(Reading time: 5 - 9 minutes)

41. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

விஷத்தினை விஷத்தால் தான் முறியடிக்க வேண்டும் என்ற பழமொழி கூட உண்டு… அதற்கேற்ப, அவள் மயங்கி விழுந்த காரணமே அவளுக்கு மருந்து என அவர்கள் முடிவு செய்ய, பிரஜாபதியோ அதற்கு மறுத்தார்…

எனினும், பிரசுதியும், மகரிஷி பிருகுவும் அந்த மருந்தை சதிக்கு கொடுத்தே தீர வேண்டும் என நினைக்க, அதற்கு முயற்சித்தார் மகரிஷி பிருகு….

நேரே மகாதேவனை சந்தித்து அவர் விஷயத்தைக்கூறி அரண்மனைக்கு அழைத்து வந்தார்…

சதியின் அறைக்குள் நுழைந்ததும், சதியின் சகோதரிகள் அவரிடம் சென்று தங்கள் தவறுக்கு மன்னிப்பை வேண்டினர்….

பின், சதியின் அருகில் சென்றவன், மூர்ச்சையாகி போயிருந்தவளை, பார்த்தான்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

எந்த இசையைக் கேட்டு அவள் மயங்கினாளோ, அதே இசையை அவர் அங்கே வாசிக்க ஆரம்பித்தார்… அவளின் செவிகளுக்குள் அது புகுந்து அவளது நரம்பினைத் தூண்ட, அவளுக்கு சுவாசம் வந்திருந்தது…

“எழுந்திரு தாட்சாயிணி…..”

மகாதேவன் அவளை அழைத்திட, சதியின் விழிகளும் மெல்ல மெல்ல அசைய, சட்டென கண்விழித்தாள் அவள்…

கண்விழித்ததும், பட்டென எழுந்து அவள் அமர, அவள் விழிகள் மகாதேவனை தான் முதலில் கண்டது…

தன்னைப் பார்த்தவளை, பார்த்து புன்னகைத்தவர், “இனி பயப்பட தேவையில்லை… நான் வருகிறேன்….” என்றபடி மகரிஷி பிருகுவினைப் பார்க்க, அவரோ மகாதேவனுக்கு நன்றி கூறினார்…

பிரசுதியும், சதியின் சகோதரிகளும் மகாதேவனுக்கு நன்றி கூற, நடப்பதை வியப்போடு பார்த்துக்கொண்டிருந்த சதி, சட்டென தன் படுக்கையிலிருந்து எழுந்தாள்….

“தாங்கள் எதற்காக என்னை காப்பாற்ற உதவினீர்கள்?...”

அவளின் கேள்வியில் அவள் புறம் திரும்பினான் அவன்…

“தாம் என் தந்தையின் எதிரி… அவ்வாறு இருக்கையில், தாம் ஏன் எனக்கு உதவ முன்வந்தீர்கள்?...”

“உதவுவதற்கு எவ்வித தடைகளும் பார்ப்பது தவறாகும் தேவி…” என்றவனின் விழிகளை அவள் பார்த்திட, அதிலோ ஒரு புன்னகை தெரிந்தது…

மேலும், அதில் ஒரு உரிமையும் தெரிகிறதோ என்றெண்ணமும் அவளுக்குள் எழாமல் இல்லை…

அவள் தன் எண்ணங்களுக்குள் உழன்று கொண்டிருக்க, மகாதேவன் அங்கிருந்து வெளியேறினான் உடனேயே….

பிரஜாபதி, மகாதேவன் வருகை கேட்டு ஆத்திரம் கொள்ள, மற்றவர்களோ அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியைக் கண்டனர்…

சதியின் மனதினுள், அந்த ஓர் உரிமைப் பார்வையே திரும்ப திரும்ப உதித்திட, அவள் மகாதேவனின் நினைவில் மூழ்கினாள் பிரஜாபதிக்கு கொடுத்திட்ட வாக்கினையும் மறந்து…

இந்நிலையில் ஓர்நாள், சதி அருகிலுள்ள, விஷ்ணு ஆலயத்திற்கு புறப்பட்டுச் சென்றாள்…

அங்கே சென்றதும், விஷ்ணுவைப் பார்த்தாள்…

“எம் தந்தைக்கு நிகரான பரந்தாமா…. நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் தம்மையே பூஜிக்கின்றேன்… எனக்கு உடன் பிறந்த அண்ணன், தம்பி யாருமில்லை…. எனினும் அது எனக்கு ஓர் குறையாகே தெரிந்திடவில்லை இன்றுவரை… தாம் நான் வணங்கும் கடவுள் மாத்திரமன்று… என் சகோதரனும் கூட… என் எண்ணமும் அதுவே தான்…”

என்றவள் சிரித்த முகத்துடன் இருந்த விஷ்ணுவையேப் பார்க்க

“என்னவோ தெரியவில்லை அண்ணா… தந்தை எதிரியாக பாவிக்கும் ஒருவரை என் மனம் நினைக்கின்றது… என் மனம் என் கட்டுப்பாட்டில் இல்லாது போகிறது அவரைப் பார்க்கும் தருணங்களில் எல்லாம்… என்னை இந்த சிக்கலில் இருந்து விடுவித்து எனக்கு அருள் புரியுங்கள்….”

மனமார அவள் வேண்டிக்கொண்டு, அங்கிருந்து வெளியேறினாள்…

மெதுவாக அந்த வெட்ட வெளியில் அவள் நடந்து வந்து கொண்டிருக்க, அவள் செவிகளில் கேட்ட்து ஓர் ஒலி...

என்ன ஒலி இது?... அவள் சிந்திப்பதற்குள் அவளின் முன்னே வந்து நின்றது அந்த கொடிய காண்டாமிருகம்…

அவளைப் பார்த்து அது தன் திமிறலைக் காட்ட, அவள் மிரண்டு போய் நின்றாள்…

சுற்றிலும் யாருமில்லை…. என்ன செய்வது?... என யோசிப்பதற்குள், அது அவளை நோக்கி முன்னேறியது…

அவள் பின்வாங்க, அது மேலும் அவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தது…

பயந்து போனவளாய் அவள் நின்றிருக்க, அது அவளின் மேல் அடுத்து பாய போனது….

பாய்ந்து அவளை தாக்க விருந்த அந்த மிருகம், பயங்கர சத்த்த்துடன் முழக்கமிட, இறுக கண் மூடியிருந்த சதி விழி திறந்து பார்த்தாள் மெல்ல…

அவளின் முன்னே அரண் போல் நின்றிருந்தான் மகாதேவ்….

“இவர் இங்கே எப்படி?...” என அவள் யோசிக்க, அதற்குள் மிருகத்தோடு தனியாக மோதிக்கொண்டிருந்தான் அவன்…

அது அவனிடமிருந்து விலகி, அவளை நோக்கிப் பாய, கண்களில் கோபத்தோடு, விரைந்து ஓடி அதனின் திமிலை பிடித்து இழுத்தான் அவன்…

அது மேலும் திமிறிக்கொண்டு அவன் மேல் பாய, அவன் அதனைப் பிடித்து பலமாக சுற்றி வீசி எறிய, அது பல மைல் தொலைவு சென்று சுருண்டு விழுந்தது…

“ம்..ரு…….” ஏதோ சொல்ல வந்தவன், உடனேயே சமாளித்துக்கொண்டு,

“உனக்கொன்றுமில்லையே… தேவி?...”

என அவளை ஆராய்ந்தவன், அவளுக்கெதுவும் இல்லை என்று தெரிந்த பின்னரே சற்று ஆசுவாசமடைந்தான்…

ஆனால் அவளோ அந்த மிரட்சியில் இருந்து மீளாதவளாய் இன்னும் இருக்க,

“தேவி தாட்சாயிணி…. ஒன்றும் நேரவில்லை… இங்கேப் பார்….” என அழைக்க, அவனது மென்மையான அழைப்பில் அவள் அவனை ஏறிட்டாள்…

“உனக்கொன்றும் ஆகவில்லை தேவி… நீ இனி அரண்மனை திரும்புவதில் எந்த பிரச்சினையும் இராது….”

“தா…..ங்கள்….. இங்கே எப்படி?....”

அவள் திக்கித் திணறிக் கேட்க,

“விஷ்ணு ஆலயத்திற்கு வந்திருந்தேன்… என் இருப்பிடத்திற்கு திரும்பி செல்லுகையில் அம்மிருகம் உன் வழியில் வருவதைக் கண்டேன்…”

அவன் விளக்கம் கூற, அவளுக்கு புரிந்தது…. அவன் மேல் மதிப்பும் மரியாதையும் முதல் நாள் அவனைப் பார்த்த போதே எழுந்திருந்தது…

இன்றோ அது இன்னும் கூடிப்போக, மேலும், மனதினுள்ளும் அவன் மேல் ஒரு மையல் உண்டானது சற்றே அழுத்தமாக…

தொடரும்...!

Episode 40

Episode 42

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.