(Reading time: 12 - 23 minutes)

சித்ரா - மனோ கேரக்டர் உருவான விதம் கொஞ்சம் சுவாரசியமானது தான் .

டிவி சீரியல் ஒன்னுல ,ஒரு வெள்ளை புடவை கட்டிய மனசாட்சி ,அந்த ஹீரோயினை  வறுத்து  எடுத்துக் கொண்டிருந்தது ,அதை அப்படியே உல்ட்டா  பண்ணி ,ஒரு பிரின்ட்லி  மனசாட்சி கொண்டு வந்தா எப்படி இருக்கும் என்ற கற்பனையின் விளைவு தான் 'மனோ 'கேரக்டர் ,கூடுதலா' மனோ ரமேஷ் ' அந்த  ஊக்கு வித்த  நண்பிகளில் முதல் இடம் பெரும் ஆளு ,அந்த பேரும்  சேர்ந்தது டபுள் பெனிபிட் {இது  கோல்கேட் அட்  இல்லீங்கோ }

 

Chillzee.in - மனோசாட்சி அளவிற்கு அந்த பகுதி உருவான கதையும் சுவாரசியமாகவே இருக்கு 🙂 அதை எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி.

தமிழுக்கு அமுதென்று பெயர் கதைக்கு பின்னால் நிஜ வாழ்க்கை ஆசிரியர்கள் இருப்பதாக ஒருமுறை சொல்லி இருந்தீங்க.

ஒரு செய்தியாக படித்தது கதை கருவாக மாறிய விதத்தை எங்களுடன் பகிருங்களேன்.

 

சித்ரா - '' தமிழுக்கு  அமுதென்ற பேர் '' கதைக்கு தூண்டுதலா  இருந்தது  ரெண்டு ஆசிரியர்களின் பத்தி நான் படிச்ச  விஷயம் தான் . அதுக்கு முன்னாடி 'பச்சைக்  கிளிகள் தோளோடு ' கதையில் வரும் அந்த ரோசாப்பூ சாப்பிடும் நிகிழ்வும்   நான் ஒரு செய்தியா படிச்ச,உண்மையில் நடந்த விஷயம் ,அதையும் அதற்கு தீர்வா இயற்கை விவசாயம்  என்று அந்த கதையில் சொல்லி இருப்பேன் ,

அதே போல் இந்த ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் படித்த போது  ,அது போன்ற ஆசியர்கள் தான் ,கிராமங்களில் ,ஒன்று ரெண்டு என்ற எண்ணிக்கையில் ,மாணவர்கள் படிப்பதால் ,இழுத்து மூடும் நிலைமைக்கு வந்த பள்ளிகளின்  பிரச்சனைக்கு  தீர்வு ,என்று தோன்றியது ,அதையே கதையாக கொடுத்து விட்டேன் .அந்த இரண்டு ஆசியர்களில் ஒருவர் ஒரு பள்ளிக்கு ,தலைமை ஆசியராக பொறுப்பு ஏற்ற பின் ,மாற்றங்கள் கொண்டு வந்து ,பிற பள்ளியில் படித்த மாணவர்களை ,பெற்றோர்கள் விரும்பி இந்த பள்ளியில் சேர்க்கும் அளவுக்கு  சாதித்து  காட்டியவர் ,மற்றவர் ஒரு ஆங்கில பாடம் எடுக்கும் பெண் ஆசிரியர் ,அவரும் தன்  சொந்த முயற்சியில் ,பசங்களிடையே  ,கம்ப்யூட்டர் ,டேப்லெட் கொண்டு வந்து ,அவர்களை டெக்க்கி ஆக்கி ,ஆங்கில புலமையும் பெற வைத்தார் .

Chitra

தமிழுக்கு அமுதென்று பேர் கதையில் சித்ரா குறிப்பிடும் பள்ளி

இரண்டையும் சேர்த்து ,என் சொந்த கிராமத்தில் ,'பச்சைக்  கிளிகள் தோளோடு'  கதை களத்திலே  இதுவும் நடைபெறுவது போல் எழுதி விட்டேன்.

 

Chillzee.in - வாவ் மிகவும் சுவாரசியமான ஊர் & பகிர்வு. கேட்கும் போது எங்களுக்கும் அப்படி ஒரு ஊருக்கு, வீட்டுக்கு போகணும்னு ஆசை வருது 🙂

சரி, ரொம்ப நாளாகவே மனதில் இருக்கும் கேள்வி இது. இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு முதலியவை பற்றி நீங்கள் கதைகளில் பகிரும் தகவல்கள் வாய் பிளக்க வைக்க கூடியவை. எப்படி இப்படிலாம்? 🙂

 

சித்ரா - இயற்கை  வேளாண்மை  எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம்  ,முதல்  முதலே  ,மாடி தோட்டம் போட  ஆசைப்பட்டு  ஒரு சின்ன  மீட்டிங் போனேன் ,அங்க தான்  ,நம்ம வீட்டுலே எப்படி அருமையா ,உர சாக்குல செடி வளக்குறது ,அதற்கு  உரமும் வீட்டுல தயார் படுத்துவது ,சம்பந்தமா  வீடியோ கிளிப்ஸ்  பார்த்தேன் ,அப்புறம் நம்மாழ்வார்  அது சம்பந்தமா பேசியது  கேட்டு இன்னும் ஆர்வம் வந்தது ,என் வீட்டை சுத்தி  கொஞ்சம் இடம் இருக்கு ,அதுல பலா ,கொய்யா ,வாழை ,மல்லி ,ரோஸ் வச்சு திருப்தி பட்டுக்கிறேன் .

காய்கறி  செடி அவ்வளவு செழிப்பா வளர மாட்டேங்குது .

மத்தபடி நான் தமிழுக்கு அமுதென்ற பேர் கதையில் எழுதி இருக்கும் வீட்டுக்கு முன்னாடி உள்ள தோட்டம் கிட்டத்தட்ட என் கிராமம் கன்னியாகுடியில்  எல்லோர் வீட்டுலையும் உண்டு ,வீட்டு  காய்கறி சமையல் தான் பெரும்பாலும் ,கேரட், காலிஃளார் ,கோஸ்  போல காய்கறி தான் வெளில வாங்குவாங்க .வெண்டி  கத்திரி ,நார்த்தை ,முருங்கை ,வாழை எல்லோர் வீட்டுலையும்  இருக்கும் !லீவுக்கு  தாத்தா வீட்டுக்கு போகும் போது  ,ஈஸியா  கொல்லை  பக்கம் போய்  காய் பறிச்சிட்டு  வந்து அவங்க சமைக்கிறது எனக்கு வியப்பா இருக்கும் .அந்த சாப்பாடு  ருசியாவும் இருக்கும் ,அதே மாதிரி  கூடுதலா இருக்கும் காய்கறியை வண்டிக்காரனிடன் மாத்தி  வேணும்கிற காய் வாங்கிப்பாங்க ! அந்த என் தாத்தா வீடு ,அந்த வாழ்க்கை  முறை எனக்கு  ரொம்ப பிடிக்கும் ,அதை கதையா எழுதினது ரொம்ப சந்தோசமா இருக்கு .

 

Chillzee.in - இந்த கதையை பச்சை கிளிகள் தோளோடு செட்டிங்கில் எழுதியது எதேச்சையாக நடைபெற்றதா இல்லை  அப்படி எழுத உங்களை trigger செய்த வேற ஸ்பெஷல் காரணங்கள் எதாவதும் இருக்கிறதா?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.