துக்கலாம்.. கவலை படாதே.. “ என்று அனுப்பி வைத்தான்..

அன்று இரவு உணவிற்கு கான்டீன் செல்லும்போது, சுபத்ரா, நிஷா இருவரின் அருகில் உள்ள மேஜையில் அமரன்தனர் அர்ஜுன், ராகுல் இருவரும்.

“ஹாய்.. சுபத்ரா..” என்றபடி “எத்தனாவது ரவுண்டு ?” என வினவினான் அர்ச்சுன்..

“மேஜர்.. first ரவுண்டு தான்.. “ என்றவள், அவனை பார்த்தவள் “உங்களை பார்த்தால்தான் கணக்கில்லாமல் போயிருக்கும் போலே இருக்கே “ என கூற.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்...

படிக்க தவறாதீர்கள்...

“ஹலோ.. உங்களை மாதிரி இல்லாம.. நாங்க.. கணக்கு தப்பச்சுன்னா முதலேர்ந்து ரொட்டி திருப்பி சாப்பிட நாங்க என்ன பரோட்டா சூரி யா ?”  என,

“ச்சே.. ச்சே.. நீங்க அந்த லிஸ்ட் எல்லாம் கிடையாது மாயா பஜார் ரெங்காராவ் தான்..”

“ஹேய் .. எங்களை எல்லாம் பார்த்தா அண்டா அண்டா வ சாப்பிடுறா மாதிரியா தெரியுது?”

“அதுதான் பாஸ் எனக்கும் புரியல.. நீங்க சாப்பிடுற அண்டா சாப்பாடும் எங்கே போகுதுன்னு சிபிஐ விசாரணை commision வைக்க சொல்லலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்..”

“ஆனால் நாங்க ஏற்கனவே அண்டாவே காணும்னு மனு கொடுத்துட்டோமே” என்றவுடன் சுறா சிரித்து விட்டாள்.

மேலும் கொஞ்ச நேரம் அவளோடு பேசி அவளை நன்றாக சிரிக்க வைத்தவன், அவள் நார்மல் ஆன பிறகு ,

“சுபத்ரா .. இது மாதிரி ஈசியா இருக்கிற மாதிரி பழகு... நாம எல்லோருமே குடும்பத்த விட்டு இங்கே வந்துருக்கோம் தான்.. அது மற்றவர்களோடு சேர்த்து நம்ம குடும்பத்தையும் பாதுக்கப்பதற்குதான்.. நாம கொஞ்சம் frustration ஆனாலும் மொத்தமா பாதிக்கபடுவோம்.. “ என்னும்போதே,

“இல்ல கேப்டன்.. எனக்கு கொஞ்சம் வீட்டு நியாபகம் வந்தது தான்... ஆனால் நான் என்னை control பண்ணிகிட்டேன்..”

“அதுதான் பண்ணாத.. control பண்ணதான் frustrate ஆகும்.. அவங்க கிட்ட பேச முடியலைனாலும் அவங்களுக்கு லெட்டர் எழுதிடு.. அத நீ போஸ்ட் பண்ணினாலும் சரி.. இல்லாட்டாலும் சரி.. அத எழுதின உடனே.. உனக்கு கொஞ்சம் ரெலீப் கிடைக்கும்.. கொஞ்சம் பீல்ஸ் குறைஞ்சதுக்கு அப்புறம் அந்த லெட்டர் அனுப்பினாலும், இல்லாட்டாலும் அது உன்னை பாதிக்காது.. சரியா ?”

“புரியுது ஜி..  ஆனால் அம்மா, அப்பா கிட்டே ரொம்ப close ah .. அதுதான் என்னாலே அவங்க கிட்டே பேசாமல் இருக்கிறது என்னை ரொம்ப சோர்வடைய செய்யுது.. இனிமேல் நீங்க சொல்றமாதிரி எல்லாத்தையும் எழுத ட்ரை பண்றேன்.. “ என்று கூறவும்,

“குட்.. “ என்றான் அர்ஜுன்.. “சரி.. கிளம்பலாம்..” என்று ராகுலை அழைத்தான்.. இவன் சுராவிடம் பேச ஆரம்பித்தவுடனே, மெதுவாக ராகுல் நிஷாவிடம் ஏதோ கேட்டு, அவளை பக்கத்து மேஜையில் அமர வைத்து பேசிக் கொண்டு இருந்தான். அர்ஜுன் குரல் கேட்கவும் அங்கே வந்தவுடன்

“சரி.. வாங்க போகலாம்.. “ என்றான்.

பேசிக் கொண்டே நடந்தவர்கள் , அவர்கள் பிரியும் இடம் வந்ததும் சுபத்ரா ,

“கேப்டன்.. என்னதான் இருந்தாலும் உங்க அளவுக்கு lecture யாராலும் எடுக்க முடியாது.. எங்க maths சார் தாலாட்டு விட உங்களடோது இன்னும் கொஞ்சம் effective ஆ இருக்கு .. இப்போவே கண்ணை கட்டுதே..” என,

“ஏய்.. உன்னை..” என்று அவளை பார்த்து பல்லை கடித்தான் அர்ஜுன்..

“மீ..எஸ்கேப்..” என்றபடி ஓடிவிட்டாள் சுறா.. நிஷாதான் அசடு வழிய சற்று நின்று விட்டு, அவளும் சென்று விட்டாள்..

“டேய்.. மச்சான்.. இன்னிக்கு நல்லா தூங்குவியே.. உன்னோட ஜோடி அவ maths சார் விட உன்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டா.. உன் ஜென்மம் சாந்தி அடைந்சுருக்கனுமே.. “ என ராகுல் ஓட்ட, அர்ஜுன் இப்போது அவனை துரத்தினான்.

மழை பொழியும்

Episode 17

Episode 19

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.