(Reading time: 11 - 21 minutes)

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் தேவியுடன் கலந்துரையாடல்

Devi

Chillzee வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான எழுத்தாளர்களில் ஒருவர் தேவி.

2015ஆம் ஆண்டு காதல் உறவே தொடர்கதையின் மூலம் chillzee.inல் அறிமுகமாகி, மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தொடர்ந்து ரசித்து படிக்க கூடிய கதைகள் எழுதிக் கொண்டு இருப்பவர்.

chillzee.in டீமை சேர்ந்த விசாலி கிருஷ்ண ஜெயந்தி நாளிற்காக தேவியுடன் நடத்திய சுவாரசியமான கலந்துரையாடல் இதோ உங்களுக்காக.

 


Chillzee.in - வணக்கம் தேவி Chillzee.in டீம் & வாசகர்கள் சார்பில் உங்களுக்கு எங்களுடைய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

 

தேவி - ஹாய். விசாலி @ வி.கே. உங்களுக்கும் , வாசகர்களுக்கும், சில்சீ டீமிற்கும்  கிருஷ்ணா ஜெயந்தி வாழ்த்துக்கள்.

 

Chillzee.in - நன்றி தேவி. உங்களை பற்றி எங்களுக்கு சொல்லுங்களேன்.

 

தேவி - நான் தேவி. மாஸ்டர்ஸ் இன் ஜர்னலிசம் பண்ணிருக்கேன். சென்னைவாசி. நான் என் கணவர், ஒரு பொண்ணு.  அம்மா சில வருஷங்கள் முன்னாடி தவறிட்டாங்க. சோ என் அப்பாவும், தம்பியும் என் கூட இருக்காங்க. ஒரு தங்கை. அவளும் சென்னைதான்.  கணவரோட அம்மா எங்க பிரதர் இன் லாஸ் வீட்டிலும், எங்க வீட்டிலும் மாறி மாறி இருப்பாங்க.

 

Chillzee.in - உங்க குடும்பம் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

எழுதும் ஆர்வம் உங்களுக்கு சின்ன வயசு முதலே இருந்ததா இல்லை ‘காதல் உறவே’ கதை சும்மா ஜாலியா முயற்சி செய்து பார்த்ததா?

 

தேவி - சின்ன வயசுலே எழுதுற ஆர்வம் இருந்துதான்னு தெரியாது. ஆனால் படிக்கிற ஆர்வம் நிறைய இருந்துது. இன்னும் இருக்கு. ஆனால் ஒருவேளை இருந்து இருக்கலாம். அதனால் தான் ஜர்னலிசம் எடுத்தேனோ என்னவோ?

அதற்கு எல்லாம் முதல் படி என்னோட வாசிக்கும் பழக்கம் தான். அதை எனக்கு சொல்லிக் கொடுத்தது எங்க அம்மா தான். அவங்க கடுகு மடிச்சு கொடுக்கிற பேப்பர் கூட படிச்சுட்டுதான் தூர போடுவாங்க. அம்மா ரமணிம்மாவோட தீவிர ரசிகை. அதைப் பார்த்து வளர்ந்த எனக்கும், என் தங்கைக்கும் புத்தகம் படிக்கிற பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் புத்தகம் வாங்கி சேகரிச்சு மினி லைப்ரரி வச்சுருக்கோம். அந்த ஈர்ப்பே கதை எழுத தூண்டி இருக்கு. அதோட நான் லேண்டிங் லைப்ரரியில் புக் எடுத்து படிப்பேன். அதிலும் ரெண்டு லைப்ரரியில். நான் படிக்கிற வேகத்தை பார்த்த அந்த லைப்ரரியன் நீங்களே கதை எழுதலாமே?ன்னு கேட்ருக்காங்க. அது எல்லாம் அங்கே அங்கே பிளாஷ் ஆகி நானும் ஒரு கதை எழுதினேன்.

அடுத்து காதல் உறவே கதை பற்றி என்ன சொல்ல?  ஜாலியான்னு சொல்ல முடியாது. ஒரு சில கதைகள் படிக்கும்போது நாமளும் எழுதுவோமேன்னு எழுதி வைத்தேன். ஆனால் அதை ஆன்லைன்லே கொடுத்தது ஜாலியா தான். இன்னும் சொல்லப் போனால் அது எல்லாம் பப்ளிஷ் பண்ணுவாங்களான்னு ஒரு சந்தேகம்.

 

Chillzee.in - என்ன இப்படி சொல்லிட்டீங்க ;-) அப்போ இதெல்லாம் பப்ளிஷ் செய்வாங்களான்னு நீங்க நினைச்ச கதையை Chillzee.inல பப்ளிஷ் செய்றேன் சொன்னப்போ உங்க reaction என்னவாக இருந்தது? :-)

 

தேவி - ஹ. ஹ.. நிஜமா அப்படிதான் தோனுச்சு. அப்புறம் சில்சீ மெயில் பார்த்ததும் ஒரு பத்து நிமிஷம் இது நிஜமான்னு பார்த்துகிட்டே இருந்தேன். உங்க அறிவிப்பு வந்ததும் தான் என் கணவர் கிட்டே சொன்னேன். அவர் புக் பிரிச்சு படிச்சா தூங்கற டைப். பெரிசா எந்த ரியாக்ஷனும் கொடுக்கலை. நான் கன்டினியூ பண்ணவான்னு கேட்டப்போ சரின்னு சொன்னார். பர்ஸ்ட் எபிசொட் பப்ளிஷ் ஆகவும் தான் என் சிஸ்டர் கிட்டே லிங்க் அனுப்பினேன். அவ முதலில் படிச்சுட்டு கதை நல்லா ஸ்டார்ட் ஆகிருக்கு அப்படின்னு சொன்னா. அடியே ரைட்டர் பேர் பாருன்னு சொன்னவுடன், பார்த்துட்டு அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம். கிட்ட தட்ட அதே ரியாக்ஷன் என் பிரெண்ட் காந்திமதியும் கொடுத்தாங்க. இதுதான் என்னுடைய ஸ்டார்ட்அப் வித் காதல் உறவே.

 

Chillzee.in – சூப்பர் ப்ளாஷ்பேக்!!!!

நீங்க Chillzee.inல் எழுத ஆரம்பித்து மூன்று வருடங்கள் நிறைவுப் பெற்றுவிட்டது. வாழ்த்துக்கள்.

2015 உடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இப்போது இருக்கும் வேறுபாடுகள் என்னன்னு நினைக்குறீங்க?

 

தேவி - நன்றி.

மூணு வருஷம் என்பது ஓடிப் போனதே தெரியவில்லை. பெரிசா இருக்கான்னு தெரியலை. இன்னும் சொல்லப் போனா கொஞ்சம் சோம்பேறி ஆகிட்டேனோன்னு தான் தோணுது. ஆனா எழுத்தில் எந்த அளவிற்கு முன்னேற்றம் என்பது வாசகர்கள் கிட்டே தான் கேட்கணும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.