(Reading time: 9 - 18 minutes)

ரு புன்னகையோடு அவனை நெறுங்கியவள்,எங்கோ வெறித்திருந்த அவன் முகத்தை திருப்பி,அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.சட்டென நிகழ்ந்த அந்த நிகழ்வினால் திணறிப் போனான் ஜோசப்.

"அடிப்பாவி!உன்னை போய் பச்சை மண்ணுன்னு நினைத்தேனே!ம்...எட்டு வருஷத்துக்கு முன்னாடி கேட்டது,இப்போ தான் கிடைக்குது!"-என்றான் அவன்.நிர்பயாவின் முகத்தில் விளக்க இயலாத மாற்றம்..!

"நான் கிளம்புறேன்!"-என்றவளது கரத்தை இறுக பற்றினான் அவன்.

"என்ன?"

"ம்..ஒண்ணுமில்லை..!"-என்றவனது விழிகள் முழுதிலும் அவ்வளவு ஏக்கம்.புன்னகைத்தப்படி அங்கிருந்து விலகினாள் அவள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 02..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

மனம் முழுதும் பொங்கிய ஆனந்தத்தோடு இல்லம் நோக்கி வந்தவளுக்கு பெருத்த துயரம் காத்திருந்தது.அவள் வீட்டில் காலடி வைத்ததும்,

"எங்கே அவ?"-என்ற பல்லவியின் கோபமான சப்தம் செவிகளில் விழுந்தது.

பார்வதியின் கண்கள் அவளை நோக்க,அதே கோபத்தோடு திரும்பினார் பல்லவி.

"சந்தோஷமா?இப்போ உனக்கு திருப்தியா இருக்குமே?எங்கே இருந்துடி இவ்வளவு பகையை வளர்த்து வைத்திருக்க?மனசு இப்போ குளிர்ந்திருக்குமே உனக்கு?"

".............."

"நீயெல்லாம் ஒரு பொண்ணா?உன்னை நினைத்தாலே அவமானமா இருக்கு!எவ்வளவு கேவலமான தண்டனையை வாங்கி கொடுத்திருக்க?என் குடும்பத்தையே சீரழிக்க எப்படி உனக்கு மனசு வந்தது?"-ஈன்ற தாயே தன்னை யாரோவாய் பாவிக்க,சுக்கலாய் நொறுங்கி போனாள் நிர்பயா.

"போ!என்னை எதிர்க்க யாராலும் முடியாது!அப்படி எதிர்க்க நினைத்தால் நாசமாக்கிடுவேன்னு பெருமை சொல்லிக்கோ!இப்போ சொல்றேன் நீ என் மகளும் இல்லை.நான் உன் அம்மாவும் இல்லை.உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்!நீ இல்லை...நீ செத்தா கூட உன்னை பார்க்க வர மாட்டேன்.முடிந்தால்,எனக்கு எதாவது உபகாரம் பண்ண நினைத்தால்,இனி உயிரோடவே இருக்காதே!நானும் நிம்மதியா இருப்பேன்.என் குடும்பமும் உன் நிழல் படாம சந்தோஷமா இருக்கும்!"-தீச்சொற்களை கக்கிவிட்டு வெளியேறினார் பல்லவி.

"மா நிர்பயா!"-சிலையென நின்றிருந்தவளை தேற்றி செல்கையில்,

"தாத்தாக்கு எதுவும் தெரிய கூடாது பாட்டி!"-என்று கூறிவிட்டு சிலையாக உள்ளே சென்றாள் அவள்.

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.