(Reading time: 11 - 21 minutes)

Chillzee.in - உங்க கிட்ட எழுத்தாளராக ரொம்பவும் பாசிட்டிவான மாற்றங்கள் மட்டுமே எங்களுக்கு தெரியுது.

Chillzee.inல் நீங்கள் எழுதி முடித்த ஐந்து கதைகள் & இப்போது தொடராக வந்துக் கொண்டிருக்கும் ஒரு கதை என்று மொத்தமாக ஆறு கதைகள் என்று பார்த்தால், அதில் உங்களுக்கு personally மிகவும் பிடித்த கதை எது? ஏன்?

 

தேவி - ஆறு கதையுமே ஒரு ஒரு விதத்தில் பிடிக்கும்.

காதல் உறவே பர்ஸ்ட் இஸ் தி பெஸ்ட் இல்லையா? அந்த வகையில் ரொம்ப பிடிக்கும். அதுக்கு கிடைச்ச ரெஸ்போன்ஸ் என்னையும் ஒரு எழுத்தாளரா அங்கீகாரம் கொடுத்து இருக்காங்களே.

அன்பே உந்தன் சஞ்சாரமே கதை பிடிக்கும். ஏன்னா அது எழுதும் போது ரொம்ப யோசிச்சு இருக்கேன். நிஜ வாழ்வில் ஒரு சிலருக்கு நடக்கும் நிகழ்ச்சிகள் கதையில் கொடுத்து இருப்பேன். அது மற்றவங்களை பாதிக்குமோன்னு. ரெண்டு தலைமுறையில் யாருக்காவது ஒரு பக்கம் கோபம் வருமோன்னு தோனுச்சு. அப்படி இல்லாம, நிறைய வரவேற்பு கொடுத்து இருந்தாங்க நம்ம வாசகர்கள்.

பாயும் மழை நீயே .. என்னையே எனக்கு புதுசா காட்டினது. அட நம்மளா இப்படி எல்லாம் யோச்சோம்னு தோணின கதை.

நேசம் நிறம் மாறுமா, விழிகளிலே காதல் விழா ரெண்டுமே அந்த தலைப்பு வச்சு ஆரம்பிச்சது. அதனால் எல்லாமே மிகவும் பிடிக்கும்.

 

Chillzee.in - காதலான நேசமோ விட்டுட்டீங்களே???? 🙂

 

தேவி - சமீபத்தில் நான் காதல் உறவே வாசிச்சப்ப, ராம் , மைதிலிக்கு இன்னும் கொஞ்சம் எஸ்டாப்ளிஷ் பண்ணாலாமான்னு யோசிச்சப்போ, அவங்க வாரிசுகளுக்கு கதை எழுதலாமே ஆரம்பிச்சது. ராம் பையன் என்னும்போது அவனின் குணங்களும், இப்போ உள்ள இளைஞர்களின் குணமும் சேர்ந்து வரணும்னு தோணிச்சு. அப்படி வருதான்னு பார்க்கணும்..

 

Chillzee.in - 2015ன் பிற் பகுதியில் இருந்து 2017 வரை Chillzee.inயில் எழுதிய கிட்டத்தட்ட அனைவருக்குமே கருத்துக்கள் பகிர்ந்து ஊக்கப்படுத்தி அசத்தியவர் நீங்க. 2018ல் உங்கள் கருத்துக்களை நாங்களும், எழுத்தாளர்கள் & வாசகர்களும் மிஸ் செய்கிறோம்.

ஆனால் இந்த கருத்து பகிர்தல் என்பது உங்களுக்கு இருக்கும் வாசிக்கும் ஆர்வத்தின் வெளிப்பாடா அல்லது மற்ற எழுத்தாளர்களையும் ஊக்கப் படுத்த வேண்டும் என்ற ஆர்வமா?

 

தேவி - உண்மை தான். காதல் உறவேக்கு கருத்துக்கள் கிடைச்சப்ப, நான் அத்தனை உற்சாகமா இருந்தேன். அது அடுத்து அடுத்து எழுத நிறைய ஊக்கத்தைக் கொடுத்தது. அது என்னைப் போலே மற்றவங்களுக்கும் கிடைக்கனும்னு தான் கருத்துக்கள் பகிர ஆரம்பிச்சேன். அதே சமயம் வாசிக்கும் ஆர்வமும் காரணம். நிறைய எழுத்தாளர்கள் கதைகள் படிக்கிறப்போ அவங்க கிட்டே கருத்துக்கள் பகிரணும்னு ஆசைப்பட்டு இருக்கிறேன். அத வெளிப் படுத்த கொஞ்சம் தயக்கம் இருந்துது. அதை போக்க சில்சீ துணை புரிஞ்சு இருக்குன்னு சொல்லலாம்.

ஆனால் 2018  கொஞ்சம் அது குறைஞ்சிடுச்சின்னு நினைச்சு இருக்கேன். பர்சனல் கமிட்மென்ட் அதிகம் ஆயிடுச்சு. திருப்பி இப்போ சில கதைகள் முடிச்சு கருத்து கொடுத்துட்டு வருகிறேன். கூடிய சீக்கிரம் பழைய பார்ம்க்கு வந்துடுவேன்.

 

Chillzee.in - நீங்க சீக்கிரமா அந்த பார்முக்கு வரணும்னு உங்க சார்பில நாங்களும் உங்க favorite சாமி கிட்ட எல்லாம் வேண்டிக்கிறோம் 🙂

Just for fun சொன்னேன். குடும்பம் தான் முதலில்! மற்றவை எல்லாம் பிறகு தான்! இது Chillzee.inஓட பாலிசியும் கூட 🙂 நேரம் கிடைக்கும் போது எழுதுங்க, படியுங்க, கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் 🙂

சரி, இந்த மாதிரி ஒரு கதை எழுதனும்னு உங்க மனசுக்குள் ஏதாவது ஆசை இருக்கா? அது என்ன?

 

தேவி - வரலாற்று கதைகள் எழுதனும்னு ரொம்ப ஆசை. முக்கியமா பொன்னியின் செல்வன் மாதிரி விறுவிறுப்பாவும், யவனராணி, ராஜ முத்திரை மாதிரி நிறைய விஷயங்களோடும் எழுதணும்ன்னு ஆசை. அவங்க அளவிற்கு இல்லாட்டாலும், ஓரளவாவது சரியான கதை எழுத ஆசை. அதற்கு நிறைய உழைப்பு தேவை. அதோட விவரங்கள் சரியாகவும் இருக்கணும். எழுதனும்னு வந்த பிறகு கண்டிப்பா என்னிக்காவது ஓர்நாள் அதை செய்வேன்னு நம்பிக்கை இருக்கு.  (ஓவர் கான்பிடன்சோ.. நம்ம வாசகர்கள் தானே. அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க)

 

Chillzee.in - கட்டாயம் எழுதுவீங்க! சீக்கிரமாகவும் உங்க ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.

ஒரு எழுத்தாளர் என்ற விதத்தில் உங்களுக்கு உங்களின் குடும்பத்தினரின் துணை இருக்கிறதா?

 

தேவி - எனக்கு நிறைய விதத்தில் சப்போர்ட் பண்றாங்க. நானே சில பேர்கிட்டே கதை எழுதறேன்னு சொல்ற முன்னாடியே என் கணவர் அவரே சொல்லிருக்கார். அதே மாதிரி என் கணவர் குடும்பமும் சரி, என் பக்க உறவுகளும் சரி எல்லோருமே பாராட்டினாங்க. என் சிஸ்டர், என் பிரெண்ட் காந்திமதி இவங்க சப்போர்ட் தான் பெரிசு. ஒவ்வொரு எபிசொட் முடியவும் கமெண்ட் பண்ணிட்டு, அதில் இருக்கும் தவறுகள் எல்லாம் சொல்லி கரெக்ட் பண்ண சொல்லிடுவாங்க. சோ எல்லோருமே எனக்கு நிறைய சப்போர்ட் தான் பண்றாங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.