(Reading time: 9 - 18 minutes)

தொலைக்காட்சியில் அனைத்தையும் பார்த்தப்படி அமர்ந்திருந்தார் வைத்தியநாதன்.

"சுப்ரியா கொலை வழக்கின் இறுதி தீர்ப்பு என்ன?இருதரப்பு வழக்கறிஞர்களும் தனது வாதங்களை முன்மொழிந்தனர்.குற்றவாளிக்கு தண்டனையா?கருணை அடிப்படையில் மன்னிப்பா?சில நொடிகளில்..."-என்றார் ஒரு பத்திரிக்கையாளர்.தொலைக்காட்சியின் இரு மூலையிலும் மூலைக்கொன்றாக,ஜோசப்பின் புகைப்படமும் எதிர்பக்கம் அர்ஜூன் குமாரின் புகைப்படமும் காட்டப்பட்டு இடையில் நிமிடங்கள் எண்களாய் ஓடிக் கொண்டிருந்தன...

[பின்வரும் யாவும் எனது சொந்த விருப்பங்களே..!இது இந்திய சட்டத்திட்டங்களை அவமதிக்க எழுந்தவை அல்ல..!]

"இருதரப்பு வாதங்களையும் இந்த நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.அர்ஜூன் குமாரின் வாதத்தினை இந்த கோர்ட் ஏற்றுக்கொள்ள இயலாது.அதனை ஏற்க முடியாதப்படி வலுவான ஆதாரம் சில தினங்களுக்கு முன்பே என் பார்வையில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது ! அதே சமயம் சமூகத்தில் உயர்நிலையில் இருக்கும் மனிதர் ஆதலால் பிரதாப்பிற்கு மன்னிப்பும் வழங்கலாம்!"-அங்கு சில நொடிகள் கனத்த அமைதி!!

"ஆனால்,நீதிமன்றம் என்பது நியாயம் வேண்டி வருபவரை அரவணைத்து நீதி வழங்க உருவாக்கப்பட்டதாகும்!தவறிழைத்தவர்களில் ஒருவர் கூட அதற்குரிய தண்டனையில் இருந்த தப்ப இயலாது!இங்கு சுப்ரியாவிற்கு சாதகமான ஒரே ஆதாரம் சில தினங்களுக்கு முன்னரே என்னிடம் சமர்ப்பிக்க காரணம்,இது போன்ற கொடுமை பலரின் முன்னிலையில் காண்பதாகாது என்பதே!!சந்தேகமில்லாமல் சுப்ரியாவின் நீதி அவளை அடையும்!குற்றவாளியான பிரதாப்பிற்கு இன்று நள்ளிரவிற்குள் மரண தண்டனை விதிக்கிறேன்!அவரது மரணத்தின் முன் அவருடைய ஆண்மையானது அகற்றப்பட வேண்டும் என்று இந்த கோர்ட் உத்தரவிடுகிறது!"-என்று கூறி கையொப்பமிட்டு சீல் வைத்தார் நீதிபதி.

"இந்த கோர்ட் கலைகிறது!"-தொலைக்காட்சியில் ஜோசப்பின் புகைப்படம் நடுவில் தோன்றி அந்த கீழ் அக்னி பிரவாகமாய் எழுதப்பட்டது பின்வரும் வாசகம்!!!

"TRUTH ALONE TRIUMPHS!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

தைப் பார்த்த லட்சுமி கதறி அழுதார்.

மற்றவரின் நிலை சொல்லவும் வேண்டாம்.

"சுப்ரியா வழக்கின் இறுதி தீர்ப்பு!அரச நீதியும் தவறவில்லை.ஆண்டவன் நீதியும் தவறவில்லை."-என்ற தொலைக்காட்சியை கீழே தள்ளி உடைத்தார் லட்சுமி.

"லட்சுமி!"-அவரை தடுக்க வந்த பல்லவியை தடுத்தார் அவர்.

"எல்லாத்துக்கும் காரணம் உன் பொண்ணு தான்!பழி வாங்கிட்டா!என் குடும்பத்தையே சிதைத்துட்டா!அவ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டா!அவ வாழ்க்கையே நாசமாக போகுது பாரு!"-மனநிறைவோடு சாபம் வழங்கினார் அவர்.

"நீங்க நல்லா இருக்கணும்மா!இன்னிக்கு என் பொண்ணோட ஆத்மா சாந்தி அடைந்திருக்கும்!உங்க வம்சமே எந்த குறையும் இல்லாமல் நல்லப்படியா வாழும்!"-மனம் குளிர வரம் நல்கினார் அந்த தாய்.

"நான் எதுவும் பண்ணலைம்மா!செய்தது எல்லாம் ஜோசப் சார் தான்!நன்றியை அவருக்கு சொல்லுங்க"-அந்த தாயின் விழிகள் ஜோசப்பை நோக்க,அவன் புன்னகைத்தப்படி,

"இரண்டு பேரில்  யாருக்கு சொன்னாலும் ஒண்ணு தான்.எங்களுக்கு நன்றி வேண்டாம்!ஆசீர்வாதம் போதும்!"-என்றவனை கண்ணீரோடு மனமாற வாழ்த்தினார் அவர்.அனைவரும் சென்று தனித்து விடப்பட்ட நிலை தன்னில்...

"இனி எல்லாம் நல்லதுக்காக தான் அம்மூ!"-என்றான் ஜோசப்.

ஆனால்,அவள் மனம் அவ்வாறு கூற மறுத்தது.

"ஏ..என்னாச்சு?"-இதமாக ஒலித்தது அவனது குரல்.

"ஒண்ணுமில்லைங்க..நான் வீட்டுக்கு கிளம்புறேன்.பாட்டி தேடுவாங்க!"-என்று நகர்ந்தவளை தடுத்தான் ஜோசப்.

அவள் என்ன என்பது போல அவனை பார்த்தாள்.

"சும்மா போனா எப்படி?"-அவளை கூர்மையாக பார்த்தப்படி வினவினான் அவன்.

"வேற என்ன?"-அவள் சிந்திப்பதற்குள் சட்டென அவளை இழுத்துக் கொண்டான் அவன்.

"எதுவும் ஸ்வீட் இல்லையா?"

"நான் என்ன ரெடிமேடா ஸ்வீட் ஸ்டால்லா வைத்திருக்கேன்.என்கிட்ட போய் கேட்கிறீங்க?"-அவ்வாறு அவள் கூறியதும் அவன் முகத்தில் பலத்த ஏமாற்றம்.

"இவளை வைத்துட்டு எப்படி தான் குப்பை கொட்ட போறேனோ!ஒரு மண்ணும் தெரியலை..."-என்று முனகினான் அவன்.

"என்னாச்சு?"

"ஒண்ணுமில்லை..நீ கிளம்பு!உனக்கு லேட்டாகுது!"-வெறுப்பாக கூறினான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.