(Reading time: 12 - 23 minutes)

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் சித்ராவுடன் கலந்துரையாடல்

Chitra

ப்படி வேண்டுமென்றாலும் எழுதலாம் என்று இல்லாமல் தனக்கென ஒரு தனி பாணி உருவாக்கி குடும்பம், காதல், நகைச்சுவை, விவசாயம், சமூக அக்கறை கருத்துக்கள் என வித்தியாசமான கலவையாக கதைகள் பகிர்ந்து Chillzee.in வாசகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருப்பவர் சித்ரா.

2015 ஜூன் மாதம் சொட்ட சொட்ட நனைய வைத்தாய் எனும் சிறுகதையின் மூலம் chillzeeயில் எழுத்தாளராக அறிமுகமாகி, மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து அருமையான கதைகள் பல எழுதிக் கொண்டு இருப்பவர்.

இன்றைய விநாயகர் சதுர்த்தி திருநாளில், chillzee டீமுடன் சித்ரா நடத்திய சுவாரசியமான கலந்துரையாடல் இதோ உங்களுக்காக 


Chillzee.in - வணக்கம் சித்ரா. Chillzee team & வாசகர்கள் சார்பாக உங்களுக்கு எங்களின் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

 

சித்ரா - வணக்கம் 

சில்ஜி  டீமுக்கும் ,வாசகர்களுக்கும்  விநாயக  சதுர்த்தி வாழ்த்துக்கள் !

 

Chillzee.in - உங்களுடைய கதைகளில் இருக்கும் நகைச்சுவை உணர்வை ரசிக்காத வாசகர்களே இருக்க முடியாதுன்னு சொல்லலாம். இந்த ஹ்யூமர் சென்ஸ் உங்க கூட பிறந்ததா இல்லை கதைகளில் மட்டும் தெரியும் ஒன்றா?

 

சித்ரா - நகைச்சுவை  உணர்வு ,அது எப்பவுமே அப்படித்தாங்க ,நான் படிக்கும் கதைகளுமே அப்படி இருக்கிறதை தான் நான் விரும்புவேன் .லைப் இஸ்  ஷார்ட்  ,சோ பிரீயா  விடுங்க தான்  என் பாலிசி .

 

Chillzee.in - ரொம்பவும் நல்ல பாலிசி 🙂

உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் எழுதிய சித்ராவிற்கும் தமிழுக்கு அமுதென்று பேர் எழுதும் சித்ராவிற்கும் இடையே இருக்கும் ஆறு வித்தியாசங்கள் என்ன? 🙂

 

சித்ரா - 'உள்ளமெல்லாம் அள்ளித்  தெளித்தேன் '   'தமிழுக்கு அமுதென்று பேர் ' இரண்டு கதைக்கு இடையே  எனக்குள் ஏற்பட்ட மாற்றம்  { 'ஐயோ ,டிவி இன்டெர்வியூ  ல ' மைக்கை  நீட்டுனவுடனே  செந்தமிழ் பேசுவாங்களே  அது மாதிரி  பீல் வருது }

ஒன்னும் பெரிய மாற்றம்  இல்லேங்க ,விளையாட்டா  தான்  எழுத ஆரம்பிச்சேன் ,அதும் நண்பிகள் விடாம நச்சரிச்சு ...இல்ல இல்ல  ஊக்குவிச்சதாலே  😃,  'ஹேய்  இதுவேறையா  கிரகம் ' என்ற உங்க மைன்ட்  வாய்ஸ் கேட்ச் பண்ணிட்டேன் 😃 என்ன செய்ய  ஆல்ரெடி  ரைட்டர் ன்னு  போர்ம்  ஆயிட்டதாலே  மன்னிச்சு விட்டுடுங்கோ ! எழுத ஆரம்பிச்சு ,இப்போ விரும்பி எழுதுறது  ஒரு மாற்றம் ..

அப்புறம்  அடுத்த கதை  நியூசி ட்ரிப் போனதால  எழுதினேன் ,உங்க பீட்பாக்  ,மற்றும் வரவேற்பு தான் இன்னும் கொஞ்சம் பொறுப்போடு எழுத தூண்டிச்சு ,

கொஞ்சம்  தகவல் திரட்டி  எழுத ஆரம்பிச்சது பச்சைக்  கிளிகள் தோளோடு  வில்  வந்த  மாற்றம்  .

குறிப்பிட்ட  ஸ்லாட் , கால அவகாசத்துக்கு உட்பட்டு எழுதினது கொஞ்சம் எனக்கு  கஷ்டம் ,ஹோம்ஒர்க்  மாதிரி  கடைசி  நிமிஷம் வரைக்கும் ஓட்டிட்டு ,ராத்திரியோட ராத்திரியா எழுதி அனுப்புறது ! [தெரியுது உன்னோட ரெண்டு பேஜ் எப்பிய  பார்தாலேன்னு  சொல்ரீங்களா அகைன் மன்னிச்சு 😉}

கொஞ்சம்  ஆங்கில வார்த்தைகள் குறைச்சு ,தமிழ்  அதிகம் எழுதறேன் .

எவ்ளோ  யோசிச்சாலும்  அஞ்சு தாங்க வருது ,அதனாலே ஆறாவது  உங்க விருப்பத்திற்கு  விட்டுடுறேன் !

 

Chillzee.in - எங்க விருப்பத்துக்கா, அது சரி 🙂

சமீப காலங்களில், சித்ரா என்றாலே விவசாயம், வேளாண்மை, நல்ல கருத்துக்கள்ன்னு ஒரு பிரான்ட் இமேஜ் உருவாக்கி இருப்பதும் ஒரு மாற்றம்னு சொல்லலாம். இது உங்களுக்கு ஓகேவா இருக்கா? 🙂

 

சித்ரா - டபுள்  ஓகே 😃

 

Chillzee.in - உங்க கதைகளில் நீங்கள் பகிரும் நல்ல விஷயங்கள் அருமை.

அப்படி கதைகள் வழியாக நல்லதை சொன்னால் அதன் மூலம் நன்மைகள் ஏற்படும்னு நம்புறீங்களா?

 

சித்ரா - நல்ல விஷயங்கள் கதைகளில் எழுதுவதால் நன்மை கிடைக்குதோ ,இல்லியோ ,எனக்கு  மனநிறைவை தருகிறது ,வெறும் காதல் கதைகளாய்  இல்லாமல் ,கொஞ்சமே கொஞ்சம் கருத்து ,அதே சமயத்தில்  படிக்கும் நபர் மனதில் ஒரு பாரம்  ஏறாமல் ,இருப்பது போன்ற இலகுவான கதைகளையே ,நான் எழுத விரும்புகிறேன் ,அதை  படிக்கும் போது  உங்களுக்கு கொஞ்சம் மனது லேசானால் ,அதுவே பெரிய நன்மை என்று  கருதுகிறேன் .

 

Chillzee.in - உண்மை தான் சித்ரா!

உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் கதையில் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்ட மனோசாட்சி உருவான கதையை சொல்லுங்களேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.