(Reading time: 11 - 21 minutes)

Chillzee.in - கேட்கும் போதே சந்தோஷமா இருக்கு தேவி. இந்த ஊக்கம் அப்படியே எதிர்வரும் காலங்களிலும் தொடர வாழ்த்துக்கள்.

சரி, எழுதுவது தவிர உங்களுக்கு பிடித்த /  பிரியமான மற்ற விஷயங்கள் என்னென்னன்னு சொல்லுங்களேன்.

 

தேவி - எழுதுவது தவிர அப்படின்னா வாசிக்கிறது தான். அதுக்கு அப்புறம் மியூசிக் ரொம்ப பிடிக்கும். கர்நாடக இசைப் பாடல்கள் ஆரம்பிச்சு , ரகுமான் மியூசிக் வரை எந்த வேலை செஞ்சாலும் பாட்டு கேட்டுட்டே தான் செய்வேன்.

 

Chillzee.in - உங்களோட கீதம் சங்கீதம் தொடர் வச்சே நான் கெஸ் செயதிருக்கனும். அந்த தொடர் பற்றி சொல்லுங்களேன்.

 

தேவி - முதலில் சில்சீலே திரைப்பட பாடல் வரிகள் பகிர்ந்து கொண்டதைப் பார்த்து, நானும் அதில் கொஞ்சம் பகிர்ந்தேன். அதுக்கு கிடைச்ச ரெஸ்பான்ஸ் பார்த்துட்டு, நமக்கு பிடிச்ச பாட்டு எல்லாம் பகிர்ந்துக்கலாம்னு தான் முதலில் கீதம் சங்கீதம் ஆரம்பிச்சேன். முதலில் குறை ஒன்றும் இல்லை பாட்டு பகிர்ந்தப்போ , எல்லோரும் அவ்வளவு ஆர்வமா கருத்துக்கள் கொடுத்தாங்க. அதில் சொன்ன சில விவரங்கள் எல்லாம் நானும் அப்போ தான் புதுசா தெரிஞ்சிகிட்டேன். நம்ம வாசகர்களும் அதையே சொன்னனாங்க. அதற்கு பிறகு தான் அதிகம் கேட்ட பாடல்கள், அதைப் பற்றிய விவரங்கள் குறிப்பா டிவோஷனல் சாங்க்ஸ்  என்று எடுத்துக் கொண்டு அந்த தொடர் ஆரம்பிச்சேன். அதிலும் எண்பது தொன்னூறுகளில் கிடைத்த அனுபவங்கள் எல்லாம் இப்போ உள்ளவர்களுக்கு கிடைக்கவில்லையே என்ற எண்ணத்தில், அந்த அனுபவத்தையும் கலந்து சொல்ல தான் இந்த தொடர்.

 

Chillzee.in – சூப்பர்!!!!!

பொதுவான கேள்வி ஒன்று!

நீங்க சூப்பர் ஸ்டார் ரசிகை என்பது தெரிந்த விஷயம்! அவரை தவிர உங்களுக்கு பிடித்த நடிகை, நடிகைகள் யார்?

 

தேவி - சூப்பர் ஸ்டார்க்கு பிறகு என்றால் சூர்யா, சிவகார்த்திகேயன் இப்போ பிடிக்கும். ஏன்னா அவங்க ரெண்டு பேர் படமும் கமெர்சியல் + குடும்பமா உட்கார்ந்து பார்க்கிற மாதிரி இருக்கும். நடிகை என்றால் நதியா, அமலாவிற்கு பிறகு இப்போ நயனதாரா, ஜோதிகா பிடிக்கும்.

 

Chillzee.in – கதை தவிர திரைப்படம் / டிவி நிகழ்சிகள் போன்றவற்றிலும் உங்களுக்கு ஆர்வம் உண்டா?

 

தேவி பாடல் ஈர்த்தா படம் பார்ப்பேன். அப்போ கூட சில படங்கள் பார்க்க பிடிக்கலை. பயணம் , சாட்டை, பசங்க 2 , அப்பா இந்த படங்கள் எல்லாம் பார்ப்பேன்.

டிவி நிகழ்சிகளில் முதலில் சூப்பர் சிங்கர் பிடிக்கும். ஆனால் அதில் நிறைய அரசியல் கேள்விபடறதால் தொடர்ந்து பார்கிறதில்லை. ப்ரோமோ நல்லா இருந்தா பார்ப்பேன். அதை தவிர என்றால் ஒரு வாரத்தை ஒரு லட்சம் பார்ப்பேன். அது மறு ஒளிபரப்பு , மறு மறு ஒளிபரப்பு என்று எத்தனை முறை போட்டாலும் பார்ப்பேன். ஏதாவது மியூசிக் கான்செர்ட் போட்டா அது பார்ப்பேன்.

 

Chillzee.in – கேட்ட உடனே எங்களுக்காக நேரம் ஒதுக்கி இந்த கலந்துரையாடலில் பங்குப் பெற்றதற்கு நன்றி தேவி.

எழுத்துக்கள் மூலமே இருந்த பரிச்சயம் இந்த கலந்துரையாடலின் மூலம் தேவி எனும் மனுஷியை படம் பிடித்து காட்டியதாக ஒரு ஃபீல். அதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி 🙂

 

தேவி ஹா.. ஹா.. நீங்க இந்த கலந்துரையாடலுக்காக மெயில் பண்ணியிருந்ததும், பாருடா நாமளும் பேட்டி கொடுக்கிற அளவிற்கு பெரிய ஆள் ஆயிட்டோம் போலேன்னு நினைச்சு சிரிப்பு வந்துச்சு விசாலி. சில்சீலே எனக்கு கதை எழுத கிடைத்த இந்த வாய்ப்பு, என்னை நிறைய மாற்றி இருக்கு. நிறைய தெரிஞ்சுக்கிறேன். நிறைய படிக்கிறேன். பிரெண்ட்ஸ் எழுத்தாளர்கள், வாசகர் வட்டம், உங்க டீம் ன்னு கிடைத்து இருக்காங்க. அதுக்காக நன்றி சில்சீ. & விசாலி உங்க கூட நடந்த இந்த உரையாடல் ரொம்ப அழகா, ஜாலியா இருந்தது. அதுக்கு ஒரு தேங்க்ஸ்.

 

Chillzee.in – எங்களுக்கும் இது ரொம்ப ஜாலி அனுபவமாக இருந்தது. நன்றி தேவி. உங்களின் எழுத்து பயணம் மேன்மேலும் சிறக்க எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

தேவி – நன்றி!

சில்சீ வாசகர்கள் அனைவருக்கும் நன்றி & கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

 

Chillzee.in –நன்றி, வணக்கம் 🙏🙏🙏

 

தேவியின் பங்களிப்புகள்:

அனைத்து பங்களிப்புகளையும் படிக்க, https://www.chillzee.in/chillzee-contributors/193:sridevi05 பக்கம் செல்லுங்கள்.

நிறைவுப்பெற்ற கதைகள் படிக்க https://www.chillzee.in/stories/chillzee-completed-stories-by-authors-01#devi பக்கம் செல்லுங்கள்.

 

{kunena_discuss:656} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.