(Reading time: 15 - 30 minutes)

ன்னும் நான் கேட்டது தெரியவில்லையே’ என்று எண்ணிக்கொண்டு, “இவர் யார்?” என்று ப்ரியாவின் தாத்தா பாட்டியின் நடுவில் அமர்ந்திருப்பவரை சுட்டிக்காட்டி கேட்டான் ப்ரனிஷ்.

“எனக்கு தெரிந்தவர்களைப் பற்றி சொல்லிவிட்டேன். வேறு யாரைக் கேட்கிறான்?” என்று நினைத்து, “என்னிடம் கொடுங்க. கொஞ்சம் நல்லா பாக்கனும். யாருன்னு தெரியலை” என கேட்டு வாங்கினாள்.

தன் நினைவலையை வெகுவாக தட்டிப்பார்த்தும் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை திவ்யாவால். “ம்ம்ஹூம். தெரியலை” என்று அவனிடமே திருப்பித்தந்தாள். தான் நினைப்பது சரியா என்று அறியமுடியவில்லையே; ப்ரியாவிடம் தான் கேட்கவேண்டுமோ என்று ப்ரனிஷ் யோசித்துக்கொண்டிருக்க, அது தேவையே இல்லை என்பது போல் அவனது எண்ணத்தைக் கலைத்தாள் திவ்யா.

“ஞாபகம் வந்துருச்சு. வானதியின் அம்மாவிற்கு முன்பு ஒரு பெண் பிறந்ததாகவும், அவர் இறந்துபோய்ட்டதாகவும் ப்ரியா ஒருமுறை சொன்னாள்.”

‘அவங்க இன்னும் சாகலை’ என்று சொல்ல முயன்ற நாவை அடக்கி, வேறு வாசகத்தைக் கொடுத்து பேசச் செய்தான் ப்ரனிஷ்.

“வேறு எதுவும் தெரியாதா?”

“எனக்கு தெரியாது. ப்ரியாவிடம் வேணா கேட்டு பாருங்க. ஆனா, எதுக்கு கேட்கற?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“பரவாயில்லை. சும்மா தெரிஞ்சுக்க தான் கேட்டேன். நான் வரேன்” என்று புயலென வெளியேறினான் ப்ரனிஷ். அவன் சென்ற திசையையே சில நொடிகள் பார்த்துவிட்டு தன் பார்வையைத் திருப்பினாள் திவ்யா. ‘எதுக்கோ வந்தான், என்னமோ கேட்டான், ஏனோ போனான்’ என்றுவிட்டு தன் வேலையில் கவனமானாள் திவ்யா.

தூரத்தே ஒலித்த கோவில் மணியால் தான் இருக்கும் இடம் நினைவிற்கு வந்தது ப்ரனிஷுக்கு. அங்கிருந்து கிளம்பி நேராக திருச்சிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் தன் காரை விட்டவன்தான். இதோ, ஐந்து மணிநேரப் பயணத்திற்குப் பின் இப்போது அதற்கு இடைவெளி விட்டிருக்கிறான். இன்னும் சிறிது நேரத்தில் தன் கேள்விகளுக்கு விடை தெரிந்துவிடும். ‘இதுவரை சொல்லாதவர் இப்போது மட்டும் உரைப்பாரா?’ என்று அவன் மனம் கேட்க, ‘இனி வேறு சொல்வதைத் தவிர வழியே இல்லை அவருக்கு’ என்று நினைத்துக் காரை இயக்கி தன் வீட்டை நோக்கித் திருப்பினான் அவன்.

பாரதியார் பாடியதைப் பின்பற்றியே செய்ததாக இருக்கும் அந்த வீடு. அங்கு நுழையும்போதெல்லாம் ப்ரனிஷ் தானாக முனுமுனுப்பான் அப்பாடலை. அந்த அழகிய சோலையின் நடுவில் அமைந்திருந்த வீட்டை அடைந்த போது அவனது மனமும் சிறிது மட்டுபட்டிருந்தது.

“அப்பா” என்று கூறிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான் ப்ரனிஷ். பொதுவாக பெண்குழந்தைகள் அப்பா செல்லமாகவும், ஆண் குழந்தைகள் அம்மா செல்லமாகவும் இருப்பது இயல்பு. ஆனால் இங்கு, ப்ரனிஷும் சரி, சுசித்ராவும் சரி, இருவருமே அப்பா செல்லங்கள். வீட்டிற்கு வந்ததும் அவர்கள் முதலில் கேட்பது “அப்பா இன்னும் வரலியாம்மா?” என்பதாகவே இருக்கும். இவர்களது பாசத்தை சந்தோசமாக ரசிப்பார் ப்ரனிஷின் அம்மா.

இன்றும் அதேபோல அப்பாவைத் தேடியே நுழைந்தான். அவனது தேவையை அறிந்தவர் போல் ஹாலிலேயே அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார் அவன் தந்தை.

“வாப்பா மணி” என்றவர், “பாரு, பையன் வந்துருக்கான்” என்று உள்ளே நோக்கிக் குரல் கொடுத்தார்.

மற்ற நேரமாக இருந்திருந்தால், “பாரும்மா, என்னைப் பாரும்மா; உன் பார்வைக்காய் தவிக்கிறேன் நானம்மா” என்று ராகம் பாடி கிண்டலடித்திருப்பான் தன் தந்தை தாயை செல்லமாக விளித்ததை வைத்து. ஆனால் இப்போது, அதன் நினைவுகூட இல்லை அவனுக்கு.

“வா வா மணி. நானே உனக்கு கூப்பிடனும்னு இருந்தேன். கலைச்சுப்போய் வந்துருப்ப. குளிச்சுட்டு வாப்பா. சாப்பிடலாம்” என்று பாசமாகக் கூறினார் பார்த்தவி. மறுக்க நினைத்த ப்ரனிஷுக்கு ராமபத்திரர் நேரத்திற்கு உணவருந்த வேண்டும் என்பது ஞாபகம் வர, சரியென்று தலையசைத்து மாடியேறினான்.

(ஹீஹீஹீ… சாரி மக்களே! தனித்தனியா சொல்வதற்கு பதில், ஒன்னா சொல்லிடலாம்னு இப்போ சொல்லலை. கொஞ்சம் வைட்டீஸ் ப்ளீஸ்…)

வா…. பவா…” என்று கூவிக்கொண்டு தன் வீட்டினுள் நுழைந்தாள் ப்ரியா. பவா என்பது, ப்ரியா தன் அம்மா பவானிக்கு வைத்த பெயர். தந்தையுடன் நல்லுறவு இல்லாத காரணத்தால் தாயே அவளுக்கு எல்லாமுமாகிப்போனார். எனவே, இப்போதும் தன் தாயகிய தோழியை கூப்பிட்டவள், தன் தாயின் தலை தெரிந்ததும், கையில் இருந்தவற்றை அங்கேயே போட்டு ஒரு ஹைஜம்ப் செய்து வந்து, தாயைக் கட்டிக்கொண்டாள் ப்ரியா.

“வாடா… என்ன இது, இவ்வளவு லேட்?” என்று கேட்டார் பவானி.

“ட்ரைன் லேட் பவா” என்றபடி சோஃபாவில் சாய்ந்தாள் மகள்.

“ஒரு ஃபோன் செய்வதற்கென்ன?” என்று அவளை திட்டிக்கொண்டே, வாயிலில் அம்போவென அவள் விட்டுவிட்டு வந்த பைகளை எடுத்து அவளது அறையில் வைத்துவிட்டு வந்தார்.

“ஃபோன் சுவிட்ச் ஆஃப்ம்மா” என்றவளின் காதைத் திருகி, “விடிய விடிய பாட்டு கேட்டா சுவிட்ச் ஆஃபாகாம என்ன செய்யும்?” என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.