(Reading time: 8 - 16 minutes)

பைரவும், குமாரும் இன்னைக்கு காலையில தப்பிச்சிட்டாங்க சார்...”

“வாட்.............”

அதிர்ந்து போனவனாய் தரையை ஓங்கி மிதித்தான் இஷான் கத்திக்கொண்டே....

“என்னாச்சு இஷான்?...”

பதறியவளாய் தைஜூ இஷானிடம் கேட்க,

“ஒன்னுமில்ல... வண்டியில ஏறு...”

தைஜூவை வண்டியில் அமர சொன்னவன், பிரம்மரிஷியைப் பார்க்க, அவரோ எதுவுமே பேசவில்லை...

ஜெய்யையும், சதியையும் தேடியவனாய் இஷான் காரை செலுத்திக்கொண்டிருக்க, இலக்கில்லாமல் சென்று கொண்டிருந்தது இஷானின் மனம்....

போகும் வழியில் இரண்டு பாதை வந்து நிற்க, இஷானோ எந்த பாதையில் செல்வது என எண்ணமிட்டபடி காரை நிறுத்த, பிரம்மரிஷி இஷானிற்கு கையை காட்டினார் அடர்ந்த காட்டை நோக்கிய பாதையை காட்டி...

சற்றும் யோசிக்காமல், அவன் காரை அந்த பாதையில் செலுத்த, தைஜூவோ, ஜெய்யின் போனுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தாள்... அவளின் முயற்சியில் பலனே கிட்டாது போக, என்னாயிற்றோ என்ற பயம் அவளை ஆட்கொண்டது முழுமையாய்....

அப்போது ஜெய்யின் விழிகள் எங்கும் வேதனையே சிந்திக்கொண்டிருந்த வேளை, அவன் அவனாகவே இல்லாத நிலையும் உண்டாக,

“சதி… சதி… சதி….” என்று அரற்ற ஆரம்பித்தான் அவன்…

“என்ன ஜெய்…. வலிக்குதா ரொம்ப?... இப்படி துடிக்கிறியே… சே…. சூப்பர் போ… இதைப் பார்த்தே தீரணும்னு தான் நான் இப்போ இங்க வந்தேன்…”

பைரவ் எகத்தாளமாய் சொல்லிவிட்டு ஜெய்யினைப் பார்க்க, அவன் விழிகள் எரிந்து கொண்டிருக்கும் தனலாய் ஜொலித்தது…

“பைரவ்……………………..”

வெறிகொண்ட வேங்கையாய் கத்தியவன், பைரவின் மேல் பாய, பைரவ் கீழே விழுந்தான்…

கீழே விழுந்த பைரவை தூக்கி நிறுத்த ஓடி வந்த குமாரை எட்டி மிதித்து தள்ளினான் ஜெய்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

“இன்னும் உன் திமிர் அடங்கலைப் பார்த்தீயா?....”

கோபமாக கேட்டபடியே, ஜெய்யை நோக்கி துப்பாக்கியால் சுட முயற்சித்தான் பைரவ்…

துப்பாக்கியை அவன் கையிலிருந்து பிடுங்கி, பைரவின் மேல் ஏறி அமர்ந்து ஜெய் அவனைப் பார்க்க, முதன் முதலாக, பைரவின் மனதினுள் லேசான நடுக்கம் எட்டிப்பார்த்தது…

முகத்தில் எங்கும் நிறைந்திருந்த ஆத்திரம், வெறி, கட்டுக்கடங்காத கோபம், அதற்கும் மேல் எரித்து விடுவது போல் கனலைக் கக்கிக்கொண்டிருந்த ஜெய்யின் விழிகள், அனைத்தும் சேர்ந்து பைரவிற்கு பயத்தை தோற்றுவித்தது அக்கணம்….

ஒருகணம் இது தான்தானோ என்ற எண்ணமே வந்து விட்டிருந்தது பைரவினின் மனதில்…

“சதி………………………………………………………….….”

ஜெய் மீண்டும் வெறிபிடித்தவன் போல் கத்த, அவனின் அந்த சத்தத்தில் காடே அதிர்ந்தது…

காரில் வந்து கொண்டிருந்த மூவரின் காதுகளிலும் அந்த சத்தம் ஒலிக்க, குலை நடுங்கியது அவர்களுக்கு….

பைரவிற்கோ முதுகுத்தண்டு சில்லிட்டு போனது பயத்தில் முழுவதுமாய்….

கண்மூடித்தனமாக பைரவினை அடித்து நொறுக்கினான் ஜெய், கொஞ்சம் கூட இடைவெளி இல்லாது… தடுக்க வந்த குமாரை, ஒற்றை பார்வையில் தூர தள்ளி நிற்க வைத்திருந்தான் ஜெய்யும்…

“என் சதி எங்கடா?....”

சிங்கம் போல் அவன் உறும, அவனது குரலோ பைரவினை பேச விடாமல் செய்தது…

இரத்தமாய் கீழே பைரவ் கிடக்க, அவனைப் போட்டு கொன்றுகொண்டிருந்தான் ஜெய் கொஞ்சமும் பாரபட்சம் பார்க்காது….

“என் சதியை எங்க மறைச்சு வச்சிருக்க?.................”

கேட்டு கேட்டு ஜெய் அவனை அடித்து துவைக்க, பைரவோ, எரிந்து சாம்பலான அந்த வீட்டை காட்டி,

“அவ செத்துட்டா ஜெய்….” என்றான் திக்கித்திணறி….

அடி நெஞ்சை யாரோ இறுக்கி பிழிவதை போல் உணர்ந்தான் ஜெய்… அவன் இருதயம் சத்தமே இல்லாமல் அவனுள் தனித்திருக்க, பைரவை எரிப்பது போல் பார்த்தவன்,

“ச………………………..தி………………………………………”

என கத்திக்கொண்டே கிழிந்த நாறாய் கீழே கிடைந்த பைரவினை தூக்கி அந்த வீட்டை நோக்கி நடக்கையில்,

“ஜெய்…..” என சத்தம் போட்டுக்கொண்டு அவனை நோக்கி வந்தான் இஷான்….

அவனின் சத்தம் ஜெய்யினைக்கொஞ்சமும் தடுத்து நிறுத்தவில்லை…

மேற்கொண்டு அவன் முன்னேறிச்சென்று, இன்னமும் அங்கே கொஞ்சம் நஞ்சம் எரிந்து கொண்டிருந்த தனலின் மீது பைரவினைத் தூக்கி எறிய முற்பட்ட போது, இஷானும், தைஜூவும், குமாரும் ஓடி வந்து ஜெய்யைத் தடுக்க முயற்சித்தனர்…

யாராலும் அவனை எதுவும் செய்யமுடியவில்லை… அசைக்க கூட முடியவில்லை கொஞ்சமும்…

அனைவரின் முயற்சியும் வீணாக,

“சிவா…. அவனை அந்த நெருப்புக்கு இரையாக்கி நெருப்பை களங்கப்படுத்தாத… அவனை விடு….” என்றார் ஜெய்யின் முன் வந்து….

அவனை எதுவும் செய்யாது, அங்கிருந்தே அவனை மண்ணில் தூக்கி எறிந்தான் ஜெய் வேகமாய்….

பின், அந்த வீட்டின் வாசலில் அவன் மண்டியிட்டு விழ,

“என்னடா ஆச்சு?... ஏண்டா இப்படி இருக்குற?... சதி எங்கடா?...” எனக் கேட்க, ஜெய்யின் விழிகளில் செந்நீர் வழிந்தது…

“மச்சான்… என்னாச்சுடா?...” என இஷான் பதறிப்போய் கேட்க, ஜெய்யோ, தன் முன்னே உரு தெரியாமல் இருந்த வீட்டை கைகாட்ட, ஆடிப்போனான் இஷான்…

“அண்ணா… என்ன சொல்லுறீங்க?....”

பதட்டத்தின் உச்சத்தில் தைஜூ கேட்க, ஜெய்யோ, சட்டென எழுந்து அந்த தனலின் மேல் பாய்ந்தான் யாரும் எதிர்பாராத வகையில்…

“ஜெய்……………….” என இஷானும், தைஜூவும் அலறியபடி அதிர்ந்து நிற்க,

“சதி………………………………………” என கத்தியபடி அந்த தனலின் மேல் நின்று தனது ஒற்றைக்காலை உயர்த்தினான் ஜெய்….

ரௌத்திரத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தவன், நிலைகொள்ளாமல் ஆடினான் கைகளை காற்றில் சுழற்றி… அவனின் ஒவ்வொரு அசைவும், சிவனை நினைவுபடுத்த, அவன் அங்கே ஒரு பெரும் தாண்டவத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்தான் கோபத்தின் உச்சியில்…

அவனின் அந்த ருத்ர தாண்டவத்தைப் பார்த்து விழி விரிந்து போனது அனைவருக்கும்….

அவன் ஆட ஆட, கருமேகங்கள், வானில் சூழ்ந்து, அந்த பகுதியையே தன் வசம் கொண்டு வர, மின்னல் கீற்றுகளும், இடி முழக்கங்களும் உதயமானது அங்கே….

அவன் ஆடலுக்கு அது தாளவாத்தியங்களாய் அமைய, இமைக்கவும் மறந்து போய் பார்த்தனர் அனைவரும்….

தாண்டவத்தின் இறுதியில், கண்களில் குரோதம் பளபளக்க, பார்வையோ தீயை பிரதிபலிக்க, கைகளோ கொல்ல துடிக்க, வேகமாக வந்து பைரவின் மேல் பாய்ந்தான் ஜெய்…

“சதி……………………………………………………….” என பைரவின் மீது அமர்ந்தபடி, இருகைவிரித்து ஜெய் கத்த, ஜெய்யை நோக்கி ஓடினர் இஷான், தைஜூ மற்றும் குமார்…

இருக்கும்போது ஒரு நிமிடம் தன்னை அழைக்கமாட்டானா என்றெண்ணி அவள் ஏங்கிய தருணங்கள் தான் எத்தனை?... இன்று அவனோ அவள் பெயரை சொல்லி உரக்க அழைத்தும், அவள் உறங்கி போனதேன்?... இதுவும் விதியின் சதியா?... இல்லை விதியால் சதிக்கு நேர்ந்த சதியா?... காலமே ஜெய்க்கு பதில் கூற வேண்டும்... அதுவே காலத்தின் நியதி என்னும் போது யார் தான் என்ன செய்யக்கூடும்?...

Episode 28

Episode 30

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.