(Reading time: 12 - 23 minutes)

சித்ரா - என் கதைகளில் மிக பிடித்த கதாபாத்திரம் ' மனோசாட்சி'  தான் ,அதனால் தான் அதற்கு ஒரு கெஸ்ட் என்ட்ரி  'நெஞ்சொரமா என் நெஞ்சோரமா '  வில்  கொடுத்தேன் .

 

Chillzee.in - உங்க குடும்பத்தை பற்றி சொலுங்களேன்.

 

சித்ரா - நான்  ஒரு குடும்ப தலைவி  ,வசிப்பது சென்னையில் ,எனக்கு இரண்டு மகன்கள் ,எனது கணவர் ஒரு டாக்டர் .

 

Chillzee.in - உங்க கதைகள் பற்றிய உங்கள் குடும்பத்தினரின் கருத்துக்கள் எப்படி இருக்கு?

 

சித்ரா - நான் கதைகள் எழுதுவதை பற்றி ,என் குடும்பம் பெரிதாக  கண்டு கொள்வதில்லை ,இரவில் விழித்திருந்து  டைப்  செய்யும் போது  ,மூத்த மகன் கிண்டல் செய்து ,உறங்க அனுப்புவது உண்டு ,இளையவன் தான் எழுதுமா  என்று என் பக்கம் நிற்பவன் என் ,கணவர் 'என் செல்ல சென்னை ' என்ற சிறுகதையை மட்டும் படித்திருக்கிறார் ,அதிலும் அந்த முதிய தம்பதி இறந்தது அவருக்கு பிடிக்கவில்லை

என் பெற்றோர்களுக்கு .நான் எழுதுவதில் பெருமை உண்டு .

 

Chillzee.in - எங்களுக்காக நேரம் ஒதுக்கி இந்த கலந்துரையாடலில் பங்குப் பெற்றதற்கு மிக்க நன்றி சித்ரா.

உங்களுடன் நடத்திய இந்த உரையாடல் எங்களுக்கு மிகவும் புத்துணர்வை கொடுத்தது.  அதை வைத்தே நீங்க என்ன மாதரியான interesting personality என்று புரிந்துக் கொள்ள முடிகிறது. கடவுளின் அருளால் எப்போதும் இதே போல இருக்க வாழ்த்துக்கள்.

அதே போல நீங்கள் இன்னும் பல கதைகள் எழுதவும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

சித்ரா - நன்றி ,என் கதைகள் பற்றியும் ,அதன் பின்னணி  பற்றியும் ,உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த சில்  டீமுக்கு நன்றி  ,ஹாப்பி  விநாயக சதுர்த்தி .

 

Chillzee.in - நன்றி வணக்கம்

 

சித்ராவின் பங்களிப்புகள்:

அனைத்து பங்களிப்புகளையும் படிக்க, https://www.chillzee.in/chillzee-contributors/194:chitra பக்கம் செல்லுங்கள்.

நிறைவுப்பெற்ற கதைகள் படிக்க https://www.chillzee.in/stories/chillzee-completed-stories-by-authors-01#chitra பக்கம் செல்லுங்கள்.

 

{kunena_discuss:656} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.