(Reading time: 14 - 28 minutes)

யோ பரவால்ல சார்..வேணும்நு யாராவது பண்ணுவாங்கலா..

தம்பி இந்தாங்க இந்த ட்ரெஸ்ஸை போட்டுக்கோங்க என ஒரு கவரோடு வந்து நின்றார் துளசி சேகரின் மனைவி..

இல்ல வேண்டாம் மேடம் நா வீட்டுக்கு தான் போணும் ஒண்ணும் பிரச்சனையில்ல..

தம்பி இது அவ கசின் பிரதர்காக எடுத்ததுதான் சாரோடது இல்ல உங்களுக்கு கரெக்ட்டா தான் இருக்கும் பயப்படாம வாங்கிக்கோங்க என்று கூற,அதற்குமேல் மறுக்காமல் அதை பெற்று கொண்டு அங்கிருந்த அறை நோக்கி சென்றான்…

உடை மாற்றி வந்தவனிடம் சேகர் பேச ஆரம்பித்தார்..அந்த தேவதையோ ஒன்றுமே நடக்காதது போன்று கையில் ஆப்பிள் பௌலை வைத்து கொண்டு டீவியை மும்மரமாக பார்த்து கொண்டிருந்தாள்..

இவ தான் என் பொண்ணு சஹானா..பெங்களுர்ல பேஷன் டிசைனிங் படிச்சுட்டு ரொம்ப வருஷத்துக்கப்பறம் இப்போதான் வந்துருக்கா..நடுல எப்போவாவது வருவா பட் நீ அப்போ பாத்துருக்க மாட்ட..ஒரே பொண்ணுணு ரொம்ப செல்லம் குடுத்து வளர்த்துட்டோம்..அதன் விளைவு தான் உனக்கு இப்போ அபிஷேகம் நடந்தது..என் அண்ணா பையன் உனக்குகூட தெரியுமே சிவா அவன் வரேன்னு சொல்லிருந்தான்..அவனுக்கு சர்பரைஸ் குடுக்க போறேன் அது இதுநு சொல்லி எங்கள உள்ளேயே உக்கார வச்சுட்டா..நீ வருவநு எதிர் பாக்கலப்பா..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவளோ யாரோ யாரையோ பற்றி பேசுகிறார்கள் எனக்கென்ன என்பதுபோல் அமர்ந்திருந்தாள்..கார்த்திக்கிற்கு உதடுகள் தானாகவே சிரிப்பை உதிர்த்தன..சாஹானா இங்க வா என சேகர் அழைக்க..எஸ் டாட் என வந்து நின்றவளை பார்க்க ஏதோ பள்ளி செல்லும் பிள்ளை போல் தோன்றியது..இவரு தான்..

மிஸ்டர்.கார்த்திக்..நம்ம ஆடிட்டர்..ரொம்ப ரொம்ப நல்ல பையன்..வயசுக்கும் மூளைக்கும் சம்மந்தமேயில்ல அவ்ளோ அறிவாளி..வாழ்க்கைல முன்னேறும்ங்கிற வெறி அவரு வேலைலயே தெரியும்..எல்லாத்துக்கும் மேல அவர பாத்தா உங்கள சின்ன வயசுல பாத்தாமாறி இருக்கு அதானே..

இதை கேட்டு அவர் சத்தமாய் சிரிக்க,கார்த்திக்கோ ஆச்சரியமாய் பார்த்தான்..சாரி மிஸ்டர் கார்த்திக் உங்களபத்தி காது வலிக்குற அளவு கேட்டுட்டேன் அதான் இன்னோரு தடவ அப்பா எனர்ஜிய வேஸ்ட் பண்ண வேண்டாமே..என்ன திட்டனும்னாலே எங்கப்பா உங்களோட கம்பேர் பண்ணி தான் திட்டுவாரு..அவன் எவ்ளோ பொறுப்பாயிருக்கான் நீ ஏன் இன்னும் குழந்தையாவே இருக்க..ப்ளா ப்ளா ப்ளாநு..அதுக்காகவே உங்க மேல செம கோவத்துல இருந்தேன்..பட் இப்போ நடந்ததுக்கு உங்க ரியாக்ஷன பாத்தாலே தெரியுது அப்பா சொன்னது எவ்ளோ கரெக்ட்நு..உங்க இடத்துல நா இருந்திருந்தேன்னா இந்நேரம் கைல கிடைக்குறத தூக்கி அடிச்சுருப்பேன்..பட் இட்ஸ் சோ நைஸ் ஆப் யூ..என பட்டாசாய் வெடித்து முடித்தாள்..

அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே சிவா உள்ளே வர டேய் தடிமாடு நில்லு உனக்கு ரெடி பண்ண ஆப்புல தான் பாவம் இவரு சிக்கிட்டாரு என அவனை நோக்கி இவள் ஓட..வந்தவனோ ஏதோ பேயை கண்டது போல் ஓட ஆரம்பித்தான்..வீடே அமர்க்களபட,சேகர் தான் நீ வா கார்த்திக் இதுங்கள திருத்தவே முடியாது..என்று அலுவலக அறைக்கு அழைத்து சென்றார்..வேலை முடியும் தருவாயில் உள்ளே வந்தான் சிவா..ஹாய் கார்த்திக்..வசமா அந்த குட்டிசாத்தான்ட்ட மாட்டீனீங்க போல..

லேசாய் சிரித்தவன் பர்ஸ்ட் அட்டெம்ட் மிஸ் ஆனதுக்கும் சேர்த்து இப்போ சிக்கிட்டீங்க போல..

அவ்ளோவா தெரீயுது என தலைமுடியை அவசரமாய் சரி செய்தான்..சிவாவும் கார்த்திக்கும் நெருங்கிய நண்பர்கள் இல்லையென்றாலும் இந்த இரண்டு வருடத்தில் அவர்களுக்குள் இயல்பாய் பேசி கொள்ளும் அளவிற்கு அழகீய நட்பிருந்தது..

பப்ளிக்..பப்ளிக்..நேத்து அவள பிக்கப் பண்றதுக்கு ரயில்வே ஸ்டேஷன் வர சொல்லிருந்தா கடைசி நேரத்துல கோர்ட்ல வேலை வந்துடுச்சு..நீயே ஆட்டோ பிடிச்சு போய்டுநு சொன்னேன்..நல்லவளா மறுத்து பேசாம போனை கட் பண்ணும் போதே உஷாராய்ட்டேன்..அதனாலதான் பாத்து பக்குவமா உள்ளே நுழைஞ்சேன்..ஆனா எதிர்பாராம நீங்க மாட்டிக்கிட்டீங்க..

என்ன சிவா ஒரு வக்கீலா இருந்துட்டு தங்கச்சிக்கு இப்படி பயப்படுறீங்க..என்று கார்த்திக் மீண்டும் சிரிக்க..

அய்யயோ அவள பத்தி தெரியாம பேசுறீங்க..அப்பறமா டீடெய்ல்டா சொல்றேன்..ஏன்னா வாராவாரம் வரும்போது நிறைய பேஸ் பண்ண வேண்டியிருக்கும்..எனும்போதே..

ஏ குரங்கு நீ இன்னும் கிளம்பலயா??-சஹானா

என் சித்தப்பா ரூம்ல நா இருக்கேன் உனக்கு ஏன் எரியுது??

மிஸ்டர் கார்த்திக் என் மேல உள்ள பொறாமைல தப்பு தப்பா சொல்லிருப்பான் நம்பாதீங்க..பேஸிகலி ஐ அம் அ வெரிகுட் கேள்..

ம்ம்ம் சொல்லிகிட்டாங்க..-சிவா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.