(Reading time: 10 - 19 minutes)

Jay 

Jay's art work

Chillzee: அப்படி ஈசியாக ஜாலி கதையை எழுதியது கட்டாயம் ஆச்சர்யப் பட வைக்கும் ஒரு விஷயம் தான்.

கௌரி கல்யாண வைபோகமே கதாநாயகி அறிமுக காட்சியில வரும் அந்த கிரிக்கெட் சீன் பின்னாடி இருக்கும் ரகசியம் என்ன? உங்களுக்கு கிரிக்கெட் மீது தனி ஆர்வம் ஏதாவது இருந்ததுண்டா??

 

Jay : படு பயங்கர Fan.... சிங்கப்பூரில் இருப்பதால் எந்த நாட்டில் மேட்ச் நடந்தாலும் எங்களுக்கு ஏடாகூடமான டயத்தில்தான் வரும்... இருந்தாலும் இரவு இரண்டு மணி மூன்று மணி ஆனாலும் விடாமல் பார்க்கும் ரசிகை....  Infact ஒரு முழு நீள கதை கிரிக்கெட் அதுவும் மகளிர் கிரிக்கெட் வைத்து எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது... கடவுள் அருளால் நடக்கும் என்று நினைக்கிறேன்...

 

Chillzee: கட்டாயம் நடக்கும் ஜெய். உங்கள் எண்ணம் போலவே, அந்த கதையை நீங்கள் விரைவில் எழுத வாய்ப்பும் நேரமும் அமையும் என்று நம்புகிறோம்.

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா கதையில் சாரங்கன் செய்வது போல ஹீரோயிசம் நமக்கு பழகி போன ஒரு விஷயம். ஆனால் பாரதி செய்யும் ஹீரோயினிசம் அப்படி இல்லை.  அந்த பாரதி கதாபாத்திரம் உருவாக காரணமாக இருந்த பெண் அப்படின்னு யாரவது உண்டா?

 

Jay : யாரும் இல்லை... நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளை படிக்கும்போது இதற்கு இந்தத் தீர்வு வந்திருந்தால்  நன்றாக இருந்து இருக்குமே என்று நினைப்பேன்... அதுதான் அப்படியே கதையில் வருகிறது... சாத்திரம் பேசுகிறாய் கதைக் கருவாக நான் யோசித்து இருந்தது, பயந்த சுபாவமுள்ள ஹீரோவுக்கு படு அடிதடியான ஹீரோயின் வந்தால் எப்படி இருக்கும் என்று... ஆனால் சமீப கால நாட்டு  நடப்புகள் கதையின் போக்கையே மாற்றி விட்டது....

 

Chillzee: அது போல சமூகத்தில் நடப்பதை ஒட்டி எழுதுவது தான் உங்கள் கதைகளில் இருக்கும் தனித்துவமான விஷயம். அந்த விதத்தில் இது வரவேற்க கூடிய மாற்றமே.

விடியலுக்கில்லை தூரம் கதையில் வரும் தேவியை போல நிஜ வாழ்வில் பெண்களால் extreme சூழ்நிலைகளில் இருந்து மீண்டு தைரியமாக சொந்த காலில் நிற்பது சாத்தியமா? இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

 

Jay : கண்டிப்பாக சாத்தியம் என்றே நினைக்கிறேன்... அதுவும் இன்றைய காலகட்டத்தில் தினம் தினம் பெண்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம்... அதை எல்லாம் அசாதாரணமாக நீந்தி வருகிறார்களே... நான் இரண்டு மூன்று செய்திகள், தேவியை போல சிறுவயதில் பாலியல் துன்பத்திற்கு ஆளான பெண்கள் பின்னாளில் சமூகத்தில் நல்ல முறையில் முன்னேறியதை படித்த பிறகே எழுதினேன்.... சமூக மாற்றம் என்பது சிறிது சிறிதாக வந்து கொண்டுதான் இருக்கிறது...

 

Chillzee: உண்மை தான் ஜெய்.

இப்போ தொடர்கதையாக வந்துக் கொண்டிருக்கும், சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மாவிற்கு அடுத்ததாக உங்கள் திட்டம் என்ன?

 

Jay : அடுத்ததும் சமூக அவலங்களை சொல்லும் கதைதான்... ஆனால் அதை கருத்தா சொல்லாமல் முடிந்தவரை காமெடியா சொல்லலாம்னு ஒரு ஐடியா....

 

Chillzee: காமெடியாக ஒரு social கதை. வித்தியாசமான களம். Good luck. அந்த கதை ஓட்டம் பற்றி யோசித்து வைத்திருந்தால் சுருக்கமாக அதை பற்றி சொல்லுங்களேன்.

 

Jay : மருத்துவ துறை சார்ந்த கதை.... அதில் நடக்கும் அவலங்கள்... இதுதான் இப்போதைக்கு நான் யோசித்து வைத்திருப்பது... இனி அதை நான் ஒழுங்காக எழுதுவது நியூஸ் சேனல் கையில்தான் உள்ளது... புதிதாக எந்த பிரேக்கிங் நியூஸும் கொடுக்காமல் இருந்து என்னை ஒழுங்காக ட்ராக் மாறாமல் எழுத வைக்க அவர்கள் உதவுவார்களாக....

 

Chillzee: ஹா ஹா ஹா! உங்கள் ஆசை போலவே ப்ரேக்கிங் நியூஸ்  இல்லாமல் நாட்டில் நல்லது நடந்தால் சந்தோஷப் பட வேண்டியது தான்.

சரி, ஒரு கதாசிரியராக “இதை” மிஸ் செய்றேன்னு எதையாவது உணர்ந்திருக்கீங்களா? அது என்ன?

 

Jay : என் கதைகளில் என்றால் இல்லை.... முடிந்தவரை நான் என்ன நினைக்கறேனோ அதை மிகச்சரியாக சொல்வதாகத்தான் நினைக்கிறேன்... Maybe romance என்னும் விஷயம் இதுவரை என் கதைகளில் வந்ததில்லை... அதை நான் மிஸ் செய்யவில்லை.... Maybe அது ஒரு மிஸ்ஸிங் பாயிண்ட்டாக இருக்கலாம்....

 

Chillzee: உங்க கதைகளில் Romance இல்லவே இல்லைன்னு சொல்ல முடியாது. முக்கியத்துவம் கொடுப்பதில்லைன்னு வேணா சொல்லலாம்ன்னு தோணுது.

மற்றபடி பாரதி – ராஜா, முதல் தேவி – மதி வரை எல்லோரும் மனதில் நிற்கும் ஜோடிகள் தான்.

Jay: அச்சோ பாவம்... இப்படி கௌரி-கௌஷிக்கை விட்டுட்டீங்களே... என் முதல் கதை ஜோடி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.