(Reading time: 10 - 19 minutes)

தியம் நான்கு மணிக்கு அட்டகாசமாக நலங்கு ஆரம்பித்தது.   ஸ்வேதா சென்று ஹரி வீட்டவர்களை நலங்கிற்கு வருமாறு அழைத்தாள்.  வார்த்தைகளால் கூப்பிட்டால் வரமுடியாது.  பாட்டுப் பாடி அழைக்க வேண்டும் என்று அங்கிருந்த இளைஞர் பட்டாளம் கத்த ஸ்வேதாவும்

“நலங்கிட வாரும் ராஜா   நாணயம் உள்ள துரையே.....

நலங்கிட வாரும் ராஜா

நாணயம் உள்ள துரையே”, என்று பாடி அழைத்தாள்.  ஹரியும், ஸ்வேதாவும் பட்டுப் பாயில் அமர்ந்து ஒருவருக்கொருவர் நலங்கிட்டு, அரிசியும் பருப்பும் மாற்றிக்கொண்டு தேங்காய் உருட்டி விளையாடினார்கள். 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

அனந்து தாத்தாவும், பரசு தாத்தாவும் full form-ல் இருந்தார்கள்.  அனந்து ஹரியின் பக்கமும், பரசு ஸ்வேதாவின் பக்கமும் நின்று,  அவர்களை போட்டியில் ஜெயிக்க வைக்க போட்டி போட்டார்கள்.  தேங்காய் பிடித்திழுக்கும் போட்டியில் ஸ்வேதா இரு கையில் பிடித்திருந்த தேங்காயை ஹரி அசால்ட்டாக ஒரே கையில் பிடித்திழுக்க, பரசு தாத்தா ஆபத்பாந்தவனாக அவரின் கையைக் கொடுத்து ஸ்வேதாவை காப்பாற்றினார்.  அனந்துவின் போங்காட்டம் என்ற கம்ப்ளைன்ட் அனைவரின் சிரிப்பில் வெளியில் கேட்காமலேயே அடங்கி விட்டது.  அதற்கு பழிக்குப் பழி வாங்க அப்பளம் உடைக்கும் போது பின்னால் நகர்ந்து சென்ற ஸ்வேதாவை முன்னால் தள்ளி பழி தீர்த்துக் கொண்டார் அனந்து தாத்தா.  ஏற்கனவே ஸ்வேதா பாட்டுப் பாடி விட்டதால் அனைவரும் ஹரியைப் பாட சொல்ல, அவன் இஞ்சி இடுப்பழகி ரேவதி ஸ்டைலில் வெறும் காத்துதாங்க வருது என்று கூறியும், யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.  மேலும், ஹரி பாடாவிட்டால் தான் பாடிப்போவதாக கௌரி கூற, அதற்கு கௌஷிக் கல்யாணத்தில் ஏற்கனவே கூட்டம் அதிகமாக இருப்பதால், கழுதைகள் வராமல் இருக்கும் பொருட்டாவது ஹரியைப் பாட சொன்னான்.  ஹரிக்கும் அந்த பயம் இருந்ததால், “முன் தினம் பார்த்தேனே.....”, என்று சூர்யா ஸ்டைலில் பாடிக் கலக்கினான். 

இவ்வாறாக கௌரி கல்யாணத்தில் ஆரம்பித்த இவர்களின் காதல் அழகாக கல்யாணத்தில் முடிந்தது.   ஹரியின் சீண்டல்களுடனும், ஸ்வேதாவின் சிணுங்கல்களுடனும் அவர்கள் ஆனந்தமாக  வாழ நாமும் வாழ்த்துவோம்.  

Dear Friends,  A very happy and prosperous new year and Pongal to you all.  ஹரி, ஸ்வேதா கல்யாணம் இனிதே முடிந்து விட்டது. பெரிய கருத்துக்களோ, திடுக்கிடும் திருப்பங்களோ இல்லாத feel good வகை கதை.  Hope you all enjoyed it.   நான் எழுதிய மொக்கை நகைச்சுவையையும் படித்து பாராட்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

முற்றும்

Episode # 18

{kunena_discuss:964} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.