(Reading time: 14 - 28 minutes)

குழந்தைகள் மீது பெற்றோர் நம்பிக்கை கொண்டிருப்பதுவே இயல்பு.  அதுவே அவர்களுக்கு ஒரு பாசிடிவ் எனர்ஜியைப் போல.  ஆனால், ப்ரியாவின் விஷயத்தில் அது முற்றிலும் மாறிப்போனது.  அது தெரிந்தால் ப்ரியா எவ்வளவு வேதனைப்படுவாள்?  அவளுக்கு தன் மேலேயும் பிறர் மேலும் வெறுப்பு வந்துவிடாதா?  அவளது தன்னம்பிக்கை மடிந்துவிடாதா?  எனவேதான் ப்ரியாவிடம் இதனைப் பற்றி எதுவும் கூறவில்லை யாருமே.  என்றேனும் அவர் மனம் மாறுவார் என்ற நட்பாசையும் ஒரு காரணம்.  ப்ரியாவின் தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு முயற்சியாகவே கைலாசநாதனிடம் போராடி அவளை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.  அவள் தன் சொந்தக்காலில் நின்று பழகுவது அவசியமல்லவா?  வாழ்வு என்றுமே பூ மெத்தையாக இருப்பதில்லையே!

இவற்றை எல்லாம் நினைத்துப்பார்த்த ப்ரனிஷ் குற்றவுணர்வில் தவித்தான்.  தாய்-தந்தையரோடு மகிழ்ச்சியாக இருப்பது எத்தகைய வரம்?  அது ப்ரியாவிற்கு கிட்டாமலே போயிற்றே!  அது யாரால்?  ஒரு வகையில் தாமும் அதற்குக் காரணமன்றோ!!!

ப்ரியாவின் குடும்பத்தின் மீது மட்டுமே தவறில்லையே!  தாமதமாக கிடைக்கும் நீதி மட்டுமல்ல, விளக்கங்களும் பல சமயங்களில் பயனற்றுப் போய்விடும்.  இனி தான் கொடுக்கும் விளக்கமும் அவற்றுள் சேர்த்திதானே??

இத்தனை வருடங்கள் யாருமே சரி செய்யாமல் விட்ட தவறால் என்னென்ன நிகழ்ந்துவிட்டன?  அவை எத்தகைய தவறு?  அதனால் ஒரு மகளுக்குத் தன் தந்தையிடமிருந்து கிடைக்கும் அன்பு, பாசம் எல்லாம் பறிபோய்விட்டதே!!  அதனை என்றேனும் யாராலும் திருப்பித் தர இயலுமா?

ப்ரியாவுக்காய் மிகவும் வருத்தப்பட்டான் ப்ரனிஷ்.  பிறர் தங்கள் தந்தை தனக்கு செய்ததைப் பற்றி கூறும்போதும் அவர்களைக் காணும்போதும் எப்படி ஏங்கியிருப்பாள் ப்ரியா?  இவை எல்லாவற்றையும் மீறி எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வருவாளே!  இவள் மனம்தான் எத்தகையது?

அவளுக்காய் வருந்திய அவன் நெஞ்சம், அவள் மனவலிமையை நினைத்து பெருமைகொண்டது.  அத்தோடு, அவளை எப்போதும் சந்தோசமாய் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் உருவாயிற்று ப்ரனிஷுள்ளே.

அந்த நிமிடம் அவன் உறுதிகொண்டான், அவள் எதற்காகவேணும் இந்த திருமணத்தை செய்திருக்கட்டும், கவலையில்லை அவனுக்கு.  ஆனால், இனி ப்ரியாவை கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அதிலாவது அவர்களின் தவறுக்கு மன்னிப்பு கிட்டுமா என்று!!

இத்தனை வருடங்களாய் ப்ரியா இழந்தவை யாவற்றையும் அவளுக்குத் திருப்பித் தர ஆசை இருந்தாலும், அது நடக்க இயலாததென்று உணர்ந்தவன், அவளுக்கும் அவள் தந்தைக்குமான உறவை மீட்டுத் தருவதென்று என்று முடிவெடுத்தான்.  ஏதோ, அவனால் முடிந்தது.  ஆனால், அது அத்தனை சுலபமானதா?

இத்தனையும் யோசித்தவன், அந்த பெண்ணின் மனதைப் பற்றி யோசிக்க மறந்துவிட்டான்.  எந்த பெண்ணும் ஒருவன் பச்சாதாபத்தினால் விளைந்த நேசத்தை ஏற்றுக்கொள்ள மாட்டாள்.  நேசம்??? ப்ரனிஷ் ப்ரியாவை நேசிக்கிறானா?  இல்லை, இது அவளைப் பற்றி கேட்டதால் எழுந்த சாஃப்ட் கார்னரா??

நாளைய விடியல் இருவருடைய வாழ்விலும் எத்தகைய திருப்பத்தைக் கொண்டுவரப்போகிறது?

டியர் ஃப்ரெண்ட்ஸ், நான் முடிந்த அளவுக்கு ப்ரியாவின் தந்தையைப் பற்றி இந்த அப்டேட்டில் அளித்திருக்கிறேன்.  தங்களது சாதக பாதக கருத்துகளை தவறாமல் தெரிவிக்கவும்.  இந்த முறை சிறிய பகுதியே கொடுக்க முடிந்தது.  மன்னிக்கவும்… ஏற்கனவே எழுதத் தொடங்கிவிட்டபடியால் அடுத்த அப்டேட் சீக்கிரமாக வரும் என்று நம்புகிறேன்…  தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதற்கு நன்றி ப்ரெண்ட்ஸ்…

தொடரும்

Episode 11

Episode 13

{kunena_discuss:1075}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.