(Reading time: 12 - 23 minutes)

சித்ரா - எனக்கு தெரிந்த ,பரிச்சியமான ஒரே கிராமம் ,என் சொந்த கிராமமான கன்னியாகுடி தான்' ,தமிழுக்கும் அமுதென்ற பேர் '. கதைக்கும் ஒரு கிராம பின்னணி தேவைப்பட்டதால் ,இதையே வைத்துக்கொண்டேன் ,பண்ணையார் சம்மந்தமாக  இன்னும் சில விவரங்கள் சேர்த்து எழுத நினைத்திருந்தேன் ,அதனால் தான் அவர் மகனை  இந்த கதைக்கு ஹீரோவாக்கினேன் ,இருந்தும் என் சூழ்நிலை ஒத்து வராததால் ,பண்ணையார் பங்கு சிறிது ஆகிவிட்டது .

 

Chillzee.in - இப்போ நகரங்களிலும் நிறைய பேர் இது மாதிரி மாடி தோட்டம், மரங்கள்ன்னு வளர்ப்பது நல்ல பாசிட்டிவான மாற்றமாக தான தெரியுது.

அப்படி சின்ன தோட்டங்கள் பார்க்கும் போது உங்க பேர் மனசில ப்ளாஷ் ஆகிறது என்பதையும் இங்கே காம்ப்ளிமென்டாக சொல்லி ஆகனும் 🙂

உங்க ஊர் கன்னியாகுடி பற்றி சொல்லுங்களேன்.

 

Chitra

சித்ரா - கன்னியாகுடி  ,சிதம்பரம்  தாலுகாவை சேர்ந்த ஊர் ,தஞ்சை மண் என்பதால் பசுமை உண்டு 

மொத்தமே ரெண்டு தெரு தான் அந்த குட்டி ஊர் ,இருந்தும் ஒரு ஊராட்சி பள்ளி ,ஒரு சிவன் கோயில் ,ஒரு குட்டி பஞ்சாயத் போர்டு லைப்ரரி ,ஊரை சுற்றி ஓடும் காவிரியின் வாய்க்கால் ,ஊர் முடியும் இடத்தில்  ஒரு பெருணி ,அதை ஒட்டி ஒரு மரத்தடி பிள்ளையார் கோயில் ,சற்று தள்ளி ஒரு மாரியம்மன் கோயில் என்று ஒரு தமிழ் படம் எடுப்பதற்கு உண்டான அனைத்து  லொகேஷனும்  இருக்கும் ஊர் .

நான்' பச்சைக்  கிளிகள் தோளோடு'  கதையில் வருணித்திருக்கும் வீடு என் தாத்தாவின் வீடு ,முதல் மாடி மட்டும் நம் பண்ணையார் அவர் வசதிக்கு கட்டிக்கொண்ட கற்பனை இடம் 😉

என் தாத்தாவின் வீட்டில் நாங்கள் ஒரு பதினைந்து பேர் கஸின்ஸ்  லீவுக்கு போவோம் ,மிகவும் அருமையாக கழியும் எங்கள்  பொழுதுகள் ,

அந்த அனுபவத்தை என் பிள்ளைகள் பெற வேண்டும் என்று ஒரு கல்யாணத்தின் போது  முயற்சி எடுத்து ,நாங்கள் அனைவரும் பிள்ளைகளுடன் மூன்று நாள் தங்கி இருந்தது மறக்க முடியாதது !

 

Chillzee.in - Chillzee உங்களுக்கு அறிமுகமான விதத்தை பற்றி எங்களுடன் பகிருங்களேன்.

 

சித்ரா - சில்ஜியை  பற்றி நான் அறிந்துகொண்டது ' ஜெயா டிவியில் '.அப்போதெல்லாம்  காலையில் ஒரு ஐந்து நிமிடத்துக்கு ஒரு  வெப் அட்ரஸ்  பற்றிய சிறு குறிப்புடன்  தகவல் தருவார்கள் ,அப்படி பார்த்து குறித்து  ,தேடி கண்டது தான் இந்த சைட் ,அப்போது லே அவுட் ,வித்யாசமாக இருக்கும் ,அதே போல் வித்யாசமான பேரான  'எப்பா பேய் மாதிரி  இருக்கா ' தான் நான் முதலில் படித்த கதை .அதன் கூடவே ரமணி அம்மா கதைகள் ,அப்படி படிக்க ஆரம்பித்து ,கொஞ்சம் கொஞ்சம் போரம்  ல பேச ஆரம்பிச்சு ,கதைகளுக்கு கமெண்ட்  போட ஆரம்பித்தேன் .எனக்கு சில்ஜி  ல ரொம்ப பிடித்த விஷயம் ,ஒரு  cosy  warm  அமைப்பை ,பாதுகாப்புடன்  கொடுப்பதுதான் ,நம் வீட்டு  வாசல்படியில் உட்கார்ந்து ஊர் கதையை பேசும் உணர்வை ,நெருக்கத்தை  உணர்ந்து இருக்கிறேன் ,இப்போது அதிகம் போரம்  பக்கம் போவதில்லை ,அதனால் அந்த உணர்வை  மிஸ் செய்கிறேன் ! மத்தபடி  நானும்  ஒரு  ரைட்டர் தான் ,என்று சொல்ல வைத்ததிற்கு  ,ஒரு பெரிய  தேங்க்ஸ் ,படித்து  கமெண்ட் செய்யும் தோழிகளுக்கும்  ஒரு பெரிய தேங்க்ஸ் .

 

Chillzee.in - நன்றி சித்ரா.

நானும் ஒரு ரைட்டர்ன்னு சாதாரணமா சொல்லாமல், நல்லதை சொல்லும் சூப்பர் ரைட்டர்னு எக்ஸ்ட்ரா டேக் ம் சேர்த்து சொல்லலாம். 🙂

கதைகள் எழுதும் ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டதுன்னு சொல்லுங்களேன்.

 

சித்ரா - கதைகள்  எழுத ,நான் முன்னமே சொன்னபடி ,என்  நண்பர்கள் தான் காரணம் .அதோடு கதை படிக்கும் போது  அது காட்சியாக என் மனதில் ஓடும் ,அதில் இந்த மாற்றங்கள் செய்திருக்கலாம் ,இந்த லாஜிக் இடிக்குது போன்ற எண்ணங்களும் தோன்றும் ,அதை எல்லாம் இப்போது நானே கதை எழுதும் போது  ,இஷ்டம் போல் செய்ய முடிகிறது .

 

Chillzee.in -🙂 எப்போவாவது உங்க கதையை எழுதி முடித்த பிறகு, இதை இப்படி மாற்றி இருந்திருக்கலாமே, இதை இப்படி செய்திருக்கலாமோ என்று நினைத்தது உண்டா?

 

சித்ரா - இல்லை ,எதையும்  மாற்றி எழுத நினைத்ததில்லை ,பண்ணையார் விஷயம் போல் சூழ்நிலை காரணமாக  சுருக்கி எழுத நேரிட்டிருக்கிறது .

 

Chillzee.in - உங்கள் கதைகளில் நீங்கள் உருவாக்கிய கதாபாத்திரங்களில் உங்கள் மனதை கொள்ளைக் கொண்ட பாத்திரம் யார், ஏன்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.