(Reading time: 15 - 30 minutes)

யாரைக்கேக்கனும்?”

“என்னைக் கேட்கனும்”

“உன்னை ஒவ்வொரு விஷயத்திலேயேயும் கேட்கனும்னு எனக்கு அவசியமில்லை. இதுவரை உன்னைக் கேட்டது போதும். ஒழுங்கா நான் சொல்வதுபோல் செய்.” என்றுவிட்டு நகர்ந்தார் கைலாசம்.

அவர் சென்றதும், “இவரு சொல்வதற்கெல்லாம் நான் நடக்கனுமா? என்னால முடியாது. முடிஞ்சதை பார்த்துக்க சொல்லும்மா” என்றாள் ப்ரியா கோபமாய். தான் இங்கு சந்தோசமாக சொல்ல வந்ததென்ன, இங்கே நடப்பதென்ன?

“ப்ரியா, நாங்க எல்லாருமே அந்த பையனைப் பற்றி விசாரிச்சுட்டோம்மா. ரொம்ப நல்ல டைப். உனக்கு ரொம்ப பொறுத்தமா இருப்பார். உங்க அப்பாவோட ஃப்ரெண்ட் வகையிலே சொந்தமாம். உன் பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, எல்லாருக்குமே சம்மதம்.” என்றார்.

‘You too, mummy’ என்று பார்த்த ப்ரியாவை, “நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா. உன் அப்பா இந்த அளவு பொறுமையாக பேசுவதே பெரிய விஷயம். ஒத்துக்கோம்மா. நாங்க உனக்கு கெடுதல் செய்ய மாட்டோம்” என்று கரைக்க ஆரம்பித்தார் பவானி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“ஆனால், எனக்கு பிடிக்காததை செய்ய சொல்றீங்களே. அம்மா, எனக்கு டீம்லீடா ப்ரமோஷன் கிடைச்சுருக்கு. அதை உங்களிடம் சொல்ல வந்தா, இப்போ போய் வேலையை விட சொல்றாரே” என்று அழுகையுடன் கேட்டாள் மகள்.

இரண்டரை வருடத்தில் இத்தகைய பதவிக்கு வர தன் மகள் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பாள் என்று அந்த தாயுள்ளம் வருத்தமுற்றது. என்ன செய்ய? இப்போது, இவை எல்லாவற்றையுமே விட வேண்டியதாக இருக்கிறதே!

“பரவாயில்லைம்மா. சில நாட்கள் கழித்து வேறு எங்காவது வேலைக்கு போகலாம். இப்போ அப்பா சொல்றதைக் கேளுடா.” இருவருக்கும் நடுவில் அவதிப்படுபவர் அவரல்லவா? முன்பு, அவருக்கும் ப்ரியா நினைத்ததை அடையவேண்டும் என்று நினைத்தார். ப்ரியாவை போராடி அனைவரும் சென்னைக்கு அனுப்பிவைத்ததே அவளுடைய தன்னம்பிக்கையை வளர்க்கத்தானே!

ப்ரியா பிறந்து, நகரத்திற்கு குடிபெயர்ந்தவுடன், மகளை வளர்க்கவே தன் பணியை விட்டவர் இவர். தாயைப் போலவே இருப்பேன் என்று ப்ரியா பல தருணங்களில் கூறக் கேட்டிருக்கிறார். அதனால் ப்ரியா திருமணத்திற்குப் பின் வேலைக்கு செல்வது நிச்சயம் இல்லாத ஒன்று. எனவேதான் ப்ரியா தன்னை நிலைபடுத்திக்கொள்ள டைம் கேட்டாள்.

தாய்மை என்பது எத்தகைய வரம்? அது எப்போதுமே பிள்ளைகளுக்கு நன்மையையே நினைக்கும். அன்று, அவருக்கு ப்ரியாவின் விருப்பம் முக்கியமாகப் பட்டது. அதனால் ப்ரியாவின் பக்கம் நின்றார். இன்று, ப்ரியாவின் வாழ்வு முக்கியமாகப் பட்டது. அதனால் கணவன் பக்கம் நின்றார்.

அவர் இவ்வாறு மாறுவதற்கும் காரணமிருந்தது. சஞ்சயின் குடும்பத்தைக் கண்டமத்திரத்திலேயே அவரது அனுபவமூளை இவர்கள் தன் மகளை நன்கு பார்த்துக்கொள்வர் என்ற நம்பிக்கையைத் தந்தது. அதனாலேயே கணவரின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இரு குடும்பமும் சேர்ந்து ஜாதகம் பார்க்க சென்றபோதுதான் தெரிந்தது, ப்ரியாவிற்கு இன்னும் பதினைந்து நாளில் கல்யாண யோகம் முடியப்போகிறது என்றும், அதன்பின், அது வரவே வராது என்றும். எனவேதான் இந்த அவசர ஏற்பாடு. இவை தெரிந்தால், ப்ரியா எல்லாமே பொய் என்று சொல்லிச் சென்றுவிடுவாள். ஆனால், இதுபோன்ற சம்பிரதாயங்களிலேயே வளர்ந்தவர்களால் அவ்வாறு கூற இயலுமா?

“அம்மா, ப்ளீஸ்ம்மா… இன்னும் ஒரு வருஷம். அப்பாவிடம் சொல்லும்மா”

“ப்ரியா… இங்கே பாரு” என்று பவானி கடிந்து அழைத்தவுடன், ப்ரியா தானாக அவரை நோக்கினாள்.

“சொல்றதைக் கேளும்மா. அப்பா எப்பவுமே உன்மேல் பாசமுடன் தான் இருக்கார். அதை வெளிப்படுத்தத்தான் தெரியலை. இந்த இடத்தை ஒத்துக்கொள்வதற்குமுன் எவ்வளவு யோசிச்சார் தெரியுமா? ப்ளீஸ்டா. நாங்க எல்லாருமே சேர்ந்துதான் முடிவு செய்தோம். ஓகே சொல்லுடா.” இன்னும் பலவாறு சொல்லி ப்ரியாவை சம்மதிக்க வைத்தார் பவானி.

“டியர் ஃப்ரெண்ட்ஸ், இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த அப்டேட்டை சில காரணங்களால் இத்தோடு முடிக்க வேண்டியதாயிற்று. மன்னிக்கவும்… சென்ற பகுதிக்கு கருத்துகள் கூறியதற்கு நன்றி… ”

தொடரும்

Episode 06

Episode 08

{kunena_discuss:1075}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.